உலகம் அறிந்த அறிவாளி(கமல்) உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி!!!

avatar

உலகம் அறிந்த அறிவாளி(கமல்) உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி!!! 07-1510031663-kamal-birthday532

சென்னை: உலகம் அறிந்த அறிவாளி உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி என்று கமல் ஹாஸனின் ரசிகர்கள் அவரை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கமல் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்தாலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்கள் ரசிகர்கள். எங்கள் நற்பணி இயக்கத்தின் முதல்வரே என்று போஸ்டர் அடித்துள்ளனர். போஸ்டரை பார்ப்பவர்களுக்கு முதல்வரே என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்படி போஸ்டர் வைத்துள்ளனர். கமல் ரசிகர்களாச்சே... மக்களின் பிக் பாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் அறிந்த அறிவாளி உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி என்று தங்களின் ஆசையை போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள். தமிழகமே விரும்பும் தலைமையே என்று கமலுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள். அவரின் அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES