Admin•••1
avatar
on July 26th 2012, 3:22 pm
வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

அதன் 64 உடலுறவு நிலைகள் (positions) இந்தியாவின் பன்மையான காமம் பற்றிய அறிவு என்கிற வகையில் உலகப் பிரசித்தி பெற்றது. காமசூத்ரா என்கிற பெயரிலேயே தீபா மேத்தா என்கிற பெண் இயக்குநர் செக்ஸ் படம் எடுத்து பெயரும், துட்டும் சம்பாதித்துடன் சரித்திரமும் படைத்தார்.

இப்போது பெண்ணி’யம்’ பொங்கிப் பெருகும் உலகளாவிய காலகட்டம். எங்கும், எதிலும் பெண்ணியம்.. அதாங்க Feminism.

ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, ராக்கெட்டில் விண்வெளிக்குப் போவதுவரை பெண்ணியம் பெண்களுக்கு உலகில் அவர்கள் இதுவரை காலடி வைத்திராத இடங்களில் தடம் பதிக்க உதவியிருக்கிறது. கூடவே பார்களிலும் காலடித் தடம் பதிக்கிறார்கள் பெண்கள் இன்று.

அப்படி அஸ்ஸாமில் கடந்த வாரம் பாரில் தனது தோழியுடன் சென்று பிறந்த நாள் பார்ட்டியில் சரக்கடித்துவிட்டு, க்ரெடிட் கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட வழியில்லாமல் பார் ஊழியர்களால் பாருக்கு வெளியே தள்ளப்பட்ட பேஷன் டிசைன் படிக்கும் மாணவி, கூட வந்த தன் ஆண் நண்பர்களைக் குற்றம் சொல்லி சண்டையிட, போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாற, அப்போது சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வேறு ஆண்கள் கும்பலொன்று இதைப் பயன்படுத்தி சண்டையின் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை தொடுவது, கட்டிப் பிடிப்பது, உடையைக் கழற்றுவது என்று அத்து மீற ஆரம்பிக்க, இந்தப் பெண்ணுடன் வந்த தோழர்கள் எஸ்கேப் ஆகிவிட, இரவு 10 மணிக்கு மேல் நடுரோட்டில் நடைபெறும் இந்த அத்து மீறலை யாரும் கண்டிக்கவில்லை. கடைசியில் வழியில் சென்ற ஒரு போலீஸ்காரர்தான் அந்தப் பெண்ணை அந்த ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றினார். மறுநாள் முதல் வழக்கம் போல பத்திரிக்கைகள், மாதர் சங்கங்கள், என்ஜிஓக்கள், சுதந்திர விரும்பிகள்(குடிப்பது என் உரிமை?!) எல்லோரும் கண்டனம் தெரிவிக்க போலீஸ் அந்த ரவுடி ஆண்களை வேட்டையாடியது. அஸ்ஸாம் முதல்வர் நடவடிக்கை எடுக்க ஆணை பிறத்திருக்கிறார்.

நீங்கள் பெண்ணியம் பேசலாம்; உலகில் பெண்தான் மேலாக இருந்தாள்.. ஆதிக் குடும்பத்தில் தாயாதிக்கம்.. இங்கே ஆணாதிக்கம்.. என்று பேசலாம்.. ஆனால் மதுவின் உட்சபட்சத்தில் உங்கள் மூளையில் (அடிப்படையில்)மிருகத்தனமான  ஆறாம் அறிவுக்கு கட்டுப்படாத வன்முறையும், வெறியும் மட்டுமே மிஞ்சும். அதை எந்தப் படிப்பும், நாகரிகமும் கட்டுப்படுத்தி விட இயலாது என்பதை மதுவின் பிடியிலிருந்து விடுபட்ட அடுத்த நாள் உணர்வீர்கள். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும்.

மதுவும் ஆணென்றும் பெண்ணென்றும் பாராது சரி நிகர் சமமாக மனிதர்களை மிருகங்களாக்கும். அப்போது செய்யும் பாவங்களில் ஆண் பெண் வித்தியாசமே இருப்பதில்லை.

ஜூனியர் விகடனில் சஞ்சீவ் குமார் என்பவர் தற்போது எழுதி வரும் ‘மயக்கம் என்ன’ என்கிற தொடரைப் படியுங்கள்; நிதானத்தில் இருக்கும் போது படியுங்கள். குடியை நீங்கள் நிறுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. குடித்தால் ‘பெர்மான்ஸ்’ கூடும் என்பது மூட நம்பிக்கையே மாறாக உணர்ச்சி மரத்துப் போகும் என்பதே உண்மை.

சரி. காமசூத்ராவுக்கும் இதுக்கும் என்னைய்யா சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஸாரி..சம உரிமை பற்றி பேச நேரும் போது இப்படி திசை திரும்பிவிட்டது.

“வாத்சயாயனர் எழுதிய காமசூத்ரா ஆண்களுக்கானது மட்டுமே. அது ஆண்களின் நோக்கிலே எழுதப்பட்டது. பெண்களுக்கு அதில் தகவல்கள் இல்லை. அது ஆணாதிக்கம் இருந்த உலகில் ஆணால் ஆண்களுக்காக பெண்களை வெல்வது எப்படி என்று எழுதப்பட்ட புத்தகம். இப்போது பெண்களின் பார்வையில் காமசூத்ராவை நான் எழுதியிருக்கிறேன்.” – இப்படிச் சொல்பவர் கேரளாவைச் சேர்ந்த ஐம்பது வயது பெண் எழுத்தாளர் கே.ஆர். இந்திரா என்னும் அம்மணி.

கேரளாவின் திரிச்சூரைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகம் தான் ‘ஸ்த்ரீய்னா காமசூத்ரா’ – பெண்களுக்கான காமசூத்திர அறிவுரைகள்.

இதில் இவர் வாத்சயாயனரின் 64 பொசிசன்களில் நான்கு மட்டுமே பெண்களுக்கு நன்மையானது என்கிறார். ஆண் மேலே, பெண் மேலே, பெண் ஆணின் மடிமேலே மற்றும் ஆணும் பெண்ணும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பது என்பவையே அவை.

பெண்களுக்கு இவர் சொல்லும் அறிவுரைகளில் சில..

-    பெண் தன்னை விட இளமையான ஆணை உறவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.

-    பெண்ணுக்கு சில சந்தர்ப்பங்களில் திருமணமான ஆணுடன் உறவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவை எதிரிகளை வீழ்த்த, சொத்துக்களைப் பெற, ரகசியங்களைப் பெற அல்லது மறைக்க, காரியம் சாதிக்க மற்றும் துரோகம் செய்யும் கணவனை பழிக்குப் பழி வாங்க.(இவை எல்லாமே நாம் சமூகத்தில் கண்கூடாக பார்த்து வரும் காரணங்கள்).

-    பெண் ஆசைப் படத் தகுதியான ஆண் தகுதியானவனாக, அறிவு சார்ந்தவனாகவும், அசிங்கமாயில்லாமல், ஏழையாகவோ நோயாளியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.

வாத்சயாயனரின் தவறுகளாக இவர் கூறுவது என்னவெனில்..

-    ஆண்களின் உடலுறவு வயது 16 முதல் 70 வரை என்று கூறும் வாத்சயாயனர் பெண்களின் வயது பற்றி ஏன் கூறவில்லை ?

-    வாத்சயாயனர் பெண்கள் உச்சகட்டத்தை அடையும் தன்மையற்றவர்கள் என்று தவறாக நம்பினார்.

தன்னுடையை ஆராய்ச்சிப் படிப்புக்காக பெண்கள் பற்றிய சர்வே எடுத்த இவர் அதிலிருந்து கேரளப் பெண்களைப் பற்றி பின்வரும் முடிவுகளை கூறுகிறார்.

-    சர்வேயில் பெரும்பாலான பெண்கள் 'ஆண் மேலே' என்கிற உடலுறவு நிலையையே விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆணாதிக்கத்திற்கு இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும்? என்று கேட்கிறார்.

-    மிகவும் நல்ல நிலையில் வசதியாகவும், வாய்ப்பும் உள்ள மலையாளப் பெண்கள் கூட தங்களது காம ஆசைகளை விரும்பியபடி நிறைவேற்றிக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களாகவே உள்ளனர் (??!!).

ஒருவயது கைக் குழந்தையாக இருந்த மகனோடு கணவனை விட்டு விலகி வந்து கணவனை வேண்டாம் என்று விவாகரத்து செய்த இந்திராவின் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். இவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரு பெண் எப்போது ஆணுடன் உடலுறுவு கொள்ள சம்மதிக்க வேண்டும் ? அதற்கு இவர் கூறுவது..

ஒன்று. அந்த ஆணின் மீது காதலுற்றிருக்கும் போது. ஆனால் கண்மூடித்தனமான காதலால் ஏமாந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு. பணம், பொருள் போன்ற லாபங்களுக்காக. ஆனால் முக்கியமாக அவனிடமிருந்து பெண் வேண்டிய பொருளை பெற்ற பின்னரே அவனுடன் உடலுறுவு கொள்ள வேண்டும்.

அதே போல ஆண்களுக்குச் சாதகமாக வாத்சயாயனர் சொல்லும் வயது குறைவான பெண்ணை மணமுடித்தல், ஒரே சாதியில் மணம், வரதட்சிணை வாங்குதல், திருமணத்திற்குப் பெண் பெண்ணை ஆண் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் இவை எல்லாம் தலை கீழாக, அதாவது பெண்ணுக்குச் சார்பாக நடக்க வேண்டும் என்கிறார் இவர் (சபாஷ்! சரியான போட்டி!!). உதாரணமாக திருமணத்திற்குப் பின் பெண்ணுடைய வீட்டில் வந்து ஆண் வந்து தங்கவேண்டும்.

இவை எல்லாவற்றையும் நவயுக புரட்சிப் பெண்ணாகக் கூறிய இந்திரா அவர்கள் கட்டுக்கடங்கா செக்ஸ்(free sex – ப்ரீ செக்ஸ்) மற்றும் சேர்ந்து வாழ்தல் போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்.

ஆணுக்குத் தேவை பெண்ணுடன் எப்படியாவது உடலுறுவு கொள்வது. அதற்கு வசதியாக இப்படிப்பட்ட கருத்துக்களை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்.

மாறாக ப்ரீ செக்ஸ் நடவடிக்கைகளில் குழந்தை பிறப்பு போன்றவை தவறுதலாக நடந்து விட்டால் அது பெண்ணுக்கு பெருமளவு பாதகமாக அமைகிறது என்கிறார் இவர் (பேசாம பெண்கள் இனிமேல் எப்பவுமே குழந்தையே பெறாமல் இருக்க ஒரு வழி கண்டு புடுச்சீங்கன்னா ஒரு நூறு வருசத்துல பூமி பூரா வெறும் புல் பூண்டு மட்டுமே மொளைச்சி நிக்கிறமாதிரி பண்ணிப் புட்டு எல்லாம் மேல போயிடலாம்.. இல்லாட்டி குழந்தை பெத்துக்கறதுக்கும் மிஷின் கண்டுபிடிச்சிட்டா என்ன..? செம ஐடியா!!)

இதெல்லாம் சும்மா மேலாப்புல நூல் அறிமுகம் தான். இன்னும் விளக்கமாக படிக்கனும்னா டி.சி. புக்ஸ் வெளியிட்டிருக்கிற 'ஸ்த்ரீய்னா காமசூத்ரா' என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஸ்த்ரீய்னா காமசூத்ரா

From எழுத்ததிகாரன்

Topic ID: 9

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...