இயக்குநர் விஜய்க்கும், சர்ச்சைகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும் போலிக்கிறது. தெய்வத்திருமகன் படம் வெளியான போதே அது ‘ஐ யம் ஷாம்' படத்தின் அப்பட்டமான காப்பி என்று விமர்ச்சனம் எழுந்தது. ஆனால் அது என்னுடைய சொந்த ஸ்கிரிப்ட் என்று சத்தியம் செய்தார் விஜய்.
இப்போது அவர் இயக்கி வரும் தாண்டவம் படம் எந்த படத்தின் டி.வி.டியிலிருந்து சுடப்பட்டது என்று கோடம்பாக்கத்தினர் அலசிக் கொண்டிருக்கையில் வசமாக சிக்கியிருக்கிறது உதவி இயக்குநரின் புகார்.
இயக்குநர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் யூடிவி தனஞ்செயனிடம் வாய்ப்பு கேட்டு போன போது ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்தாராம். அதுதான் இப்போது தாண்டவமாக அவதாரம் எடுத்திருக்கிறதாம்.
இப்பொழுதுதான் தன்னுடைய கதை திருடப்பட்ட விசயத்தையையே அறிந்திருக்கிறார் அந்த உதவி இயக்குநர். நேரடியாகவே யூடிவி நிர்வாகத்தை அணுகி முறையிட்டதை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தாண்டவம் வருவதற்கு முன்பே அந்தப் படத்தின் கதை தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது.