Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
26/8/2012, 2:26 am
நயன்தாராவுக்கும் எனக்கும் காதல் இல்லை! - ஆர்யா 24-nay10
சென்னை: நயன்தாராவுக்கும் எனக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான்... காதல் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ஆர்யா.

பிரபு தேவா - நயன்தாரா பிரிந்துவிட்டதால், இப்போது நயன்தாராவுடன் ஆர்யாவை இணைத்து கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நல்ல தொடர்பில் உள்ளனர்.

பிரபுதேவாவைப் பிரிந்து சென்னை திரும்பிய நயன்தாராவை முதல் ஆளாக வரவேற்றவர் ஆர்யா. அவரது புதுவீட்டை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தவர் நயன்தான். நயன்தாராவை ‘கேக்' வெட்ட வைத்து விருந்தே கொடுத்தார் ஆர்யா. அத்துடன் மீண்டும் நடிக்கும்படி அவர்தான் அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. புதுப்படங்களில் நயன்தாராவை அவர்தான் பரிந்துரைக்கிறாராம். முக்கியமாக அஜீத்துடன் தான் நடிக்கும் படத்தில் நயன்தாரா இடம்பெற அவர்தான் காரணம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ஆர்யா கூறுகையில், "இதெல்லாம் ரொம்ப ஓவர்... நயன்தாரா திறமையான நடிகை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஒன்றாக நடித்தோம். எங்களைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நயன்தாரா எனக்கு நல்ல தோழிதான். காதலெல்லாம் கிடையாது.

புதுப்படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு நான் சிபாரிசு செய்வதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர்.
கதாநாயகிகளை தேர்வு செய்வது இயக்குனர்கள் தான். அதிலெல்லாம் நான் தலையிடுவதே இல்லை," என்றார்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

நயன்தாராவுக்கும் எனக்கும் காதல் இல்லை! - ஆர்யா

From எழுத்ததிகாரன்

Topic ID: 356

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...