அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நமது "எழுத்ததிகாரன்" தளம் தொடங்கப்பட்டு குறைந்த நாட்களே ஆகின்றன. இந்த குறைந்த நாட்களில் ஒரே நேரத்தில் 37 பார்வையாளர்கள் இணைந்திருந்து நமது தளத்தினை சிறப்பித்துள்ளீர்கள். எனவே வருகை தந்து நமது தளத்தை நம்பர் 1 ஆக சிறப்பித்தமைக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்!
அதாவது 37 _ 3 + 7 = 10 = 1
எனவே இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக "அந்தப்பார்வை படைப்புக்களத்தில்" அமைக்கப்பட்டுள்ளது போல நமது தளத்திலும் உறுப்பினர் அல்லாத அனைவரும் பதிவிடும் வசதியை அளிக்கின்றோம்.
நண்பர்கள் மற்றும் வாசகர்கள் நமது தளத்தின் குறைகளை எடுத்துரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லோரும் நிறைகளைத்தானே சொல்லக் கேட்பார்கள், ஆனால் நாங்கள் குறைகளை சொல்லுமாறு கேட்கின்றோமே என்று நினைக்கின்றீர்களா? நியாயம் தான். ஆனால், நாங்கள் செய்வதும், எழுதுவதும் நல்லவை என்று எங்களுக்குத் தெரியும். தான் செய்வது நல்லதா என்று தெரியாமல் ஒருவர் எப்படி ஒன்றை செய்ய முடியும்?
ஆனால், நாங்கள் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் அல்லவா? அது போன்ற குறைகளைத்தான் நாங்கள் எதிர்பார்கின்றோம். அதுதான் எங்களுக்குத் தெரியாத ஒன்று.
எனவே மனம் திறந்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தலாம். உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் தரமாகவும், சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்குமேயானால் கண்டிப்பாக நாங்கள் எங்களைத் திருத்திக் கொள்வோம்.
யாருமே கருத்து சொல்லவில்லை என்றால்? நாங்கள் எழுதுவது வாசகர்களுக்குப் பிடித்திருக்கின்றது என்று முடிவு செய்து தொடர்வோம்... எனவே, பார்வையிடும் நண்பர்கள் ஏதாவது குறை இருந்தால் கூறிச் செல்லுங்கள்.
காசா? பணமா? ஒருவரைப் பாராட்டுவது தான் கடினம். ஆனால், குறை?... கண்டிப்பாக ஏதாவது சொல்லமுடியும் அல்லவா? தயவு செய்து அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். திருத்திக் கொள்கின்றோம்!
எதிர்கால சந்ததிக்கு எதையாவது புதிதாக சொல்லிச்செல்ல வேண்டும் என்று நினைத்து தினம் தினம் யோசித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரை ஒன்றும் சரியாக யோசிக்கத் தெரியவில்லை. இப்போது தானே எழுதிப் பழகுகின்றோம். எனவே எங்களை முறைப்படுத்தி வழி நடத்த வாருங்கள்...
(நியாயமான, தரமான கருத்துக்கள் கொண்ட, எங்களின் குறைகளை எடுத்துரைக்கும் விமர்சனங்கள் பாராட்டப்படும்)
யார் வேண்டுமானாலும் விமர்சனங்களை பதிவு செய்யலாம்! விமர்சனங்களுக்கு பின்னூட்டமிடலாம். புதிய பதிவுகள் தொடங்கலாம். உறுப்பினராகவேண்டிய கட்டாயம் இல்லை.
அன்புடன்,
எழுத்ததிகாரன்.