Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
25/7/2012, 7:01 pm
சென்னை: தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூரில் சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளிப் பேருந்து ஒன்றை பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்!

இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் இருந்து ஒரு மாணவி தவறி விழுந்திருக்கிறாள். இதை அறிந்த உடன் இருந்த மாணவர்கள் சத்தம் போட்டு கத்தியும், ஓட்டுனர் அதை பொருட்படுத்தாமல், நிறுத்தாமல் சென்றிருக்கிறார். பேருந்தில் முழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே சென்றதனால் பொதுமக்கள் என்ன என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றனர்.

பேருந்திற்கு பின்னால் வந்தவர்கள் சம்பவத்தை அறிந்ததனால், இரு சக்கர வாகனத்தில் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தி விசாரித்தபோது "அந்தக் குழந்தை எங்கள் பேருந்தில் இருந்து விழுந்ததில்லை!" என்று ஓட்டுனர் பொறுப்பில்லாமல் பதிலளித்ததும் பொதுமக்களுக்கு ஆத்திரம் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பேருந்தின் இருக்கை அருகில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை அறிந்த பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். சிறுவர்களை ஏற்றி செல்லும் பேருந்தில் இத்தகைய குறைபாடுகளை சரி செய்யாமல் ஓட்டலாமா? என்ற கருத்தைக் கொண்டு, கொந்தளிப்படைந்து பேருந்தில் இருந்து குழந்தைகளை இறக்கிவிட்டு அந்தப் பள்ளிப்பேருந்தை மாலை 4.45 மணிக்கு "முடிச்சூர் அட்டைக்கம்பெனி" அருகில் தீவைத்துக் கொளுத்தினர்!

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் தொடர்ந்து எறிந்த பிறகே தீயணைப்புப் படையினரால் அந்த தீ அணைக்கப் பட்டிருக்கிறது.

பேருந்தில் இருந்து கீழே விழுந்த "சுருதி" என்ற இரண்டாம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

"15 நாட்களுக்கு முன்னர் FC செய்யப்பட்ட பேருந்தில் இந்தக் குறைபாட்டை கவனிக்காமல் இருந்தது ஏன்?"

"இத்தகைய குறைபாடுள்ள பேருந்திற்கு RTO அனுமதி வழங்கியது எப்படி?"

என்பன போன்ற காரணங்களே பொதுமக்களை தீவைக்கத் தூண்டியிருக்கிறது!

பள்ளி நிர்வாகமோ அந்தப் பேருந்து எங்கள் பள்ளிக்கு சொந்தமானதில்லை என்று முற்றிலும் மறுக்கின்றனர்!

இது பற்றி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

"4 நபர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது" என்று ஷேர் ஆட்டோக்களை (சில சமயங்களில்)வழிமறிக்கும் சாலைப் போக்குவரத்துத் துறையினர், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் இது போன்ற பேருந்துகளை பரிசோதிக்காமல் இருந்தது ஏன்?

Admin•••2
avatar
Admin
26/7/2012, 12:41 pm
முடிச்சூர் பள்ளிப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று முடிச்சூர் பகுதியில் கடைகள் அடைப்பு!

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

போக்குவரத்து அதிகாரிகள் மீது உயர்நீதி மன்றம் நேரடி நடவடிக்கை.

சீயோன் பள்ளி நிர்வாகத்தினர் கைது!

பள்ளிப்பேருந்து நடத்துவதின் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்!

சென்னை முடிச்சூரில் பேருந்து தீ வைத்து எரிப்பு! Tamil-Daily-News-Paper_88347589970
சிறுமி ஸ்ருதியின் குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி உயிரிழக்க காரணமானோர் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பழுதான பேருந்தை இயக்க காரணமானோர் மீது கல்வித்துறை, மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சிறுமி இறக்க காரணமான பேருந்தை இயக்க அனுமதித்த, ஆர்.டி.ஓ.வுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை-தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, ஆர்.டி.ஓ.வைக் கண்டித்து இந்திய வாலிபர் சங்கம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

=================================

ஸ்ருதியின் தந்தையும் ஒரு பள்ளி வாகன ஓட்டுனர்!
"நானும் ஒரு பள்ளி வாகன ஓட்டுனர் தான், என் மகள் இறந்த செய்தி கேள்விப் பட்டதும் கூட தான் அழைத்து சென்ற குழந்தைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் கொண்டு சென்று விட்டுவிட்டுதான் வந்தேன்" என்று மிகவும் சோகமுடன் தெரிவித்தார்!

பள்ளி நிர்வாகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்!

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

சென்னை முடிச்சூரில் பேருந்து தீ வைத்து எரிப்பு!

From எழுத்ததிகாரன்

Topic ID: 3

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...