Admin•••1
avatar
on May 30th 2014, 3:14 pm
மேஷம்

பொது: பண வரவுக்கு குறைவிருக்காது. உங்கள் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். மனதில் ஏதோ ஒருவித குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்ப ஒற்றுமையை காக்க பாடுபடுவீர்கள். கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு பண வரவு தாமதமாகலாம்.

Admin•••2
avatar
on May 30th 2014, 3:16 pm
ரிஷபம்

பொது: தக்க நபர்களின் உதவியோடு உங்கள் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிரிகளின் பலம் குறையும்.

பெண்களுக்கு: குடும்பத்தாரிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். கணவர் பாசமாக இருப்பார். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

Admin•••3
avatar
on May 30th 2014, 3:17 pm
மிதுனம்

பொது: சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். புனித பயணம் சென்று வருவீர்கள். நல்ல செய்தி உங்களை தேடி வந்து மகிழ்விக்கும். திறமை மேம்படும்.

பெண்களுக்கு: குழந்தைகள் அதிக மதிப்பெண் வாங்குவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் மீது பாசமாக இருப்பீர்கள். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிக்கல் இன்றி நடக்கும்.

Admin•••4
avatar
on May 30th 2014, 3:18 pm
கடகம்

பொது: பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பத்தார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சக ஊழியர்களிடம் உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்வீர்கள்.

Admin•••5
avatar
on May 30th 2014, 3:19 pm
சிம்மம்

பொது: சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகள் விலகிவிடுவார்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: எதிலும் நிதானம் தேவை. கணவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களால் வேலை பளு குறையும். உங்கள் பொறுப்பில் உள்ள பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.

Admin•••6
avatar
on May 30th 2014, 3:20 pm
கன்னி

பொது: சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர் ஒருவருடன் இருந்து வந்த பிரச்சனை பெரியோர்களின் தலையீட்டால் தீரும். திட்டமிட்ட சுப காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் ரகசியங்களை கூற வேண்டாம். வியாபாரிகளுக்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்படலாம்.

Admin•••7
avatar
on May 30th 2014, 3:21 pm
துலாம்

பொது: சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கடினமான வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு: மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மகிழ்வீர்கள். மனக் குழப்பங்கள் தீரும்.

வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகள் லாபத்தை அள்ளுவர்.

Admin•••8
avatar
on May 30th 2014, 3:22 pm
விருச்சிகம்

பொது: ஆன்மீக பலம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் தானாக வந்து உதவி செய்வார்கள். முக்கிய ஒப்பந்தங்களில் அவசரப்பட்டு கையெழுத்திட வேண்டாம்.

பெண்களுக்கு: கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். யாரையும் துச்சமாக நினைத்து பேச வேண்டாம். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி முக்கிய வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.

Admin•••9
avatar
on May 30th 2014, 3:23 pm
தனுசு

பொது: யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். தடைகளைத் தாண்டி உங்களின் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு: இல்லதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவனம் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடன்கள் வசூலாகும்.

Admin•••10
avatar
on May 30th 2014, 3:24 pm
மகரம்

பொது: உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். வெற்றி மீது வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும்.

பெண்களுக்கு: தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பழைய கடன்பாக்கிகளை திருப்பிக் கொடுப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். சக ஊழியர்களை பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரிகள் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும்.

Admin•••11
avatar
on May 30th 2014, 3:27 pm
கும்பம்

பொது: உற்சாகமாக காணப்படுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

பெண்களுக்கு: ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வீட்டுக்குத் தேவையான அதிநவீன பொருட்கள் வாங்குவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலக சூழலில் மாற்றம் ஏற்படும். வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

Admin•••12
avatar
on May 30th 2014, 3:28 pm
மீனம்

பொது: அலைச்சல் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். வாக்கு கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற அல்லாட வேண்டாம்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடையக்கூடும். திடீர் செலவுகள் ஏற்படும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சி செய்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகள் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

•••13
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

இந்த வார ராசி பலன்(30.5.2014 முதல் 5.6.2014 வரை)

From எழுத்ததிகாரன்

Topic ID: 623

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...