Admin•••1
avatar
on May 7th 2016, 12:51 pm
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 72 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

திமுக தேர்தல் அறிக்கை 2016: முழு அறிக்கை படிக்க/தரவிறக்கம் செய்ய

தேர்தல் அறிக்கை விவரம்:

1. வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்கைகள் கொண்டு வரப்படும்.

2. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

3. சிறு, குறு விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

4. வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

5. வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்யப்படும்.

6. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

7. கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டி வாடகை ரூ. 1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.

8. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.

9. கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

10. ஊரக வேலைவாய்ப்பு கூலி ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.

11. கூடுதலாக சேர்க்கப்படும் 50 நாட்கள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

12. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

13. தொடக்கப்பள்ளி சத்துணவுத்திட்டத்தில் பால் சேர்க்கப்படும்

14. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

15. மீனவ சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்; மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

16. நியாய விலைக்கடைகள் விடுமுறையின்றி வாரம் முழுவதும் செயல்படும்.

17. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 பணியிடங்கள் நிரப்படும்.

18. லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

19. பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.

20. பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்து திரும்பப்பெறப்படும்.

21. மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

22. டாஸ்மாக் நிறுவனங்கள் கலைக்கப்படும். ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும்.

23. 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.

24. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

25. மதுவிலக்கை அமல்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.

26. ஆவின் பாலின் விலை குறைக்கப்படும்.

27. வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

திமுக தேர்தல் அறிக்கை 2016 முழு விவரம்

From எழுத்ததிகாரன்

Topic ID: 800

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...