Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 1:53 am
இது ஒரு காதல் கதை!

அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகு தான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சைக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்!

நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!...
அவள் தான்!...
அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Her Name:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு. அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை. கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்!

சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!' என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச் சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..

(அனுமதி பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகிறது.)

அந்தப்பார்வை

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 1:57 am
தொடர்ச்சி-01

அவளைப் பற்றிய ஒரு சிறிய கற்பனையில் நான் இருந்து கொண்டிருந்த போது...

விசில் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பார்த்தால் நான் செல்ல வேண்டிய பேருந்து நகரத் தொடங்கியது... உடனே, அவசர அவசரமாக ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். "ஐயோ... அவளைப் பார்க்காமலே வந்து விட்டோமே... இனிமேல் எப்போது அவளை சந்திக்கப் போகிறேன்... இந்த சந்திப்பு எதற்காக நடந்தது...." என்றெல்லாம் என் மனது முழுக்க அவள் நிறைந்து போனாள்! அவள் நியாபகமாகவே சென்று கொண்டிருந்தேன்...

கண்டக்டர் டிக்கெட் போட ஆரம்பித்தார்...

நான் ஏறியது பின்னால் படியில், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முன் பகுதிக்குச் சென்று விட்டேன். அப்போது, "ஏம்மா! எல்லாருமே 50 , 100 ன்னு கொடுத்தா, நான் சில்லறைக்கு எங்கே போறது? சில்லறையாக் கொடுங்க!" என்று கண்டக்டர் கத்தினார்!

எனக்கு பயம் அதிகமானது... ஏனென்றால் என்னிடம் இருப்பது 500 ரூபாய் சலவை நோட்டு!

கண்டக்டர் என்னிடம் வந்த போது, தயங்கிக் கொண்டே "2.50 ஒண்ணு!" என்று 500 ரூபாயை அவருக்கு முன் நீட்டினேன். அவ்வளவு தான், அவரது கோபம் எல்லை மீறியது!

"ஏண்பா, உனக்குத் தனியா சொல்லனுமா? ஒரு தடவை சொன்னாப் புரியாது? நான் என்ன இங்கே உண்டியலா வச்சிருக்கேன்! 2.50 சில்லறை இருந்தா எடு, இல்லன்னா அடுத்த ஸ்டாப்'ல ஏறங்கிக்க!" என்று எல்லோர் மீது இருந்த கோபத்தையும் என் மீது காட்டினார்.

அத்தனை பெண்கள் மத்தியில் அவர் அப்படி பேசியது எனக்கு அவமானமாக இருந்தது! உடனே, பேருந்தில் தெரிந்த முகம் யாராவது இருக்கிறார்களா?... என்று தேடினேன்...

அப்போது.... அந்தக் கண்கள்!... சற்று முன் நான் பார்த்த அதே கண்கள்..., என்னை பரிதாபத்தோடு பார்ப்பதை நான் உணர்ந்தேன்.

"அவளும் இதே பேருந்தில் தான் வருகிறாளா?" என்று மனம் துள்ளியது!

சற்று நேரம் தாமதித்து, மீண்டும் அவளைப் பார்த்தேன். நான் எதையோ கேட்கப் போகிறேன் என்ற எதிர் பார்ப்புடன் அவளும் என்னை நோக்கினாள்....

"எக்ஸ்கியூஸ்மி!" என்றேன்.

உடனே அவள்..., "2.50 ரெண்டு குடுங்க!" என்று கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி, ஒன்றை என்னிடம் கொடுத்தாள்! டிக்கெட்டை வாங்கும் போது அவள் விரல்கள் என்னைத் தொடாதா... என்று எதிர் பார்த்து ஏமாந்தேன்!

சரி நன்றியாவது சொல்லலாம் என்று நான் நினைப்பதற்குள், அவள் அதை எதிர் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்!

நானும் மௌனமானேன்!

பேருந்து சென்று கொண்டிருந்தது....

காற்றில் அசைந்த அவளது கூந்தல், கண்களில் "மை" எடுத்து, கன்னத்தில் கோலமிட்டது... தவறாகப் போடும் கோலத்தை திருத்துவது போல், அவளது பஞ்சு மிட்டாய் விரல்களால் அதை சரி செய்து கொண்டாள்! ஒவ்வொரு முறை அப்படி செய்யும் போதும், அந்தக் கண்கள் என்னை பாதியாக விழுங்க முயற்சித்தது!

நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன், முழுவதுமாகத் தான் பார்த்தால் என்ன?... என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நான் நினைத்தது அவளுக்குப் புரிந்திருக்குமோ தெரியவில்லை, உடனே மூன்று வினாடிகள் என்னை முழுமையாகப் பார்த்தாள்!

ஆம்! இதுவரை அவள் என்னைப் பார்த்ததில், இந்த மூன்று வினாடிகள் என்பது மிகவும் அதிகமான நேரம் தான்!

இருவரது பார்வையும் அப்போது ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன...

ஆனால், "அந்தப் பார்வை" யில் நான் தான் கொஞ்சம் தடுமாறிப் போனேன்!

பெண்களின் அந்தப் பார்வைக்கு இவ்வளவு கூர்மை இருக்கும் என்பதை அன்று தான் நான் புரிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில்....

"டிக்கெட்! டிக்கெட்! டிக்கெட்!" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கண்டக்டர்!

"ஏன் சார்! உங்ககிட்ட தான் அவ்வளவு டிக்கெட் இருக்கே.. அப்பறம் ஏன் இப்படி கெடந்து, அங்கயும் இங்கயும் அலையிறீங்க?" என்று ஒரு மாணவன் கிண்டல் செய்ய,

அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த சிரிப்பை அடக்குவதற்காக சிரமப் பட்டுக் கொண்டிருந்தாள். அவள் தனது உதடுகளைக் கடித்து... மெலிதாக உடம்பை வளைத்து... நெளித்து... கண்கள் 'படபட' என்று அடித்துக் கொள்ள... அவளது பார்வை பல இடங்களுக்கு வலுக்கட்டாயமாக சென்று வர... புன்னகை ததும்பி வழிந்துவிடும் அபாயத்தில் அவளது உதடுகள் துடிக்க... அவள் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தாள்!

அந்த சிரமத்திற்கு இடையிலும் அவள் என்னைப் பார்க்கத் தவறவில்லை!

அப்போது, நான் முழுமையாக அவளை உற்று நோக்கி... நானும் சிரிக்க மறந்து... எப்போது சிரிப்பாள் என்று அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது....

"ஏம்பா, இப்படி பொம்பளை மாதரி நெளியிர?" என்று ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர் கேட்டது தான் தாமதம், அதற்குள் அவள் சத்தமாக சிரித்தே விட்டாள்!

மொத்தப் பயணிகளும் அவளையே வெறித்துப் பார்த்தனர். எதற்கு சிரிக்கிறாள் என்பது தெரியாமலேயே "சின்னக் கவுண்டர்" விஜயகாந்தைப் போல் சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர்... அவள் பார்வை என்னை கிண்டலாகப் பார்க்கத் தொடங்கியது... பிறகு தான் புரிந்தது, எப்போது சிரிப்பாள் என்று நான் அவளை உற்று நோக்கியதால் "அவள் செய்ததைப் போலவே நானும் செய்து கொண்டிருந்திருக்கிறேன்" என்று!

ஆனால், அந்த சிரிப்பு தான் எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரம் குறையக் காரணமாக அமைந்தது! அதன் பிறகு, ஏதோ 10 வருடங்கள் நெருங்கிப் பழகியதைப்போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது! இனிமேல் அவளுடன் எளிதில் பேசி விடலாம், அவள் பெயர் என்ன என்பதையும் தைரியமாகக் கேட்டு விடலாம் என்று நான் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன்...

ஆனால், அது நீடிப்பதற்குள் கல்லூரி நிறுத்தம் வந்துவிட, நான் இறங்கத் தயாரானேன்...... மீண்டும் அவளை எப்போது சந்திக்கப் போகிறேன் என்ற கவலையுடன்!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 1:59 am
தொடர்ச்சி-02

இறங்கிச் செல்லும் போது, இப்படி ஒரு பார்வையாவது பார்க்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் நான் பேருந்தை விட்டு இறங்க முயற்சித்த போது...

எனக்கு முன்பாக அவள் இறங்கினாள்!

என்ன ஆச்சரியம்?... அவள் ஏன் இறங்க வேண்டும்...? என்று குழப்பத்தில் நானும் இறங்க, அப்போதுதான் அவளும் 2 .50 தான் டிக்கெட் எடுத்தாள் என்ற நியாபகம் எனக்கு வந்தது...

அப்படியானால், அவளும் இதே கல்லூரியில் தான் படிக்கிறாளா?...

நான் எதிர் பார்த்தது போல் அவளும் கல்லூரி நோக்கி நடந்து கொண்டிருந்தாள் என்னை எதிர் பார்த்த படியே!

சிறிது நேரத்தில் நானும் அவளும் அருகருகே நடக்க...

அவளோ, பேருந்தில் நடந்ததை இன்னும் மறக்காமல், சிரித்துக் கொண்டே என்னை ஓரக் கண்ணில் பார்த்தாள்.

எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்று நான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது...

"என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" என்று அவளே ஆரம்பித்தாள்!

எப்படிப் பேசுவது என்று ஒத்திகைப் பார்த்த எனக்கு, என்ன பேசுவது என்று மறந்து போனது...

"ஹலோ!... உங்களைத்தான் கேட்டேன். என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" மீண்டும் கேட்டாள்.

உடனே நான் சுதாரித்துக் கொண்டு, "3rd year கம்ப்யூட்டர் சயின்ஸ்" என்றேன்.

அதற்கு அவள் "நானும் தான்!" என்றாள் குறும்புப் பார்வையுடன்.

நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க,

அவள் தன் தலையை சாய்த்து....கழுத்தை சின்னதாக ஒரு வெட்டு வெட்டி... புருவத்தை உயர்த்தி... படக்கென்று கண்ணை மூடித்திறந்து...

"நான் 1st year" என்றாள்.

"ஓ! அப்படியா?" என்று நானும் சிரிக்க,

அவளும் சிரித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" என்றாள்.

"கீதன்" என்று கூறி விட்டு, "உங்க பேர்?" என்றேன் நான்.

"லதீபா!" என்றாள்.

ஆம்! அதுதான் அவள் பெயர். அந்தப் பெயரை அவள் சொல்லும் போது தான் அழகாக இருக்கும் "லத்..தீ..ப்பா!"

"தினமும் இந்த பஸ்-ல தான் வரீங்களா?" என்று நான் கேட்க...

"இல்லை, இப்ப ரெண்டு நாளா தான் வந்து கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி ஹாஸ்டல்-ல தங்கியிருந்தேன். ஆனா...ஹாஸ்டல் பீஸ் அதிகமா வரதால, நானும் என் பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து பக்கத்துல வீடு எடுத்து தங்கியிருக்கோம்" என்றாள்.

பிறகு பேச வார்த்தையின்றி, ஒரு சிறிய மௌனத்துடன் இருவரும் நடக்க...

அந்த இடை வெளியில், அவள் எனக்கு டிக்கெட் எடுத்தாள் அல்லவா, அந்த நன்றிக் கடனுக்காக, பக்கத்தில் இருக்கும் காஃபி ஷாப்பில், அவளுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அதே போல அவளிடமும் கேட்டேன்,

"என்னங்க... பக்கத்துல தான் காஃபி ஷாப் இருக்கு, வரீங்களா..? ஒரு காஃபி சாப்டுட்டு போகலாம்" என்றேன்.

உடனே அவள் நின்று விட்டாள். சரி வரத்தான் போகிறாள் என்று நினைத்து, சந்தோசத்துடன் அவளைப் பார்த்து நான் புன்னகை செய்ய...

சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் "பளார்...!" என்று என் கன்னத்தில் அரைந்தாள்!

நான் நிலை குலைந்து போனேன்!

அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது....

"பொருக்கி ராஸ்கல்! ரெண்டு வார்த்தை பேசுன உடனே காஃபி ஷாப்புக்கு கூப்புடுறியே.... ரெண்டு நாள் பழகினா ஹோட்டலுக்குக் கூப்பிடுவியா?

இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் ஓரத்துல ஒதுங்கி நிப்பாளுங்க... அவளுங்க கிட்ட வச்சிக்க... என் கிட்ட வச்சிகிட்டா, செருப்புப் பிஞ்சுடும். மைன்ட் இட்!"

என்று படபட வென்று பேசிவிட்டு சென்று விட்டாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒன்று நினைக்க, அவள் ஒன்று நினைத்துக் கொண்டாளே என்று வேதனையாக இருந்தது. ஆனாலும் அவள் கைகளுக்கு அவ்வளவு வேகம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை!

அன்று முதல் எனக்கு மனசே சரியில்லை... நான் நினைத்ததை அவளிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருநாள், பேருந்தில் அவளைப் பார்த்த போது, ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல், என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

என் நண்பர்கள் எல்லாம் "ஏண்டா ஒரு மாதரியா இருக்கே?" என்று கேட்ட போது "ஒன்றும் இல்லை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, லைப்ரரியில் அவளை சந்தித்தேன்.

நான் புத்தகத்தை தேடி எடுத்து வந்து அமர, அருகிலிருந்து ஒரு பெண் எழுந்து வேறு இடத்தில் அமர்ந்தாள்.

நான் நிமிர்ந்து பார்த்தேன். அது அவள் தான்!

இது தான் சரியான இடம் என்று நினைத்து, அவளருகில் சென்றேன்...

என்னைப் பார்த்ததும் அவள் எழுந்தாள்...

"ஒரு நிமிஷம்!, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றேன்.

"எதுக்கு?" ஆத்திரத்துடன் கேட்டாள்.

"அன்னைக்கு நான் உங்களை காஃபி சாப்பிடக் கூப்பிட்டது, உங்க கூட ஜாலியா பேசிக் கிட்டு இருக்குறதுக்காக இல்லங்க! நீங்க எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தீங்க இல்லையா? அந்த 2.50 ஐ திருப்பிக் கொடுத்தா மரியாதையா இருக்காது அப்படிங்கறதுக்காகத்தான், அதுக்குப் பதிலா காஃபி சாப்பிடலாம்-னு கூப்டேன். ஆனா நீங்க தான் என்னை தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க. பரவாயில்ல, காரணத்தை சொல்லாம உங்கள காஃபி சாப்பிடக் கூப்பிட்டது என் தப்புதான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க"

"......................................"

"நீங்க அழகா இருந்தீங்க, அதனால திரும்பத் திரும்ப பாக்கணும்-னு தோணுச்சு! உங்ககிட்ட பேசணும்-னும் தோணுச்சு! ஆனா, நீங்க நினைக்கிற மாதரி, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறவன் நான் இல்லை."

என்று கூறி, அந்த 2.50 சில்லறையை டேபிளில் வைத்து விட்டு நான் வேகமாக வந்து விட்டேன்.

எப்படியோ... என் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி விட்ட நிம்மதியில் நேராக எனது 'டிப்பார்ட் மெண்ட்'-க்கு வந்தபோது.......

நண்பர்கள், அனைவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்...!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:02 am
தொடர்ச்சி-03

எனது டிபார்ட்மெண்டுக்குள் நான் வந்த போது, புதிதாக ஒரு புரபொசர் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்....

நான் சென்று எனது இருக்கையில் அமர்ந்தேன். எனது எண்ணம் முழுதும் அவளின் மீதே இருந்தது!

"மனதில் உள்ளதை சொல்லி விட்டோம். அவள் புரிந்து கொண்டிருப்பாளா? அல்லது இதற்கும் ஏதாவது ஒரு அர்த்தத்தில் கோபம் கொள்வாளா?" -என்று நினைத்துக் கொண்டிருந்த போது...

புரபொசர் என்னிடம் எதையோ கேட்டார். அவர் என்ன கேட்டார் என்பது தெரியாமலேயே நான் எழுந்து நின்று,

"சாரி சார்! எனக்குத் தெரியாது" என்றேன்.

உடனே எனது நண்பர்கள் அனைவரும் என்னை ஏளனமாக பார்த்து சிரித்தனர்...

பிறகு தான் தெரிந்தது, அவர் எனது பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்!

நான் வெட்கத்தில் தலை குனிந்து நிற்க...

"கீதனைப் பார்க்கணும்!" -என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டது! நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த போது வாசலில் 'லதீபா' நின்று கொண்டிருந்தாள்...

"யாருப்பா அது, கீதன்!?" என்றார் புரபோசர்.

"நான் தான் சார்!"

"ஓ! நீதானா அது!... பேர் தெரியலைன்னு சொல்லும் போதே நினைச்சேன், இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும்னு. சரி... இந்தப் பொண்ணையாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?" என்று கிண்டலாகக் கேட்டார்.

"தெரியும் சார்!" என்றேன்...

"ம்‌ம்... போ!... போ!..." என்று அவர் அனுமதி கொடுத்ததும் நான் அவளை நோக்கி சென்றேன்...

வெளியில் வந்ததும், சிறிது தூரம் மௌனமாக நடந்தாள்...

என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்...

கொஞ்ச தூரம் சென்றதும் அவள் நின்றாள்! நானும் அவளருகில் சென்று நின்றேன்.

ஏனோ தெரியவில்லை, அவளருகில் நின்ற போது, இனம் புரியாத ஒரு தென்றல் எங்கிருந்தோ வந்து, என் உடல் முழுதும் பரவியது...!

சத்தியமாக, மற்ற பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருக்கிறது!

நின்றவள், புத்தகத்தின் ஒர விளிம்புகளை வருடிக்கொண்டு, எதையோ சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தாள்...

நானும் அவளுக்கு இடையூறு செய்யாமல் மௌனமாக நின்றேன்,..

"சாரி கீதன்! உங்களை சரியா புரிஞ்சிக்காம நான் அப்படி நடந்து கிட்டேன். என்னை மன்னிச்சிருங்க!" என்றாள் என்னைப் பார்க்காமலேயே...

நானோ, அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றேன்... உடனே நான் நினைத்தது போலவே அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்!

உண்மையிலேயே அவள் முகம் வாடித்தான் போயிருந்தது!

நான் அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்... பதிலுக்கு அவளும் புன்னகை செய்தாள்!

"சாரி கீதன்!" என்றாள்.

"பரவாயில்லை, நான் அதை அப்போதே மறந்து விட்டேன்."

"அப்படின்னா.... கூல்டிரிங்க்ஸ் சாப்பிடலாம் வாங்க.." என்று குறும்பாக என்னைப் பார்த்துக் கேட்டாள்!

நானோ 'வேண்டாம்' என்று மறுத்தேன்...

"அப்படின்னா... நீங்க இன்னும் என்னை மன்னிக்கலையா?" என்று கேட்டாள்.

"சேச்சே! அப்படியெல்லாம் இல்லை!" என்று நான் வழிந்து குழைய...

"அப்ப வாங்க!..." என்று உரிமையுடன் எனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்...!

அந்த சில மணித்துளிகளில் எனக்குள் பல ஆயிரம் கோடி மின்னல்களும்... நட்சத்திரங்களும் பூத்துக் குலுங்கியது!

சற்று நேரத்திற்கு முன், ஏதோ ஒரு இனம் புரியாத தென்றல் என்னுள் பரவியது என்று சொன்னேன் அல்லவா?...

அந்தத் தென்றல், இப்போது வசந்தமாக மாறி வீசத் தொடங்கியது!...
SOMTHING INSIDE:
ஆனாலும் அதை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை!!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••5
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:03 am
தொடர்ச்சி-04

இருவரும் கூடிரிங்க்ஸ் சாப்பிட சென்றோம்... எல்லோரும் எங்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்!

எதிர் எதிரில் அமர்ந்து கொண்டோம்...

ஏனோ தெரியவில்லை அவள் முகத்தில் ஒருவித துள்ளல் தெரிந்தது...

எனக்கும் அப்படித்தான்...

பேச நினைத்தது ஒன்று, ஆனால் பேசியது வேறு ஒன்று...

நிறைய யோசித்து.... கொஞ்சமாகப் பேசினோம்...

இருவர் குடும்பங்களைப் பற்றியும் பரிமாறிக் கொண்டோம்....

அவளுக்கு அம்மா இல்லையாம், ஒரு தங்கையும் தம்பியும் மட்டும். அப்பாவுக்கு விவசாயம், அவள் குடும்பச் சூழ்நிலையைக் கேட்ட போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவளுடைய அப்பா, யாரோ ஒருவருக்கு ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்தாராம், ஆனால் அவன் சரியாகக் கடனைக் கட்டாமல் மேலும் பல இடங்களில் கடனை வாங்கி, சுமை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டானாம். இப்போது அந்தக் கடன் மொத்தமும் அவளுடைய அப்பாவின் பெயருக்கு மாறி விட்டதாம். அவள் அப்பா சம்பாதிக்கும் அனைத்தும் வட்டி கட்டுவதற்கே போதவில்லையாம்.

"எங்க அப்பாவோட வருமானம் வட்டி கட்டவே பத்தாது, ஆனால் அந்த வருமானத்துக்குள்ள தான் எங்கள் குடும்பமே நடக்குது...!" -என்று அவள் சொல்லும் போது எனக்கே கண் கலங்கியது.. ஆனால் அவள் அலட்சியமாக சிரித்துக் கொண்டாள்... வேதனையை இப்படிக் கூட மறைக்கலாம் என்று அப்போது தான் நான் தெரிந்து கொண்டேன்...

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், நானும் புன்னகைத்தேன்.

இன்னொரு விஷயம்! கேட்டால் உங்களுக்கே அவள் மீது பரிதாபம் வரும். அதாவது, கல்லூரி முடிந்ததும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஒரு STD BOOTH-ல் வேலை பார்க்கிறாளாம்! அதில் கிடக்கும் வருமானத்தில் தான் அவள் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனாலதான், அவள் ஹாஸ்டல்ல இருந்து விலகி, தன் தோழிகளோடு ஷேர் செய்து வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கூறினாள்.

அப்போது நான் அவளிடம் கேட்டேன்...

"இந்த விஷயம், உங்க அப்பாவுக்குத் தெரியுமா?"

"தெரியும்! ஆனா, பாவம் அவர் என்ன செய்வார், அவரது இயலாமையால் தடுக்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் தடுமாறினார். நான் அதைக் கண்டுக்காம தொடர்ந்து வேலை பார்த்து கிட்டு இருக்கேன். சில நேரத்துல இந்தப் பணத்தையும் கூட வட்டிக்காக அனுப்பி வைப்பேன். அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்!.." என்றாள்,

அப்போது மீண்டும் அவளது அலட்சிய சிரிப்பை நான் பார்த்தேன்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும், அவளுக்கு பலவாறு ஆறுதல் கூறினேன். அவளும் கொஞ்சம் சமாதானமாக நிம்மதியடைந்தாள்.

"அய்யய்யோ! என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களை மூட் அவுட் பண்ணிட்டேன் சாரி! ஆமா... உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க..." என்று மீண்டும் இயல்புக்கு வர முயற்சி செய்தாள்...

"நான் ஒரே பையன், எனக்கு அம்மா மட்டும் தான்..." என்று நானும் என் குடும்பத்தைப் பற்றி கொஞ்சமாகக் கூறினேன்... அதைக் கேட்ட அவள்,

"உங்களுக்கெல்லாம்... கஷ்டம்ன்னா என்னன்னே தெரியாதுல்ல...? ரொம்ப கொடுத்து வச்சவங்க..." - மீண்டும் அதே அலட்சிய சிரிப்பு...!

அவள் அப்படி சிரிக்கும் போது கூட அழகாகத்தான் இருந்தாள்! அவளுடைய கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அவள் பேசும் தோரணையும்... அந்த அலட்சிய சிரிப்பும்.... அவளுடைய அழகான முக அசைவுகளும்... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

"ஒரு பொண்ணு தன்னோட கஷ்டத்தை சொல்லி வேதனைப் படும் போது, உனக்கு ரசனை தேவையா..?" -என்று உங்களைப் போன்று, என் அடி மனமும் கூறிக் கொண்டிருந்தாலும், நான் அதையே ரசித்துக் கொண்டிருந்தேன்.

உண்மையைச் சொன்னா, அவள் அப்படிப் பேசும் போது எனக்கு ரொம்பப் பிடிக்கும்! என்னென்றால், அந்த நேரத்தில் அவளுடைய முகம் பலவிதமான உணர்வுகளை மறைக்க முயற்சி செய்யும்!

மேலும் அப்போது தான் அவள் என்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பாள்! எங்கே நான் அவளது உணர்வுகளைக் கவனித்து விட்டேனோ என்று!

சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினோம்.... பில் கூட அவள் தான் கொடுத்தாள். நானும் அதைத் தடுக்க வில்லை. அவள் சந்தோசம் அடைந்தாள் போதும் என்று இருந்து விட்டேன். இருவரும் கை கொடுத்து விடை பெற்றோம்...

அவளை சந்தித்த போது இருந்த அந்த அழகிய கணங்களை விட, இப்போது என் மனம் மிகவும் கனத்தது....

அவளுக்கு எதாவது செய்ய வேண்டும்!

நாங்கள் சந்தித்துப் பரிமாறிக் கொண்ட எத்தனையோ அழகிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த சந்திப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது!

காலம் செல்லச் செல்ல, ஒரு நாள் உங்களுக்கும் இந்த நிகழ்வு நினைவுக்கு வரும்!!

இந்த சந்திப்பிற்குப் பிறகு அவள் என்னை எங்கோ அழைத்துச் செல்வது போல் உணர்ந்தேன்...

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••6
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:04 am
தொடர்ச்சி-05

அன்று முதல் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். உள்ளங்களைப் பரிமாறிக் கொண்டோம். அந்தப் பரிமாற்றம் இதுவரை, ஒரு அழகான நட்பின் வடிவமாகவே இருந்தது...!

எனக்கு அவள் STD BOOTH-ல் வேலை பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனவே அவளை அந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன்...

"ஆமா..., நீங்க அந்த STD BOOTH வேலைக்கு போயிதான் ஆகணுமா?"

"ஆமா! இல்லன்னா நான் எப்படி படிக்கிறது? அது மட்டும் இல்லாம எங்க அப்பாவோட கடனுக்கும் நான் வட்டிப்பணம் அனுப்பனுமே..." என்றாள் வேதனையுடன்.

"வேணும்னா, அந்தப் பணத்தை நான் தரேன். தயவு செஞ்சி நீங்க அந்த வேலைக்கு போக வேண்டாம்" என்று நான் கூறினேன்.

"வேண்டாங்க! உங்களுக்கு ஏன் சிரமம், அதுமட்டும் இல்லாம எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைத் திட்டுவாரு. வேண்டாம் என் கஷ்டம் என்னோடே போகட்டும்!"

"நீங்க ஏன் உங்க அப்பா கிட்ட சொல்லுறீங்க? சொல்லாதீங்க! இது நமக்குள்ளேயே இருக்கட்டும். நீங்க வேலைக்கு போறதாகவே சொல்லி உங்க வீட்டுக்கு பணம் அனுப்புங்க" -என்று நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சம்மதிக்கவே இல்லை. வேண்டாம் என்று உறுதியாகக் கூறி விட்டாள்.

ஆனால், அதன் பிறகு இரண்டு நாட்கள் நான் அவளோடு பேசவே இல்லை! எனவே, அதை அவளால் தங்கிக் கொள்ள முடியாமல் போக, எனது விருப்பத்திற்கு அவள் சம்மதித்து அந்த வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டாள். அதன் பிறகு என்னால் முடிந்த உதவிகளை அவளுக்கு செய்தேன். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் எனக்காக அவள் அதை ஏற்றுக் கொண்டாள். நாளடைவில் அது பழகிப் போக, அவளும் இயல்பாகவே என்னிடம் உதவிகள் கேட்கத் தொடங்கினாள்...

சில நாட்களுக்குப் பிறகு...

நான் அவளை வாங்க, போங்க என்று மரியாதையாக கூப்பிடுவது அவளுக்குப் பிடிக்க வில்லையாம். எனவே அவளது பெயரை சொல்லியே அழைக்குமாறு என்னிடம் கூறினாள்! அதை சொல்லும் போது அவள் உதடுகள் பட்ட பாடும்..! அவளது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும்..! அவளது விழிகளில் இருந்த ஏக்கங்களும்... (மன்னிக்கவும் அதை எல்லாம் என்னால் மொழி பெயர்த்து சொல்லத் தெரியவில்லை! சில நேரங்களில் எனது கற்பனைக்குள் அவளது நளினங்கள் அடங்குவதும் இல்லை! இப்படித்தான் நான் அவளிடம் பல முறை தோற்றுப் போயிருக்கின்றேன்)

சில நாட்களில் எங்கள் நட்பு, அந்த வட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதை நான் உணர்ந்தேன்! ஆம், ஒரு நாள் கூட என்னால் அவளைப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை! அவளோடு பேசாமல் இருக்க முடியவில்லை! எந்தப் பெண் குரலைக் கேட்டாலும் அவள் பேசுவது போலவே இருந்தது! எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளைப் போலவே தெரிந்தது!

எனக்குள், நான் அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்...

ஆனால், அதிக நாட்கள் என்னால் அதை மனதிற்குள்ளேயே வைத்திருக்கவும் முடியவில்லை! எனவே ஒரு நாள், என் மனதில் உருவாகிய காதலை அவளிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து அவளுக்கு போன் செய்தேன். அப்போது அவளும் ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல வேண்டும் என்று கூறினாள்!

பக்கத்தில் இருக்கும் ஒரு காஃபி ஷாப்பிற்கு வரச் சொன்னாள்...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரும் ஒரே நேரத்தில் காதலை சொல்ல நினைத்ததை பெருமையாக நினைத்துக் கொண்டேன்.

அவள் வரச்சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே நான் அங்கு சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே அவள் அங்கு காத்திருந்தாள்!

எனக்கு அதிக சந்தோஷம்! என்னைப் போலவே அவளும் தனது காதலை சொல்ல தவித்திருக்கிறாள் என்றே மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..

அவள் எதிரில் சென்று அமர்ந்தேன்... அவளிடம் இருந்து எந்த வரவேற்பும் இல்லை. ஆனால் அவளது முகத்தில் வெட்க ரேகைகள் பல வண்ணங்களில் சிதறி ஓடியது.

அதை ரசித்துக் கொண்டே நான் கூல்டிரிங்க்ஸ்-கு ஆர்டர் கொடுத்தேன். அவள் தனக்கே உரிய அந்த சிறப்பான ஓரக் கண்களில் என்னை விழுங்கிக் கொண்டிருந்தாள்...

பெண்கள் நேருக்கு நேர் பார்ப்பதை விட, அந்த ஓரப் பார்வைக்குத் தான் 'கிக்' அதிகம் என்பதை நான் உணர்ந்தேன்.! எனக்கு அது பிடித்திருந்தது.!

எனவே நானும் மௌனமானேன். ஆனால், பாவம்! அவளது "துப்பட்டா" அவள் கை விரல்களில் சிக்கிக் கொண்டு தவித்தது...

எதையோ சொல்ல முயற்சித்து அடிக்கடி என்னை நிமிர்ந்து பார்த்து, மீண்டும் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்! அவள் செய்யும் அந்த 'அலுச்சாட்டியத்தைப்' பார்த்த போது, எனக்கும் என் காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனேன்...

காதலிப்பதை விட அந்தக் காதலை சொல்வது தான் மிகவும் மோசமான வேதனை என்பதையும் நான் அப்போது தெரிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில், "காதலை யாரடி முதலில் சொல்வது.... நீயா? இல்லை நானா?..." என்ற பாடல் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது...

இந்த வரிகளைக் கேட்டதும் அவள் உதடுகள் துடித்தன... பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப் போல அவளது இமைகள் மூடித்திறந்தன...

அவள் சொல்வாள் என்று நான் எதிர் பார்க்க.... நான் சொல்வேன் என்று அவள் எதிர் பார்க்க...

உதடுகளும், உள்ளமும் எதிரிகளாகி உள்ளம் நினைத்ததை உதடுகள் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தன...

ஒரு அழகிய மௌனப் போராட்டமே அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது!

என்னதான் ஆண் தைரியம் மிக்கவனாக இருந்தாலும், காதலை சொல்லும் போது மட்டும் அவனுக்குள்ளும் பெண்மை குடியேறுகிறது என்பது என்னவோ உண்மைதான்!

யார் முதலில் சொல்வது என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தோமே தவிர ஆனால், கடைசி வரை இருவருமே பேசிக் கொள்ளாமல் விடை பெற்று சென்றோம்..!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••7
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:07 am
தொடர்ச்சி-06

எதற்காக பேசாமல் சென்று விட்டாள்? என்ற கேள்வி எனக்குள் பலவிதமான சந்தேகங்களையும், இன்னும் பல கேள்விகளையும் உருவாக்கி விடைகான முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த போது எனது டெலிபோன் ஒலித்தது!

அவள் தான் செய்திருந்தாள்!

நான் ஆவலுடன் எடுத்துப் பேசினேன்...

"என்ன லதிபா... ஏதோ பேசணும்னு வரச்சொல்லிட்டு எதுவுமே பேசாம போய் விட்டாயே? என்றேன்.

"........................." அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை!

ஒருவேளை... ஏதாவது பிரச்சினையில் இருக்கிறாளா என்று நான் குழம்பினேன்...

"என்ன லதீபா? ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?" என்று நான் மீண்டும் கேட்டபோது....

மிகவும் மெல்லிய குரலில்...
CLICK HERE:
எனது ரத்த நாளங்கள் அனைத்தும் உறைந்து போனது! இப்போது என்னாலும் பேச முடியவில்லை!

இது நான் எதிர் பார்த்தது தான், ஆனாலும் அவள் சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனேன். என்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டு...

"என்ன திடீர்னு?" என்று கேட்டேன்.

"இல்லை, ரொம்ப நாளாவே என் மனசுக்குள்ள இந்த விஷயம் அரிச்சிக்கிட்டு இருந்தது... ஆனா எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியாம...."

"..................." இப்போது நான் மௌனமானேன்.

"என்னை ஏத்துப்பீங்களா?" என்று அவள் மீண்டும் கேட்க,

"அடிப்பாவி! இதை சொல்லத்தானே நானும் இத்தனை நாள் தவிச்சிக்கிட்டு இருந்தேன்!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு...

"என்ன கேள்வி இது? உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? நானும் இதை உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்"

"......................." அவள் மௌனமானாள்.

"ஆனா, நான் கொஞ்சம் யோசிக்கணும்..." என்றேன் நான். அப்போது அவள்...

"பொதுவா, நீங்க காதலை சொல்லி, நான் தான் யோசிக்கணும்னு சொல்லணும். ஆனா, ஒரு அழகான பொண்ணு நானே வெட்கத்தை விட்டு சொல்லியிருக்கேன்... நீங்க என்னமோ யோசிக்கணும்னு சொல்றீங்க...?" என்று குறும்பாகக் கேட்டாள்.

"நான் யோசிக்கிறதே நீ அழகா இருக்கிறதால தான்!" என்று நானும் குறும்பாக கூறினேன்.

"ஏன், நீங்க கூடத்தான் அழகா இருக்கீங்க."

"நெஜமாவா?"

"ஆமா! நீங்க அழகா இருந்ததால தானே நானும் உங்களை லவ் பண்னினேன்!" என்றாள்.

"அப்படின்னா.... நீ என்னை லவ் பன்னதுக்கு அழகு தான் காரணமா?" என்று நான் கேட்க,

"ப்ச்! ஹலோ...! நான் உங்க கிட்ட "ஐ லவ் யூ" ன்னு சொல்லியிருக்கேன்... முதல்ல அது புரிஞ்சுதா?... இப்ப போயி பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கீங்க...? உடனே கிளம்பி பீச்சிக்கு வாங்க. நான் வெயிட் பன்றேன்!"

என்று சொல்லி விட்டு, எனது பதிலை எதிர் பார்க்காமல் போனை துண்டித்துக் கொண்டாள்!

நானும் மனதிற்கு புன்னகைத்துக் கொண்டு, பலவிதமான கற்பனைகளோடு உடனே சென்னை கடற்கரைக்கு விரைந்தேன்...



நண்பர்களே....!

இவ்வளவு சாதாரணமாக எங்கள் காதல் வெளிப்படும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அதுவும் அவளே முதலில் சொல்வாள் என்றும் நான் நினைக்க வில்லை!

