எண்கள் எனப்படும் நம்பர்களுக்கு உருவம் மட்டுமல்ல.. உணர்ச்சிகளும் உண்டு என்பதைச் சொல்ல வரும் அனிமேஷன் படம் '0 2 9'.
பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களுக்கு உருவம் கொடுத்து, அவற்றை காமெடிப் பாத்திரங்களாக படத்தில் உலவிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நிஷா.
நிஷா கூறுகையில், "குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக எண்களை கொண்டு உருவாகப் பட்ட முதல் படம் இந்த '0 2 9' தான்," என்கிறார்.
இதில் 2-ம் எண்ணுக்கும் 7-ம் எண்ணுக்குமிடையே காதல் எல்லாம் உண்டாம். அப்ப டூயட்டும் இருந்தாகணுமே!
டிஎப்எஸ்எஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ரமேஷ் இசையமைக்கிறார். மிராக்கில் பீட்டர் அனிமேஷன் செய்துள்ளார்.