Admin•••1
avatar
on December 23rd 2016, 12:34 am
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தின் விளைவாக பல குழப்பங்கள், பிரச்சினைகள், கலவரங்கள் என்று நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது.

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கும் வழிகளை கையாளாமல் அவசரகதியில் பல நடவடிக்கைகளை கையாண்டு ஏதேதோ சமாளிப்புகளுக்கு மத்தியில் தத்தகா பித்தக்கா என்று தட்டுத்தடுமாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...

அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.

இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற கதையை காப்பியடித்து புரட்சி செய்த மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.

காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!

இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் ஒரு சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????

இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!

Message reputation : 83% (6 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்!

From எழுத்ததிகாரன்

Topic ID: 855

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...