Admin•••1
avatar
on September 19th 2012, 12:25 am

அன்பு நண்பர்களே...

அருமைப் பெரியோர்களே...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெசல் வாழ்த்துக்கள்!

என்னய்யா... ரொம்ப சோகமா இருக்கீங்க?

உங்களோட கருத்துக் களத்துல உறுப்பினர்கள் அதிகமா இல்லையா?...

மற்ற தளங்களில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்களா?...

அடிக்கடி அதை சொல்லி பெருமைப் பட்டுக்கறாங்களா? உங்களை வெருபேத்துராங்களா?

அட இதுக்கெல்லாமா வருத்தப்படுறது?...

என்கிட்டக் கேட்டிருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேனா?

அது ஒன்னும் அவ்வளவு பிரமாதம் இல்லையே...

நீங்களே பல உறுப்பினர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தானே?...

அட என்னய்யா?.... மறுபடியும் சோகமா இருக்கீங்க?...

நாமலே உறுப்பினர்களை உருவாக்குரதுக்கு அவ்வளவு இமெயில் முகவரிகளை உருவாக்கனுமேன்னு யோசிக்கிறீங்களா?...

அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேணாமுங்க...

கவலையை விடுங்க... ரெண்டு இ-மெயில் முகவரியை வச்சிக்கிட்டு பல உறுப்பினர்களை உருவாக்கலாமே... இது தெரியாதா உங்களுக்கு?

எப்படின்னு சொன்றேன் கவனமா கேளுங்கைய்யா...

முதல்ல ஒரு இமெயில் முகவரியில ஒரு உறுப்பினரை உருவாக்குங்க...

அடுத்து இன்னொரு இமெயில் முகவரில இருந்து இன்னொரு உறுப்பினரை உருவாக்குங்க...

அப்பறம் கண்ட்ரோல் பேனல் போயி, இரண்டாவது உறுப்பினரோட இமெயில் முகவரியை நீக்கிட்டு, முதல் உறுப்பினரோட இமெயில் முகவரியையே இரண்டாவது உறுப்பினருக்கும் கொடுத்துடுங்க...

(இ-மெயில் ஆக்டிவேஷன் செய்ய சிரமப்பட்டால், AUTOMATIC ACTIVATION என்பதை செயல்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் REGISTER செய்தவுடன் உறுப்பினர் லாகின் செய்யமுடியும். இமெயிலில் சென்று ஆக்டிவேஷன் செய்யத்தேவை இல்லை.)

அப்புறம் மறுபடியும் இரண்டாவது இமெயில் முகவரியை வச்சி இன்னொரு உறுப்பினரை உருவாக்குங்க....

முதல்ல மாதரியே இமெயில் முகவரியை மட்டும் மாத்திடுங்க....

மறுபடியும் ஒரு உறுப்பினரை உருவாக்குங்க...

மறுபடியும் இமெயில் முகவரியை மாத்துங்க.....

உறுப்பினரை உருவாக்குங்க....

இமெயில் முகவரியை மாத்துங்க....

இப்படி நீங்க எத்தனை உறுப்பினர்களை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.... எல்லா உறுப்பினர்களுக்கும் முதல் இமெயில் முகவரியான ஒரே முகவரியே இருக்கும்....

இதெல்லாம் யாரால செய்ய முடியும் தெரியுமா? ADMIN என்பவரால மட்டுமே செய்ய முடியும்! சில தளங்களில் யாருக்காவது ADMIN என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால். அவரால் இப்படி உறுப்பினரை உருவாக்க முடியும். அவ்வாறு முடியவில்லை என்றால்? அவர் ADMIN அல்ல வெறும் மாடரேட்டராக மட்டுமே உள்ளார் என்று பொருள்!

அதே மாதரி, அட்மின் தொடர்புக்கு என்று ஒரு LINK கொடுக்கப்பட்டிருந்தால் அதில் சென்று உரையாடாதீர்கள். ஏனென்றால் அதுவும் ஒரு பதிவாகவே இடம்பெறும். அதை ADMIN மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட அனைவராலும் படிக்க முடியும்! ஒரு ADMIN-ஐப் பற்றி குறை கூறுவதாக நினைத்து இன்னொரு ADMIN-க்கு செய்தி அனுப்பி விடாதீர்கள்.

அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேணாமுங்க....

மேலும், வேறு ஒருவர் ADMIN ஆக இருக்கும் பட்சத்தில் அவரால் அந்தத் தளத்தை ஹேக் செய்துவிட முடியும்! எனவே யாரும் இன்னொருவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்க மாட்டார்கள்! அப்படிக் கொடுத்திருந்தால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து ADMIN-னும் ஒருவராகவே இருக்க முடியும்!

வேணும்ன்னா, நிறைய தளத்துல உள்ள உறுப்பினர்களுக்கு இமெயில் செஞ்சுப் பாருங்க...

எல்லா உறுப்பினர்களுக்கும் இமெயில் அனுப்பும் வசதி மறுக்கப் பட்டிருக்கும்!

இல்லைன்னா, நமக்கு Reply வரவே வராது...

அப்படி வந்ததுன்னா அது எல்லாம் ஒரே முகவரியாகவே இருக்கும்!(ஒரு சில கில்லாடிகள் வேறுவேறு இமெயில் முகவரியையும் சலிக்காம உருவாக்கியிருப்பார்கள். ஏன்னா இமெயில் உருவாக்குறதுதான் இலவசமாச்சே...)

பரிசோதித்துப் பார்ப்போமா?...


விருச்சிக ரா...சி.... நேயர்களே!...

நல்ல பயனுள்ள கட்டுரையெல்லாம் போடுவீங்க...

இனிமேல அதிகமான உருப்பினர்களை எல்லாம் உங்க தளத்துல உருவாக்கலாம்....

ரொம்ப பேருக்கு வயித்துல புளியை கரைக்க செய்யலாம்...

மொத்தத்துல....

இன்னைக்கு நாள் ரொம்ப அமோ....கமா... இருக்கும்!

இது, பாரம் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு வசதி. நிறைய நண்பர்களுக்கு இந்த விவரம் தெரியாது என்பதால் விளக்கம் கொடுத்துள்ளேன். நண்பர்கள் பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள்.

இதுல ஒரு சிக்கலும் இருக்கு நண்பர்களே...
அதாவது ஒரு ADMIN இப்படி உறுப்பினர்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், தினமும் பதிவுகள் செய்து கொண்டிருந்தாலும் உங்கள் தளத்திற்கான தரப்புள்ளிகள் குறைந்து கொண்டே இருக்கும்.

அய்யய்யோ ஆகாதுங்க... அது மட்டும் வேணாமுங்க!

அதாவது 42,000 புள்ளிகளில் இருந்து, ஒரேமாதத்தில் 32,000 புள்ளிகளாகக் கூட குறைந்துவிடும். இப்பப் புரிஞ்சிடுச்சா இந்த வேலையை யார் செய்து கொண்டிருப்பது என்று?...

ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன்.... அவ்வளவு உறுப்பினர், இவ்வளவு உறுப்பினர்
என்று புலம்புறீங்களே... இவ்வளவு உறுப்பினரை சேர்த்துகிட்டு என்ன கட்சியா
ஆரம்பிக்கப் போறீங்க?... அப்படி நீங்க கட்சி, கிட்சி ஆரம்பிச்சுட்டாலும்...
வெளங்கின மாதரித்தான்!

இங்கே இப்போது இருக்கும் 27 உறுப்பினர்களும் நான் உருவாக்கிய உறுப்பினர்கள் தான்'னு சொன்னா மற்ற உறுப்பினர்கள் எல்லாம் என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க...


By,
எழுத்ததிகாரன்.

(விவரம் தெரிந்தும் அதிக உறுப்பினர்களை உருவாக்காத KT. குஞ்சுமோன். அதாவது 'ஜெண்டில்மேன்'னு சொல்ல வரேன்...)

Message reputation : 100% (1 vote)
Permit Member•••2
avatar
on September 21st 2012, 6:08 pm
சும்மா பிரிச்சு மேயிரிங்க போல இருக்கே...
நிறைய விசயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறீர்கள். நன்றி. இந்தத் துணிச்சலும் தைரியமும் வேறு யாருக்கும் வராது என்பது எனது கணிப்பு. ஏனென்றால், இந்த சூட்சுமத்தை வைத்து தங்களின் தளத்தில் அதிகமான உறுப்பினர்களை உருவாக்கவே சில மூடர்கள் நினைப்பார்கள் ஆனால், நீங்கள் இதை வெளிக்காட்டுவதன் மூலம் சில மூடர்களை எச்சரிக்கவும் செய்துள்ளீர்கள்.

நடத்துனர்•••3
avatar
on November 10th 2012, 1:34 am
இதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஒரே நேரத்தில் பல உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்களே... அதை என்னவென்று சொல்வது? இதிலிருந்தே நீங்கள் கூறியிருப்பதில் அவ்வளவு உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. எழுத்ததிகாரன்கிட்ட கேட்டு ஒரு விளக்கமான பதிவைப் போட சொல்லுங்க அதிகாரன்.

எடுத்துக்குடுத்தது போதுமா?...
அடுத்தவன் மனசுல என்ன நினைக்கிறான்னு சொல்லக்கூடிய உங்களுக்கு. இது புரியாமலா இருக்கும்.......

•••4
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

அய்யய்யோ ஆகாதுங்க... அது மட்டும் வேணாமுங்க! (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்)

From எழுத்ததிகாரன்

Topic ID: 535

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...