Admin•••1
avatar
on August 7th 2012, 7:14 pm

இன்னைக்கெல்லாம் 5ரூபாய்க்கும் மொபைல் இன்டர்நெட் வந்துடுச்சே... இதை வச்சிக்கிட்டு இணையத்தை குப்பைக்கூலமாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் சிலர். இணையப் பயன்பாட்டைக் கவனிக்கும் அதிகாரிகள் ஒரு சிறந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் மரியாதையான தயக்கத்துடன் தெரிவிக்கின்றேன். (ஏன்னா, என்னை விட திறமை வாய்ந்தவர்கள் முன்னிலையில் நான் எப்போதும் பேசுவதே இல்லை. பேசினாலும் இவ்வாறும் தானாகவே பணிவு வந்து விடுகிறது.)

ஆனால், என்னோடு பேசுபவர்கள் முட்டாளாக இருந்தால்?.... இதை எல்லாம் சொல்லியா தெரியனும் தொடர்ந்து படிங்க...
இது உங்களைப் பற்றியதாக கூட இருக்கலாம்... அதனால தொடர்ந்து படிக்காதீங்க. யாராவது வேறு தளத்தில் பதிவு செய்திருந்தால் சீக்கிரம் படித்துவிட்டு, சீக்கிரம் குப்பைக் கூடைக்குக் கொண்டு சென்று விடுங்கள்.... நம்மளோட முட்டாள் தனத்தை மற்றவர்கள் அறியச்செய்யலாமா?

பிரபலப்படுத்துவதைப் பார்ப்பதற்கு முன்னாள், அதிகாரமாக ஒரு ஹாட் நியூஸ்!

அதாவது சில சாட்டிங் தளங்களில், சில உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட பிறகும் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அவ்வாறு வருவதை ஒரு நிர்வாகியால் தடைசெய்ய முடியும். அதாவது IP BANNING மூலம்! ஆனால், அவர்கள் அவ்வாறு தடுக்க மாட்டார்கள்.

ஏனென்றால் அவ்வாறு செய்துவிட்டால் அதே உறுப்பினர் மீண்டும் வராமாட்டார் அல்லவா.? அவர்களைப் பொறுத்தவரையில் அதே உறுப்பினர் மீண்டும் வரவேண்டும்... அவரை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டும்... அதன் மூலம் உறுப்பினர் எண்ணிக்கையும், பதிவின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பதே காரணம். இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு தளத்தின் ரேட்டிங் கூடுகிறது! அதாவது ஒவ்வொரு நாளும் ரெஜிஸ்டர் செய்யும் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டும், ஒவ்வொரு நாளும் உள்நுழையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டும்... செய்யப்படும் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் தான் தரவரிசைப் பட்டியல் உருவாகிறது. ஏன்னா மிஷினுக்கு சொல்வது மட்டும் தான் தெரியும் ஆனால், என்ன சொல்கிறோம் என்பது மூளை உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்! (ஐ மீன் சொல்லிக் கொடுத்ததைத் தான் மிஷின் செய்யும்)

ஐபி யைத் தடைசெய்தாலும் வேறு ஒரு கணினி மூலம்(இன்டர்நெட் சென்டர் மூலம்) அவர் வருவார் என்று கூறுபவர்கள் முட்டாள்களே! ஏனென்றால் இதையும் தடுக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாமலிருப்பது தான்!...

சில தளங்களில் "கடந்த 24 மணி நேரத்தில் இணைந்திருந்தவர்கள்" என்று ஒரு பட்டில் காட்டும். ஆனால் அந்த உறுப்பினர்கள் உள்நுழைந்து அப்படி என்னதான் செய்றாங்கன்னு எனக்கு தெரியவே இல்லை! (ஒருவேளை சில பதிகளை உறுப்பினர்கள் மட்டுமே பார்ப்பது போலன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கூட வரவேண்டிய கட்டாயம் இருக்கலாம்.)

ஆனால், இந்த உறுப்பினர்களை இணைப்பது வேறு யாருமல்ல அந்தத் தளத்தின் நிர்வாகியும் அவரை சார்ந்த சில கைக்கூலிகளும் தான். அந்தக் கைக்கூலிகள் என்பவர்களும் 90% அந்த நிர்வாகியாகவே இருப்பார். கமலை விட பல அவதாரங்களை எடுக்கும் இவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்! ஏன்னா, ஒவ்வொரு ஐடி'யிலும் ஒவ்வொரு மாதரி குணங்களை வெளிப்படுத்துவார். உதாரணமாக ஒரு ஐடியில் கெட்டவார்த்தையை விட மோசமாக ஒருவரை திட்டி பதிவு செய்வார். உடனே இன்னொரு ஐடியிலிருந்து பிச்சைக்காரனை விட கேவலமாக கெஞ்சுவது போல ஒரு பதிவை செய்வார். அப்படி என்றால் அவர் சிறந்த நடிகர் தானே... சினிமா உலகம் உங்களுக்காக காத்திருக்கிறதையா முயற்சி மேற்கொள்ளுங்கள்.... உங்களைபோன்ற வேஷதாரிகள் தான் இன்று சினிமாத்துறையில் அதிகம் நடமாடுகிறார்கள்...)

இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களையும் அந்தத் தளங்களின் பெயரையும் என்னால் விளிப்படையாகவும் சொல்லக்கூடிய அதிகாரம் எனக்கிருக்கிறது! ஆனால் எங்க? எப்படி? சொல்லப்போறேன் அப்படிங்கறதுதான் அவங்களுக்கும், எனக்கும் எவ்வளவு "பவர்" இருக்குங்கரதைக் காட்டப் போகுது! -என்பதை ஹிட்லரைவிட மோசமான அதிகாரத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

இப்போது நமக்குத் தேவையானதைப் பற்றிப் பார்ப்போம்....

நம்மில் பலரும் இன்று இலவச பிளாக்குகளை பராமரித்து வருகின்றோம். ஆனால், அதில் நாம் சொந்தமாக என்ன எழுதி கிழிக்கின்றோம் என்பது நமக்கே கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. (நமக்கே மீன்ஸ்... எனக்கே!)

அவ்வாறு நம்மால் சொந்தமாக சிந்தித்து எழுத முடியாத போதும் கூட நமது தளத்தை அல்லது பிளாக்கை நிர்வகிக்க கொஞ்சமும் தயங்குவதே இல்லை. அதில் அப்படி என்ன தான் சுகம் இருக்கிறது என்பதும் நமக்கு புரிவது இல்லை!(இப்பதான் 5ரூபாய்க்கும் மொபைல் இன்டர்நெட் வந்துடுச்சே... இதை வச்சிக்கிட்டு இணையத்தை குப்பைக்கூலமாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

"எங்கள் தளத்தில் பல லட்சங்களில் பதிவுகள் இருக்கிறது" என்று சிலர் அடிக்கடி சொல்வதை யாராவது பார்த்தால், "இந்த பல லட்சம் பதிவுகளில் நீங்கள் சொந்தமாக எழுதியவை எவை?" என்று கேளுங்கள்! (அதாவது கைதட்டல் - அரட்டை தவிர்த்து மக்களுக்குத் தேவையானவை...)

நீயே மத்தவன் எழுதினதைத் தான் காப்பி பேஸ்ட் செஞ்சிக்கறே.. இந்த லட்சனத்துல அடுத்தவனை குத்தம் சொல்லிக்கிட்டு.... என்ன இதெல்லாம் ?

சரி இப்போது நமது தளங்களைப் பிரபலப் படுத்துவது எப்படி என்பதை கொஞ்சம் அதி(க)காரமாக அலசுவோம்...

அது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரமெல்லாம் கிடையாது. முதலில் இலவச பிளாக்/தளம் அனுமதிக்கும் தளங்களுக்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். (how to make Free hosting (or) Free website அப்படின்னு கூகுள்-ல தேடினால் விவரம் கிடைக்கும்) பிறகு "இன்ட்லி" போன்ற தளங்களில் உங்களுடைய பதிவுகளை இணையுங்கள்.

முக்கியமாக...
1. உங்கள் தளத்தில் குறி சொற்களைப் பயன்படுத்துங்கள்.

2 . Site Description-னில் உங்கள் தளத்தைப் பற்றிய சிறுகுறிப்பை எழுதுங்கள்.

3. Google Analystic-ல் உங்கள் தளத்தை பதிவு செய்து அதை Verification செய்து உறுதிப்
படுத்திக் கொள்ளுங்கள்.

4. Google Analystic தரும் ஐடியை (Ex: "UA-23506800-1") குறிப்பிட்ட பகுதியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

5. நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் தளத்தின் பெயர், மற்றும் தள முகவரி, பதிவுகளின் தலைப்பு போன்றவற்றை Google Search ல் தேடிகிட்டே இருங்கள்.

6. Google , Bing, Yahoo போன்ற Search Engine களில் உங்கள் தளத்தை இணைத்துக் கொள்ளுங்கள்.

7. ஒரு நாளைக்கு 5 பதிவுகள் செய்யமுடியும் என்றால் தினமும் அந்த ஐந்து பதிவுகளுக்குக் குறையாமல் பதிவுகளை எழுதுங்கள். (எழுத முடியவில்லை என்றால் தினகரன், தினமலர், தினத்தந்தி போன்ற செய்தித் தளங்களில் இருந்து காப்பி/பேஸ்ட் செய்யுங்கள்.

உங்கள் தளம் சாட்டிங் தளமாக இருந்தால்,

1. உங்கள் தளத்தில் செய்திகள் / பதிவுகள் அதிகமாக இருந்தால் தான் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒண்ணுமே இல்லைன்னா எப்படி வருவார்கள்? எனவே காப்பி பேஸ்ட் செய்வதை பழகிக்கொள்ளுங்கள்.

2. இல்லையென்றால் நீங்களே பல பயனர் பெயர்களை உருவாக்கி (கொஞ்ச காலங்களுக்கு மட்டும்) நீங்களே எதையாவது எழுதி பாராட்டிக் கொள்ளுங்கள்.

3. குறிப்பாக பெண் பெயரில் ஐடியை உருவாக்கி அவர்களோடு இரட்டை அர்த்த வசனங்களோடு உரையாடுவது போல பதிவுகள் செய்யுங்கள். இதன் மூலம் அந்தமாதரி ஆண்கள் அவர்களோடு உரையாடுவதற்காகவே இணையலாம்.

4. Face Book ல் இருந்து அதிகம் நண்பர்கள் இல்லாத பெண்களின் புகைப்படங்களை உங்கள் தள உறுப்பினரின் அவதாரில் இணைத்து விடுங்கள். சில நாளில் அந்த அவதாரை நீக்கி விடுங்கள். அப்போது தான் அவர் உண்மையிலேயே பெண்தான் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வரும்.(பலதளங்களில் இதுதான் நடக்கிறது)

5. உங்கள் தளத்தில் உறுப்பினர்கள் எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்வது போல ஒரு பயனர் பெயரை நீங்களே உருவாக்குங்கள். பின்பு அவரை திட்டுவது போல பதிவுகள் செய்யுங்கள். பிறகு அந்தப் பயனர் பெயரை தடை செய்து விடுங்கள். இதன் மூலம் பதிவுகளும் அதிகரிக்கலாம். மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

6. பிறகு இன்னொரு பயனர் பெயரில் இருந்து, தடை செய்யப்பட்டவரின் பதிவுகளை பின்னூட்டம் மூலம் மீண்டும் மீண்டும் உறுப்பினர்களின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள்.

7. பிறகு எங்கள் தளத்தில் இத்தனை லட்சம் பதிவுகள் இருக்கிறது. அதில் இந்தப் பதிவை மட்டும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்பது போல ஒரு பின்னூட்டத்தைக் கொடுங்கள். இதன் மூலம் தடை செய்யப்பட்டவரிடம் இருந்து நீங்கள் அனுதாபத்தைப் பெறமுடியும். இதன் காரணமாக அந்தப் பதிவை நீங்கள் நீக்கிக் கொள்ளலாம். முதலிலேயே நீக்கி விட்டால் மற்றவர்கள் பயப்பட மாட்டார்கள். நீக்காவிட்டால் உங்களையும் ஒருவர் எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற ஆதாரம் இல்லாமல் செய்யலாம். (ஆனால், பின்னால் நடப்பதை முன்னதாகவே உணரும் அதிக திறமையுள்ளவர்கள் யாராவது இதை எல்லாம் Screen Shot எடுத்து வைத்திருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்)

8. இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் உங்கள் தளம் அனைவருக்கும் தெரிவிக்கப் படுகிறது. பதிவுகள் அதிகமாவதாலும், மற்றவர்களுடைய பதிவுகளை உங்கள் தளத்தில் காப்பி/பேஸ்ட் செய்வதாலும் தேடுபொறிகளில் உங்கள் தளத்தின் பெயர் முதலில் வர வாய்ப்புள்ளது.

9. எல்லாவற்றையும் விட விரைவில் .COM / .NET / .ORG என்ற பெயரில் உங்கள் தளத்தின் முகவரியை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேடு பொறிகள் இது போன்ற கட்டண தளங்களில் இருப்பதைத்தான் முதலில் காட்டும். சொந்தமான ஒரு பதிவை 2010-ம் ஆண்டில் பிளாக்கில் ஒருவர் எழுதியிருந்தாலும், அதே பதிவு உங்கள் தளத்தில் இன்று இடம் பெற்றிருந்தாலும் தேடு பொறிகள் உங்கள் தளத்தைத் தான் முதலில் காட்டும். இதற்காகத்தான் சில தளங்கள் Blogspot தளங்களில் இருக்கும் பதிவுகளை மட்டும் தள முகவரியுடன் அனுமதிக்கின்றன. மத்தவனெல்லாம் முட்டாள்னு நினைச்சிகிட்டு இருக்கானுங்க.... நடு ரோட்டுல நிக்கவச்சி செருப்பாலயே அடிக்கணும் இவனுங்களை...

10. பிளாக்கில் இருந்து பிறருடைய பதிவுகளை வேறு ஒரு பயனர் பெயரில் இருந்து காப்பி/பேஸ்ட் செய்து விட்டு அவருடைய பெயரைக் குறிப்பிடாதீர்கள். அதே நேரத்தில் உங்கள் நிர்வாக ஐடியிலிருந்து "இது போன்ற பதிவுகள் செய்யும் போது எழுதியவரின் பெயரையும், இடம் பெற்றிருக்கும் தள முகவரியையும் இணைக்க சொல்லி ஒரு எச்சரிக்கைப் பதிவை செய்யுங்கள். முக்கியமாக இதை விதிமுறைகளிலும் இணைத்து விடுங்கள்.

11. உங்கள் தளத்தைப் போலவே ஒரு தளத்தில் இருந்து யாராவது பதிவு செய்தால், அதில் முகவரியை இணைத்திருந்தால் உடனே அந்தப் பதிவை நீக்கி விடுங்கள். இதன்மூலம் உறுப்பினர்கள் வேறு தளத்திற்கு சென்று விடுவார்கள். அதே நேரத்தில் "பிறருடைய பதிவுகளை கையாளும் போது எழுதியவரின் பெயர், தள முகவரி இணைக்க வேண்டும்" என்று விதிமுறைகளில் நீங்களே கூறி இருப்பதை மறந்து விடுங்கள்!

12. என்னதான் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்யக் கூடாது, மற்றவர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடாது என்று நினைத்தாலும் பிற தளங்களில் இருந்து செய்திகளை காப்பியடிக்கும் முட்டாள் தனத்தை ஒரு போதும் கைவிடாதீர்கள்... மற்றவர்களால் நீங்கள் மட்டும் பிரபலம் அடைய வேண்டும் என்பதை வாழ்வில் லட்சியமாக கடைபிடியுங்கள்! இதன் மூலம் "ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் கூடாது" என்ற பழமொழியை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள்!

13. மிகவும் முக்கியமான செயல் இதுதான். அதாவது உங்கள் தளத்தில் சொந்தமாக சிந்திக்கும் நபர் யாராவது இருந்தால் சந்தர்பத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள்... நேரம் வரும் போது அவரை அவமானப் படுத்தி, ஐடியை தடை செய்து விடுங்கள்.

14. அதே நேரத்தில் உங்கள் முட்டாள்தனத்தை கவனித்து அவ்வப்போது (நீங்கள் திருந்தும் வரை) பறைசாற்ற ஒவ்வொருவர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்... ஆனால், இதுவும் கூட உங்கள் தளத்தின் பிரபலத்திற்கு வழியாக அமைந்துவிடுகிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது. அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல நீங்கள் அதை நீக்கிவிடும் போது...

இறுதியாக நீங்கள் இவ்வாறு செய்வதால் யாருக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தினமும் தூங்கும் போது சிந்திக்க மறக்காதீர்கள்!!
இனிமேல் தான் அதிகாரனின் சிறப்பான அவதாரங்கள் தொடரப் போகிறது!...
இது எழுதத் தெரியாதவனின் எழுத்துக் கோர்வைகள்! ஐ மீன் இது என்னோட கட்டுரை இல்லை என்பதுதான் இதன் பொருள்.

இப்படிக்கு அதிகாரன் (மீடியா).

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

உங்கள் தளம் அல்லது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி?

From எழுத்ததிகாரன்

Topic ID: 117

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...