கட்சிப் பெயர், கொடி, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்...! - கமல் ஹாஸனின் விறுவிறு அரசியல் மூவ்

avatar

சென்னை: அரசியலுக்கு வருவதில் மும்முரமாகிவிட்ட நடிகர் கமல் ஹாஸன் விரைவில் கட்சியின் பெயர், கொடியை அறிவிக்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியலில் ஈடுபடுவதில் இரு வேறு கருத்தில்லை. நான் பின்வாங்கப் போவதுமில்லை.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதை வரும் ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். நான் ஆரம்பிக்கவிருக்கும் கட்சி, அதன் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரைவில் அறிவிப்பேன். அதற்கான அஸ்திவாரம்தான் இந்த சந்திப்பு, செயலி எல்லாம். அரசியல் கட்சி தொடங்கும் முன் மக்களைச் சந்திக்க விரும்புகிறேன். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறேன்," என்றார். இதன் மூலம் ஒரு வழக்கமான அரசியல் கட்சி தொடங்குவதற்கான அத்தனை வேலைகளிலும் கமல் இறங்கிவிட்டது தெளிவாகிறது.

திராவிடக் கட்சிகள், விஜய்காந்த் கட்சி எப்படி தொடங்கப்பட்டதோ அதே பாணியில் கட்சி, கொடி அறிவித்த பிறகு சுற்றுப் பயணம் செய்கிறார் கமல் ஹாஸன். என்ன இன்றும் ஒரு பத்திரிகை, தொலைக்காட்சிதான் ஆரம்பிக்கவில்லை. அதற்கு பதிலாத அட்வான்ஸாக ஆப் ஆரம்பித்துவிட்டார்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES