ஹைதராபாத்: இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான லட்சுமன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமன்(37). பொறுமையாக ஆடும் தன்மை கொண்ட லட்சுமன், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவர். கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடி வரும் லட்சுமன், முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்டை போல பல போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடி தந்தவர்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவர் யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருகிறேன். இது குறித்து எனது பெற்றோர், குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருடன் ஆலோசித்து வருகிறேன். விரைவில் இது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
கடந்த 1996ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமான லட்சுமன், இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 17 சதங்களும், 56 அரைசதங்களும் அடித்து, மொத்தம் 8781 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 86 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள லட்சுமன், 6 சதங்களும், 10 அரைசதங்களும் அடித்து 2,338 ரன்களை எடுத்துள்ளார்.
வரும் 23ம் தேதி ஹைதராபாத்தில் துவங்க உள்ள நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட லட்சுமனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லட்சுமன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஹைதராபாத்தில் 2வது முறையாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற பிறகு, அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.