போட்டியின்றி பிரச்சாரமின்றி முதல்வராகி வருகிறார்!

avatar

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது... என்று பாடியதைப் போல. போட்டியின்றி பிரச்சாரமின்றி ஒருத்தர் தமிழகத்தில் முதல்வராகி வருகிறார். அவர்தான் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். மறைந்த ஜெயலலிதாவால் அதிகாரப்பூர்வமாக முதல்வர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் இவர். எனவே இனிமேலும் தொடர்ந்து இவரே தமிழகத்தின் முதல்வராக செயல்படலாம். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், வேறு யாருக்காவது தன்னுடைய முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார் என்று சொன்னால், இவர் அரசியலுக்கே லாயக்கில்லை என்பதும், அதிகமான முறை முதல்வரானவர் என்ற வரலாற்றில் இடம் பிடிக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிவிடும்...

காரணம், ஜெயலலிதாவுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் இவர்தான் முதல்வரானார். ஆனால் அந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே இவர் தன்னுடைய முதல்வர் பதவியை இப்போது யாருக்காவது விட்டுக்கொடுத்தால், சம்மந்தப்பட்ட நபருக்கு பிரச்சினை வரும்போதும் (கண்டிப்பாக வரும்) தன்னையே முதல்வராக நியமிப்பார், அதன் மூலம் மீண்டும் முதல்வர் பொறுப்பிற்கு வரமுடியும் என்ற நப்பாசைதான் காரணமாக இருக்க முடியும். எனவே திரு. ஓ.பன்னீர்செல்வத்திற்கு திறமை இருந்தால் தமிழகத்தில் ஆட்சி நடத்தி அதிமுகவை கட்டுக்குலையாமல் தூக்கி நிறுத்தலாம். அப்படி முடியவில்லையென்றால் எதிர்க்கட்சியிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளலாம். சந்துல சிந்து பாடுற வேலையெல்லாம் இனிமேல் இருக்கக் கூடாது.

தமிழக அரசியலில் பலமுறை ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். எனவே இனிமேல் வரக்கூடிய 5 ஆண்டுகள் என்பது திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் ஆட்சி செய்யலாம். ஆனால், அவர் இல்லாமல் வேறு யாராவது முதல்வராக வேண்டுமானால், எதிர் கட்சிதான் ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி இல்லையென்றால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, மறுதேர்தல்தான் நடத்த வேண்டும்!

இனிமேல் திரு.ஓ.பன்னீர்செல்வத்தை தற்காலிக / இடைக்கால முதல்வராக யாரும் நியமிக்கக் கூடாது. அப்படி நியமிக்கப்படுவதை தமிழக மக்கள் யாரும் அனுமதிக்கவும் மாட்டார்கள்!. திறமை இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்து, அடுத்தடுத்து போட்டியிட்டு, பிரச்சாரம் செய்து பொறுப்பிற்கு வரட்டும். ஆனால், திறமையில்லாத ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து தமிழகத்தை கையில் எடுக்க யாரும் முயற்சிக்கவும் வேண்டாம்!!

எதிர் கட்சியின் பலம் இதில் தெரியவேண்டும் என்று மக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்!!

avatar

அதிகாரன் wrote:
இனிமேல் திரு.ஓ.பன்னீர்செல்வத்தை தற்காலிக / இடைக்கால முதல்வராக யாரும் நியமிக்கக் கூடாது. அப்படி நியமிக்கப்படுவதை தமிழக மக்கள் யாரும் அனுமதிக்கவும் மாட்டார்கள்!. திறமை இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்து, அடுத்தடுத்து போட்டியிட்டு, பிரச்சாரம் செய்து பொறுப்பிற்கு வரட்டும். ஆனால், திறமையில்லாத ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து தமிழகத்தை கையில் எடுக்க யாரும் முயற்சிக்கவும் வேண்டாம்!!

OPS க்கு பதிலா EPS எப்படி வந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே மாற்றியமைத்திருக்கிறது உங்கள் பதிவு.

avatar

அதிகாரன் wrote:
காரணம், ஜெயலலிதாவுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் இவர்தான் முதல்வரானார். ஆனால் அந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே இவர் தன்னுடைய முதல்வர் பதவியை இப்போது யாருக்காவது விட்டுக்கொடுத்தால், சம்மந்தப்பட்ட நபருக்கு பிரச்சினை வரும்போதும் (கண்டிப்பாக வரும்) தன்னையே முதல்வராக நியமிப்பார், அதன் மூலம் மீண்டும் முதல்வர் பொறுப்பிற்கு வரமுடியும் என்ற நப்பாசைதான் காரணமாக இருக்க முடியும்.

மிகச்சரியாக கணித்திருக்கிறீர்கள். சம்மந்தப்பட்டவர் இப்போது உள்ளேதான் இருக்கிறார்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES