என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்... - கமல் ஹாஸன்

avatar

கமல் பிறந்த நாள்! முக்கிய அறிவிப்பு விரைவில்...வீடியோ
சென்னை: மக்கள் வெள்ள பாதிப்புகளில் இருக்கும் இந்த நேரத்தில் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கமல் ஹாஸன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று கமல் ஹாஸனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர். ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார்.

"நாளை என்பது மற்றுமொரு நாளே
வேலை கிடக்குது ஆயிரமிங்கே
கோலையுங்குடியையும் உயரச் செய்வோம்
வேலைவருமெனத் தவமிருக்காது
காலையிலேயே புதுயுகம் செய்வோம்,"

என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES