சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் காலை 11 மணிவரை நடராஜன் உடலுக்கு அஞ்சலி

avatar

சென்னை: உடல்நலக் குறைவால் காலமான சசிகலா கணவர் நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் காலை 11 மணிவரை வைக்கப்படும். அதன் பின் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும்.

சசிகலா கணவர் நடராஜனுக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்தார். இதையடுத்து கடந்த 16-ந் தேதி நெஞ்சக நோய் தொற்று காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் கவலைக்கிடமான நிலையில்தான் நடராஜன் இருந்தார்.

மருத்துவமனையில் வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து உள்ளிட்டோர் நடராஜன் உடல்நிலையை கேட்டு வந்தனர். இன்று அதிகால 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது. நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பெசன்ட் நகர் இல்லத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் சொந்த ஊரான விளாருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES