நடத்துனர்•••1
avatar
on June 7th 2014, 9:36 pm
மேஷம்

பொது: உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். மனதில் புது தெம்பு பிறக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடன் பிறப்புகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவர் பாசமாக இருப்பார். குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகப் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

நடத்துனர்•••2
avatar
on June 7th 2014, 9:37 pm
ரிஷபம்

பொது: நீண்ட காலம் சந்திக்காத நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பண வரவு தாமதமாகலாம். தீய பழக்ககங்களில் இருந்து விடுபடக்கூடும்.

பெண்களுக்கு: சேமிப்பில் கவனம் செல்லும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் பிரச்சனை இன்றி நடக்கும்.

நடத்துனர்•••3
avatar
on June 7th 2014, 9:38 pm
மிதுனம்

பொது: வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் கடும் முயற்சிக்கு பிறகே வெற்றி பெறும். உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

பெண்களுக்கு: குழந்தைகளின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். உங்களின் ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள்.

நடத்துனர்•••4
avatar
on June 7th 2014, 9:40 pm
கடகம்

பொது: உற்சாகமாக காணப்படுவீர்கள். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம். ஆன்மீக பலம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லவும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். கடன் தொல்லை இருக்காது. பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். நீண்டநாள் பிரச்சனை ஒன்று தீரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. வியாபாரிகள் அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

நடத்துனர்•••5
avatar
on June 7th 2014, 9:41 pm
சிம்மம்

பொது: சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு: உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். அதனால் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

நடத்துனர்•••6
avatar
on June 7th 2014, 9:42 pm
கன்னி

பொது: எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்வீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். உறவினர்கள் தானாக வந்து உதவி செய்வார்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். கணவர் அன்பாக இருப்பார். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அலுவலக சூழல் மாறும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

நடத்துனர்•••7
avatar
on June 7th 2014, 9:43 pm
துலாம்

பொது: பிறருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் அலைச்சல் ஏற்படலாம். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யக்கூடும்.

நடத்துனர்•••8
avatar
on June 7th 2014, 9:45 pm
விருச்சிகம்

பொது: எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும்.

பெண்களுக்கு: பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். வாக்கு கொடுத்துவிட்டு அல்லாட வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வேலையை புரிந்து கொண்டு நிதானமாக செய்யவும். வியாபாரிகள் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

நடத்துனர்•••9
avatar
on June 7th 2014, 9:46 pm
தனுசு

பொது: எந்த ஒரு காரியத்தையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். பண வரவு அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

பெண்களுக்கு: யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கணவரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். குடும்ப ஒற்றுமையை காக்க பாடுபடுவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி செய்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் இருந்த சிரமங்கள் தீரும். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகள் எதிரிகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

நடத்துனர்•••10
avatar
on June 7th 2014, 9:47 pm
மகரம்

பொது: கடன் தொல்லைகள் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் கிடைத்து மகிழக்கூடும்.

பெண்களுக்கு: வீட்டுக்குத் தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். யாரைப் பற்றியும் குறைகூற வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

நடத்துனர்•••11
avatar
on June 7th 2014, 9:48 pm
கும்பம்

பொது: சிலர் வீடு, மனை வாங்கி மகிழக்கூடும். சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

வேலை பார்ப்போருக்கு: எந்த வேலையையும் பிறகு செய்யலாம் என்று இருக்க வேண்டாம். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவிருக்காது. வியாபாரிகள் கூட்டாளிகளின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தல் நல்லது.

நடத்துனர்•••12
avatar
on June 7th 2014, 9:50 pm
மீனம்

பொது: தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். உடன் பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அடைந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வருமானம் திருப்திகரமாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்காது.

•••13
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

இந்த வார ராசிபலன்(6.6.2014 முதல் 12.6.2014)

From எழுத்ததிகாரன்

Topic ID: 727

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...