இது மட்டுமல்ல... என் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நான் எதிர் பார்க்காமலேயே நடந்து முடிந்திருக்கிறது! எங்கள் காதலும் கூட ஒருநாள், நான் எதிர் பார்க்காமலேயே நிறைவேறாமல் முடிந்து போனது!!

ஆம்! இந்தக் கதையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவள் எனது காதலி அல்ல!

அதே நேரத்தில், நீங்கள் இந்தக் கதையை படித்து முடிக்கும் போது, நானும் இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை!

இன்னும் சில மணித்துளிகளில் என் வாழ்நாள் முடிந்து விடும்! மரணத்தோடு போராடிக் கொண்டே... நான் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...!!

இப்போது உங்களுக்கு இந்தக் கதையின் தலைப்பின் அர்த்தம் புரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆம்! நான் காத்திருப்பது... அவளது ஒப்பாரித் தாலாட்டிற்காக!

எனது இறுதி ஊர்வலத்தில், அவளது ஒப்பாரித் தாலாட்டைக் கேட்டால் என் ஆன்மா சாந்தியடையும்!

அவள் "என்னைத் தாலாட்ட வருவாளா?....."


தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••8
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:12 am
தொடர்ச்சி-07

பல கனவுகளோடு கடற்கரைக்கு சென்ற போது... அங்கே எனக்கு பல ஏமாற்றங்கள் காத்திருந்தது!

இதுவரை தோழியாக மட்டுமே இருந்து பழகிய என் லதீபா, இந்த நேரம் முதல் எனது காதலியானாள்.! காதல் உணர்வுகள் ததும்ப நான் அவளை சென்று சந்தித்தேன்...

இந்த முதல் சந்திப்பில் அவள் என்னைப் பார்த்ததும், ஓடோடி வந்து இருக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எனக்குப் பல முத்தங்களை கொடுக்க..., நானும் அவளை ஆசையோடு அள்ளி, ஸ்லோமோஷனில் ஒரு சுற்று சுற்றலாம்... என்று நினைத்துக் கொண்டு சென்ற எனக்கு, அது முதல் ஏமாற்றம்!

என்னைப் பார்த்ததும் ஒரு சிறிய புன்முறுவலுடன் என்னை அவள் வரவேற்றாள்.

ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் நானும் புன்னகைத்து அவளருகில் சென்றேன்...

என்னைப் பார்க்க கொஞ்சம் வெட்கப் பட்டாள்... கடற்கரைக் காற்றில் அசைந்த அவளது கூந்தலை சரி செய்து கொள்வது போல என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து கடல் அலைகளைப் பார்த்தாள்...

கடற்கரை ஓரத்தில் நடந்து செல்வதில் அவளுக்கு ஒரு அலாதி இன்பமாம்... இதை அவள் சொன்னதும், நானும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, இருவரும் கை கோர்த்து நடக்கத் துவங்கலாம் என்று கற்பனை செய்து... அதிலும் ஏமாந்தேன்!

சிறிது தூரம் மௌனமாக நடந்தாள்... நானும் அவளோடு நடந்தேன்...

அந்தக் கடற்கரையில், பல காதலர்கள் பல கோணங்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தனர். ஒரு காதல் ஜோடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்...

அந்தப் பெண், கடல் அலைகள் வரும் போதெல்லாம் தடுமாறி விழுந்து விடுவதும்... அந்தக் காதலன் அவளைக் காப்பாறுவது போல கட்டியணைப்பதும்... நாம் செய்வது யாருக்குமே புரியாது... என்பது போல இருவரும் உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்ததை ஆசையோடு நான் பார்த்து ரசித்துக் கொண்டு வரும் போது...

லதீபா என்னை ஒரு மாதரியாகப் பார்த்தாள்... நான் அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்...

உடனே அவள், ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு படகைக் காட்டி அங்கு சென்று அமரலாமா என்று கேட்டாள்!

அவள் சுட்டிக் காட்டிய படகு... மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்டது. அந்தப் படகு மறைவில் நான் பல காதல் ஜோடிகளைப் பார்த்திருக்கின்றேன். அந்த காட்சியெல்லாம் எனக்குள் ஒரு முன்னோட்டம் காட்ட, ஒரு உந்துதலோடு... நானும் ஆசையோடு சம்மதித்து இருவரும் அந்தப் படகை நோக்கி சென்றோம்!

படகு மறைவில் சென்றதும் முதலில் நான் அமர்ந்தேன். லதீபா என்னருகில் வந்தாள்... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஒருவித தயக்கத்தோடு... என்னை உரசிக்கொண்டு... எனக்குப் பக்கத்தில் அமர்வாள் என்று எதிர் பார்த்து காத்திருக்க...

அவளோ, எந்தவித சலனமும் இல்லாமல், எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள் !

"என்னடா காதல் இது...?! இதற்காகவா என்னை அவசரமாக கடற்கரைக்கு வரச்சொன்னாள்... இதற்காகவா இந்த மறைவான இடத்திற்கு அழைத்து வந்தாள்..." என்று நான் வெறுப்படைந்த போது....

"என்ன கீதன்? எதுவுமே பேசாம இருக்கீங்க?" என்று கேட்டாள் லதீபா.

"ஆமா, பேசுறதுக்குத் தான் இந்த மறைவான இடத்திற்கு அழைத்து வந்தாயா?... இதை பஸ் ஸ்டாப்பிலேயே பேசியிருக்கலாமே... இந்த இடத்தை வேறு காதலர்கள் யாராவது பயன் படுத்தி இருப்பார்களே..." -என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு...

"லதீபா, நாம கொஞ்சம் முன்னாடி போயி உட்காரலாமா?" என்று கேட்டுவிட்டு எழுந்தேன்.

உடனே அவள், என் கையைப் பிடித்து தடுத்தாள்!

"உட்காருங்க கீதன்! நான் இங்க உங்களை அழைச்சி கிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு!" என்றாள்.

உடனே எனக்குள், "இனிமேல் தான் ஆரம்பிப்பாளோ..." என்ற சபலம் தோன்ற, நானும் அமர்ந்தேன்.

அவள் தொடங்கினாள்...

"கீதன், நான் முதன் முதல்ல இந்த பீச்சுக்கு வந்தப்போ, இதே மாதரி பல இடத்துல நிறைய காதலர்களை பார்த்திருக்கேன்! அப்போ அவங்க இருந்த நிலைமையை என்னால சொல்ல முடியாது. ஆனா, அவங்களைப் பார்த்து மத்தவங்க எண்ணலாம் பேசினாங்கன்னு சொல்ல முடியும்! காதல்ங்கறது மனசு சம்மந்தப் பட்டது தானே..? மனசால இணைஞ்சதுக்கு அப்பறம் எப்படி அவங்களால இப்படியெல்லாம் நடந்துக்க முடியுது?"

"சுத்தம்! அப்படின்னா எதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லாம சொல்லுறே... ம்‌ம்... சொல்லு சொல்லு! " என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

லதீபா தொடர்ந்தாள்,..

"நான் அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் கீதன்! நானும் காதலிச்சா இதே இடத்துக்கு வந்து... நல்ல முறையில நடந்துக்கணும்னு."

"ஏன் லதீபா, உனக்கு யாராவது அவார்டு தறேன்னு சொன்னாங்களா?" என்று அவளிடம் கேட்டேன்.

"என்ன கீதன், நீங்களும் இப்படி பேசுறீங்க. இதெல்லாம் அசிங்கம் இல்லையா?"

"உஷாரா தப்பிச்சிக்கணும்னு பாக்குறியா? இது முதல் சந்திப்பு தானே.. அதனால என்னோட வேலையைக் காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். அடுத்து அடுத்து நீ இந்தப் பீச்சுக்கு வராமலா போகப் போரே அப்பப் பார்த்துக்கரேன் !" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு...

"அப்படி சொல்ல முடியாது லதீபா, எல்லாருக்குமே மனசுக்குள்ள ஒரு சின்ன சின்ன ஆசைகள் இருக்கும். அதை இந்தமாதரி சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலமா தீர்த்துக்கறது தப்பில்லையே... இதெல்லாம் இல்லைன்னா அப்பறம் எதுக்குக் காதலிக்கணும்?" என்று சொல்லி என் ஆதங்கத்தையும் மறைவாகக் காட்டினேன்.

"அப்படின்னா உங்க மனசுல அப்படி எண்ணங்கள் இருக்கா? சும்மா சதையைப் புடிச்சிப் பாக்குறதுல என்ன ஆசை தீர்ந்திடப் போகுது கீதன்? அதுக்கெல்லாம் நேரம் காலம் இல்லையா?!" -என்று அவள் கேட்ட தோரணையைப் பார்க்கும் போது நான் எரிந்து விடுவேன் போலிருந்தது!

அதுமட்டுமல்லாமல், "சும்மா சதையைப் பிடிச்சிப் பாக்குறதுல..." இந்த வார்த்தைகள் 'செருப்பால்' அடித்தது போல எனக்குப் பல விஷயங்களை உணர்த்தியது!

அந்த வார்த்தையில் இருந்த ஆழமான அர்த்தங்களும் எனக்குப் புரிந்தது...

உடம்பைக் காட்டி ஆண்களை வசியப் படுத்தும் சில பெண்கள் மத்தியில், அந்த உடம்பு வெறும் சதைதான் என்று அலட்சியப் படித்திய என் லதீபா எனக்கு புதுமையாகத் தோன்றினாள்! அவள் உடம்பையும் மீறி அவளது உள்ளம் எனக்குப் புரியத் தொடங்கியது!

"உண்மையான காதல் இருந்ததுன்னா, இந்த மாதரி நாலு பேருக்கு முன்னாடி கேவலமா நடந்துக்கணும் னு தோனாது கீதன் !" என்று மீண்டும் கூறினாள்.

"................................" நான் பேச வார்த்தைகள் இன்றி மௌனமானேன்.

"நான் உங்களை இப்படித்தான் எதிர் பார்க்கிறேன் கீதன். உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே..?"

"இல்லை லதீபா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை." தெளிவாகவே கூறினேன். உடனே அவள்,

"சத்தியம் பண்ணுங்க!" என்று தனது கையை நீட்டி கேட்டாள்.

எனக்கு அது கொஞ்சம் அனாவசியமாகத் தோன்றியது,

"சத்தியமெல்லாம் எதுக்கு? நான் எதுவும் தப்பா நடந்துக்க மாட்டேன். என்ன நம்பு, ப்ளீஸ்!"

"இல்ல, நீங்க சத்தியம் பண்ணுங்க!" என்று அவள் பிடிவாதமாக கேட்க, நானும் சத்தியம் செய்து கொடுத்தேன்.

அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட நிம்மதி தோன்றியது.

இன்னும் அவள் பேசிய பல விஷயங்களில் இருந்து, அவள் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்பது புரிந்தது.

நானும் அவளை "என் லதீபா" என்று முழுமையாக ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு, அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று என் மனதில் இருந்த எண்ணம், தலை தெறிக்க ஓடிவிட்டது என்பது உண்மைதான் !

சிறிது நேரத்திற்குப் பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது...

"அதுக்குள்ள எழுந்துட்டா எப்படி....? சுண்டல் சாப்பிட்டுப் போறது...!"

என்ற கரடு முரடான குரலுடன், நாங்கள் அமர்ந்திருந்த படகுக்குப் பின்னாலிருந்து ஒருவன் வந்தான் !

அவன் பேசும் தோரணையும், அவனது உருவமும் சினிமாவில் வரும் வில்லனைப் போல் இருந்தது...

அவனைப் பார்த்ததும், லதீபா பயந்து என் அருகில் ஒதுங்கினாள்...

என் லதீபாவை ஒரு மாதரியாகப் பார்த்துக் கொண்டே... அவன் பேசிய இரட்டை அர்த்த வசனங்கள் எனக்குள் ஆத்திரத்தைத் தூண்டியது...!
SOMTHING HERE:

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••9
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:13 am
தொடர்ச்சி-08

"அதுக்குள்ள எழுந்துட்டா எப்படி?... சுண்டல் சாப்டுட்டுப் போறது!"

என்ற குரலைக் கேட்டதும் நாங்கள் இருவருமே அதிர்ந்து போனோம்! லதீபா, ரொம்பவே பயந்து நடுங்கினாள்.

எனக்கோ அவனைப் பார்ப்பதற்கே ஆத்திரம் போட்டுக்கொண்டு வந்தது. அப்படியே ஓங்கி மூஞ்சியில ஒரு குத்து விடலாமா என்று இருந்தது!

"கோச்சிக்காதீங்க தலைவா! நான் இப்ப தான் வந்தேன்! அதுக்குள்ள இப்படி வேர்த்துப் போயிட்டீங்க? பீச்சுக்குப் புதுசா?"- என்று கேட்டுக்கொண்டே லதீபாவை ஒரு மாதரியாகப் பார்த்தான்.

"ஹலோ! உனக்கு என்ன வேணும் இப்போ? ஏன் தேவை இல்லாம இப்படி பேசிக்கிட்டு இருக்கே?" என்று ஆத்திரத்தோடு நான் கேட்க,

"ஐயயோ... நான் அப்படி என்ன பெருசா கேட்டுடப் போறேன்... கேட்டாலும் குடுத்துடவாப் போறீங்க.... சுண்டல் சாப்ட்டீங்கன்னா போதும்!" என்று பேசிக்கொண்டே இரண்டு சுண்டல் பொட்டணங்களை எடுத்து இருவர் கையிலும் வலுக்கட்டாயமாக திணித்தான்.

"ஏம்பா... இப்படி அநாகரீகமா நடந்துக்கரியே, இது உனக்கே அநியாயமாத் தெரியலையா?"

"என்னது அநியாயமா? நான் பண்ணுறதா?... சார் காமெடி பண்ணாதீங்க சார்! சும்மா பைசாவா எடுங்க சார்." என்று கேலியாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

"அதெல்லாம் எங்களுக்கு சுண்டல் ஒண்ணும் வேண்டாம். நாங்க கெளம்புறோம்." என்றேன் நான்.

""அப்படியெல்லாம் சுண்டல் சாப்பிடாம நீங்க போக முடியாது சார்!"

"என்னது போக முடியாதா? என்னடா பண்ணுவே...?" என்று நான் ஆத்திரத்தோடு கேட்டதும்,

"கீதன், பேசாம காசை குடுத்துட்டு வாங்க. பிரச்சினை வேண்டாம்" என்று லதீபா என்னைத் தடுத்தாள்,

"ஐயயோ...! சார், நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக் கிட்டீங்க சார். நான் போக முடியாதுன்னு சொல்லல சார். இவ்வளவு நேரம் 'கடலை போட்டீங்கள்ள... இப்ப, கடலை சாப்பிடுங்க! இதைத் தான் சொல்ல வந்தேன் சார். அதுக்குப் போயி இப்படிக் கோவப்படுறீங்களே.... அக்கா சொல்லுக்கா!" என்று லதீபாவையும் பஞ்சாயத்துக்கு அழைத்தான்.

