Admin•••1
avatar
on July 27th 2012, 7:56 pm
அழகான தோற்றம், அமைதியான நடிப்பு என சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியிருப்பவர் கர்நாடக சங்கீதப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு இவருக்கு இடையில் வந்ததுதான், சில தொடர்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கிறார். இசையோடு நெடுந்தொடரில் கவனம் செலுத்தும் அவரின் சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

ஜெயா டிவியில் “சஹானா’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் சார்தான். “சிந்து பைரவி’ படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நடிக்க வைத்தார் பாலசந்தர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.

அரசி தொடரில் ராதிகாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அந்தத் தொடரில் என்னை கொடுமைப்படுத்துவது போல் வரும் காட்சிகளையெல்லாம் என் மாமியார், என் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்.
மேடை கச்சேரிகள் மக்களின் பார்வையில் நேரடியாக செய்கிறோம். ஆனால் திரையில் அப்படியில்லை. நம்ம மனதிற்குள் ஒரு கேரக்டரை சித்திரிச்சு அதை நடித்து மக்களிடம் டிவியின் மூலமா கொண்டு செல்கிறோம். இரண்டுமே சுலபம் இல்லை. இரண்டிலுமே கஷ்டங்கள் இருக்கின்றன. இரண்டிலுமே முழுமையான கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

என் கணவர், புகுந்த வீட்டு நபர்களும், பிறந்த வீட்டு நபர்களும் எனக்கு ரொம்ப துணையாக இருக்கிறார்கள். அதேபோல் சினிமாத் துறையில் இருந்து நிறைய பேர் உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு கச்சேரிகள் வரும் நாட்களில் டேட்களை மாற்றி கொடுத்து நிறைய ஒத்துழைப்பு தருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
பாக்யராஜ் சாரோட “விளக்குவெச்ச நேரத்துல’, பாலிமர் சேனலில் “மூன்று முகம்’ தொடரில் நடித்துள்ளேன். தற்போது சன் டிவியில் தியாகம் தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறேன். “சஹானா’ சிந்து, “திருப்பாவை’ ரங்கநாயகி, “விளக்குவெச்ச நேரத்துல’ ஞானாம்பிகாவாக, எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித்தவைதான். அதில் ரொம்ப பிடித்தது “சஹானா’ தொடர். ஏன் என்றால் அதுதான் நான் முதன் முதலில் நடித்த தொடர். நடிப்பே தெரியாமல் செய்தது அந்த கேரக்டர்.

அதே மாதிரி எனக்கு அமைந்த கதாபாத்திரங்களின் பெயர்களும் கடவுள் கிருபையால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

இசை, நடிப்பு இரண்டுமே சிரமம்தான்- அனுராதா கிருஷ்ணமூர்த்தி

From எழுத்ததிகாரன்

Topic ID: 35

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...