சும்மா சிரிச்சுப் பாருங்க...

avatar

நீதிபதி: கள்ள நோட்டு அடிச்சியா ?

குற்றவாளி: இல்ல யுவர் ஆனர், நான் அடிச்ச நோட்டு கவர்மெண்டு நோட்டு மாதரியே இருந்ததாம்!

நீதிபதி: சரிதான், நீ அடிச்ச நோட்டு அப்படியே கவர்மெண்டு நோட்டு மாதறியே தான் இருக்கு. ஆனா, கவர்னர் கையெழுத்துக்குப் பதிலா உன்னோட கையெழுத்தை போட்டதால தான் நீ மாட்டிகிட்டே.

குற்றவாளி: என்னோட நேர்மைக்கு கிடைச்ச பரிசு இதுதான் யுவர் ஆனார்! அதனாலதான் இனிமே நேர்மையா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்.

நீதிபதி: என்ன நேர்மை? கள்ள நோட்டு அடிச்சது நியாயம்னு சொல்ல வரியா?

குற்றவாளி: இது நியாயமான்னு நீங்களே கேளுங்கள் யுவர் ஆனார். அடுத்தவங்க கையெழுத்தைப் போடுறது கிரிமினல் குற்றம்னுதான் நான் என்னோட கையெழுத்தையே போட்டேன். ஆனா, அதையும் குற்றம்னு சொன்னா எப்படி?

நீதிபதி: இந்த சட்ட விரோத செயலை செய்வதற்கு உனக்கு யாரு அனுமதி கொடுத்தது?

குற்றவாளி: எங்க குடும்பத்துல உள்ளவங்க பேருல பணம் இருந்துச்சு. அதான் இந்த உரிமையை நமக்கு இருக்குன்னு நெனைச்சிட்டேன்.

நீதிபதி: உங்க குடும்பத்துல உள்ளவங்க பேரு என்ன?

குற்றவாளி: எங்க அப்பா பேரு செல்வம்!

நீதிபதி: !!!!!!!!

குற்றவாளி: எங்க அம்மா பேரு சொப்'பண' சுந்தரி!

நீதிபதி: !!!!!!

குற்றவாளி: என்னோட தம்பி பேரு பிர'காசு'!

நீதிபதி: !!!!!!!!!!

குற்றவாளி: என்னோட அக்கா பேரு அஞ்சணா!

நீதிபதி: அப்படின்னா... உன்னோட தங்கச்சி பேரு என்ன நாலணா'வா?

குற்றவாளி: இல்லை யுவர் ஆனர், என் தங்கச்சி பேரு ரூபா!

நீதிபதி: உங்க தாத்தா பேரு என்ன?

குற்றவாளி: தாத்தா பேரு பெரு'மாளு'!

நீதிபதி: உங்க பாட்டி பேரு?

குற்றவாளி: பாட்டி பேரு... நவ'மணி'!

நீதிபதி: இவ்வளவு சொல்றியே உன்னோட பேரு மட்டும் ஏன் அசுரன்'னு வச்சிருக்கே. இதுல பணமோ, காசோ இல்லையே?

குற்றவாளி: இருக்கு யுவர் ஆனர்! என்னோட முழுப் பேரு நர'காசு'ரன்!

நீதிபதி: அடப்பாவி!

குற்றவாளி: இது மட்டுமில்ல யுவர் ஆனர், என்னோட பொண்டாட்டி பேருலயும் இந்த ஒற்றுமை இருக்கு.!

நீதிபதி: உன் பொண்டாட்டி பேரு என்ன?

குற்றவாளி: ஈஸ்'வரி'!

நீதிபதி: இந்த வழக்கை விசாரித்ததில் ஏதோ நியாயம் இருப்பது போல தோன்றுவதால், பலபேர் கொண்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக இவருடைய வழக்கை அடுத்தமாதம் 15-ம் தேதிவரை 'ஒத்தி' வைக்கிறேன்.

குற்றவாளி: என்னோட வழக்கை நீங்க ஏன் 'ஒத்தி' வைக்கணும்? என்கிட்டே குடுத்தா நான் ஒரு மாதம் 'அடகு' வச்சிக்கரேனே?...

நீதிபதி: இவன் மேல கூடுதலா இன்னொரு அஞ்சாறு 'காசை'ப் போட்டு உள்ளே தள்ளுமாறு உத்தரவிடுகிறேன்!

குற்றவாளி: அது காசு இல்லை யுவர் ஆனர், கேசு....!

நீதிபதி: போடா லூசு!

குற்றவாளி: ஆமா..., எதை வச்சி யுவர் ஆனர் என்மேல கூடுதலா கேசு போட சொல்றீங்க?

நீதிபதி: ஆங்... சேட்டு கடையில அடகு வச்சிதான்!

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES