படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்

avatar

சென்னை: படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை நகரத்தை யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது என்பது மார்கழி இசை விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய இசைக்கு பங்களித்து வருவதன் அடிப்படையில் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப்பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை.

சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு. இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

படைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு என்பது மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம் என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES