ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ பெரிய தொகை சம்பளமா?

avatar

ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ பெரிய தொகை சம்பளமா? 07-1510048951-julie1

சென்னை: ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ. 10 லட்சம் சம்பளம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டுவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியை போலி என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ஜூலிக்கு சினிமா படங்களில் நடிக்கும் ஆசை உள்ளதாம். ஆனால் அவரை தேடி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் தான் தற்போது வந்துள்ளது. கலா மாஸ்டர், கோகுல் நடுவர்களாக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கி வருகிறார். ஜூலிக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததே கலா மாஸ்டர் தான்.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஜூலி தான் கூற வேண்டும். ஜூலிக்கு படங்களில் நடிக்க ஆசை இருந்தாலும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு அது பிடிக்கவில்லையாம். இருப்பினும் அவர்களின் மனதை மாற்ற முயன்று வருகிறாராம் ஜூலி.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES