நடத்துனர்•••1
avatar
on August 19th 2012, 4:50 am
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனவர்கள், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ள தேர்தல் செலவுக் கணக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் சராசரியாக, 7 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளதாக, "கணக்கு' காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் கமிஷன் விதிப்படி, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒருவர், 16 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய முடியும். இதை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தனியாக ஒரு தேர்தல் செலவு பார்வையாளரை தேர்தல் கமிஷன் நியமித்தது. தேர்தல் கமிஷன் விதிப்படி, தேர்தலில் வெற்றி பெற்றவர், குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் கட்சியின் மூலமாக செலவுக் கணக்கை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் காட்டியுள்ள தேர்தல் செலவுத் தொகை, அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திஉள்ளது. இதில், தேர்தல் கமிஷன் அனுமதித்த செலவுத் தொகையான, 16 லட்சத்தில், பாதிக்கும் குறைவாகவே செலவிட்டுள்ளதாக, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பலரும் கணக்கு காட்டியுள்ளனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்களில், 150 பேர் வெற்றி பெற்றனர். அக்கட்சி காட்டியுள்ள கணக்குப்படி, எம்.எல்.ஏ.,க்கள் சராசரியாக, 6.15 லட்சம் ரூபாய் மட்டுமே பிரசாரத்தில் செலவிட்டுள்ளனர். ஆண்டு வருவாயிலும், சொத்து மதிப்பிலும் தமிழகத்தில், நம்பர்-1 பணக்கார கட்சியான தி.மு.க., தங்கள் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா, 7 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர்களில் நான்கு பேர் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவுத் தொகை, 16 லட்சத்தில், 90 சதவீதம் தொகை செலவு செய்ததாக கூறியுள்ளனர்.

அ.தி.மு.க., கணக்குப்படி, தற்போது அமைச்சராக உள்ள பச்சைமால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் அதிகமாக செலவிட்டவர். இவர், 15.73 லட்சம் செலவிட்டுள்ளார். குறைந்தபட்ச தொகையாக, 76 ஆயிரம் மட்டுமே செலவிட்டதாக, பெரம்பூர் எம்.எல்.ஏ.,வும், சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவருமான சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில், ஐந்து பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தலா, 9.15 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள, 234 எம்.எல்.ஏ.,க்களும் காட்டியுள்ள தேர்தல் செலவுக் கணக்குப்படி, சராசரியாக ஒரு வேட்பாளர், 7.12 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலின்போது, முக்கிய கட்சி வேட்பாளர்கள், தேர்தல் கமிஷன் கண்களில் மண்ணை தூவிவிட்டு, பல லட்சங்களை வாரி இறைத்தனர். கட்சித் தலைவர்கள், கோடிக்கணக்கில் செலவிட்டதையும் பொதுமக்கள் கண்கூடாகப் பார்த்தனர்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது: சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை தொடர்பு கொண்டு, தேர்தல் செலவு விவரங்களை சேகரித்து வருகின்றனர். அனைத்து வேட்பாளர்களிடமும் செலவு கணக்கு பெற்ற பின்னர், அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்படும். வேட்பாளர்கள் தரும் செலவுக் கணக்குகளை, அப்படியே இணையதளத்தில் வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் செலவு ரூ. 3 லட்சம்

தலைவர்கள் போட்டியிட்ட தொகுதியில் செலவு விவரம்
முதல்வர் ஜெயலலிதா ரூ.9.50 லட்சம்
கருணாநிதி ரூ.4.47 லட்சம்
ஸ்டாலின் ரூ.3.00 லட்சம்

- தினமலர் சிறப்பு நிருபர் -

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

தேர்தலுக்கு வெறும் 7 லட்சம் செலவு: எம்.எல்.ஏ.,க்களின் "சூப்பர்' கணக்கு

From எழுத்ததிகாரன்

Topic ID: 274

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...