"போனாப் போகுது குடுத்துட்டு வாங்க" என்று லதீபா சொன்னவுடன், அவனுக்கு காசைக் கொடுத்து விட்டு இருவரும் அங்கிருந்து வெளியேறினோம்.!!

வரும் போது, "எனக்கு அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கு கீதன்!. இந்தமாதரி ஆளுங்க கிட்ட எல்லாம் பிரச்சினை வச்சிக்காதீங்க. நாளைக்கு பசங்களை சேர்த்து கிட்டு ஏதாவது பன்னாலும் பண்ணுவாங்க!" என்று லதீபா எனக்கு எச்சரிக்கைக் கொடுத்தாள். நான் அப்போது அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் நாளடைவில்... அவள் கூறியது போலவே, அவனும் எங்களை பின் தொடரத் தொடங்கினான்...!!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••10
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:14 am
தொடர்ச்சி-09

சினிமா, பீச், பார்க் என்றெல்லாம் நாங்கள் சுற்றித் திரிந்தாலும் எங்கள் காதல் எல்லை மீறாமலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் ஒவ்வொரு முறை மெரினா பீச்சுக்கு செல்லும் போதும், எப்படியாவது.... எங்கிருந்தாவது அந்த சுண்டல்காரன் எங்களை கவனிப்பதும், சுண்டல் வாங்கச் சொல்லி வற்புறுத்துவதும் தொடர்ந்து கொண்டிருந்தது!

அதனால்...

"இனிமேல் மெரீனாவுக்கு செல்ல வேண்டாம் 'கோவளம்' செல்லலாம், "அங்கு தான் யாரும் இருக்க மாட்டார்கள், எந்தத் தொந்தரவும் இருக்காது" என்று கூறி லதீபா என்னை கோவளத்திற்கு அழைத்துச் சென்றாள்.

கடற்கரை மணலில் நீண்ட நேரம் இருவரும் நடந்தோம்.... ஏதேதோ கற்பனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டாள். இந்த சந்திப்பின் போது அந்தரங்கமான விஷயங்களைக் கூட மறை முகமாக அவள் பேசத் துவங்கியதை நான் உணர்ந்தேன். எங்கள் காதல் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகிக் கொண்டிருந்தது!...

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று...

"கடலில் குளித்து விளையாடலாமா கீதன்?" என்று கேட்டாள். எனக்கோ ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பிறகு இருவரும் கடலுக்குள் இறங்கினோம். லதீபா கடலுக்குள் நீண்ட தூரம் வரை சாதாரணமாக சென்று வந்தாள். பெரிய அலைகள் வரும் போது பயந்து அடித்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள். அவளது குழந்தைத் தனமான விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டு, நானும் 'ஆவலோடு' விளையாடத் தொடங்கினேன். ஆனாலும் அவளைத் தொட்டுவிடக் கூடாதே என்பதிலும் கவனமாக இருந்தேன்...

நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவள், திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டு கீழே விழுந்து விட்டாள்!

நானோ ஓடிச்சென்று அவளைத் தூக்கினேன். சத்தியமாக இரண்டு விரலால் தான் அவளைப் பிடித்து தூக்கினேன்.

ஆனால், அவள் முகம் கோபத்தில் சிவந்தது!

நான் அவளைப் பிடித்திருந்த கையையும், என்னையும் மாறி மாறிப் பார்த்தவள்,

"கையை எடுங்க முதல்ல!" என்றாள்.

"சாரி லதீபா! நீ கீழே விழுந்துட்டே... அதான்..."

"கையை எடுங்கன்னு சொல்லுறேன்-ல..!" அவள் கோபத்தோடு கூறவும் நான் எனது கையை எடுத்துக் கொண்டேன்.

அவள் எழுந்து தனது உடைகளை சரி செய்து கொண்டு...

"கெளம்பலாம்... டைம் ஆகிடுச்சி!" என்றாள்.

"என்ன லதீபா, இப்ப தானே வந்தோம். நீதானே விளையாடனும்-னு சொன்னே... கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமே.."

"ஆமா, பெரிசா விளையாண்டதெல்லாம் போதும்.! இப்ப நீங்க வறீங்களா? இல்லை நான் கெளம்பட்டுமா?"

இதற்கு மேல் அவள் பிடிவாதத்தை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த நான், எதுவும் பேச முடியாமல் அவளோடு கிளம்பினேன்.

"என் புத்தியை செருப்பாலயே அடிச்சிக்கணும்! அவள் தான் ஆரம்பத்திலேயே இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று கட்டளை போட்டிருந்தாலே. பிறகு ஏன் நான் அவளைத் தொட்டிருக்க வேண்டும்" என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.

ஆனால், அவள் கோபமாக அங்கிருந்து கிளம்பினாளே தவிர, வரும் போதெல்லாம்... எப்போதும் போல, இயல்பாகவே என்னிடம் நடந்து கொண்டாள். எனக்குத் தான் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

ஆனால், இந்த நிகழ்வைப் பற்றி, பின்பு ஒரு நாள் அவள் என்னிடம் குறிப்பிட்டுக் காட்டிய போது, எனக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கியது!!

என்னை மன்னித்துவிடு லத்..தீ..ப்பா!!

தொடரும்...

Message reputation : 100% (6 votes)
Admin•••11
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:16 am
தொடர்ச்சி-10

ஒரு நாள்...

தொலைபேசியில் அவள் தங்கையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். நான் அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். என்னை புகைப்படத்தில் பார்த்திருப்பதாகவும், லதீபாவுக்கு நான் பொருத்தமானவனாக இருப்பதாகவும் என்னிடம் அவள் தெரிவித்தாள். எங்கள் காதல் விவகாரம் அவளுக்கு எப்படி தெரியும் என்ற குழப்பத்துடன் நான் லதீபாவைப் பார்த்த போது..,

"அவளுக்கு நம்மளோட விஷயம் எல்லாம் தெரியும்!" என்று புன்முறுவலோடு கூறினாள் லதீபா. அப்போது அவளது முகம் வெட்கத்தில் சிவந்து மறைந்தது!

"சரி உன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டே... எப்போ உங்க அப்பாகிட்ட சொல்லப் போறே?" என்று நான் கேட்ட போது,

"அதான் பயமா இருக்கு! அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்.... இருந்தாலும் எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தயக்கமாவே இருக்கு.."

"என் கிட்டயே சொல்லிட்டே... உங்க அப்பாகிட்ட சொல்லுறதுக்கென்ன?"

"நீங்க உங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?"

"நாங்கல்லாம் சிங்கம்-ல...! பர்மிசன்-லாம் கேக்க மாட்டோம். நேரா இழுத்து கிட்டு போயி இவதான் என் பொண்டாட்டின்னு சொல்லுவோம்!"

"எல்லாம் பேச்சில் தான் சிங்கமா?... பாக்கலாம்... பாக்கலாம்... சிங்கம் என்ன பண்ணுதுன்னு பாக்கத்தானே போறேன்!"

"நீ வேணும்-னா இப்ப வரியா? கூட்டிட்டு போயி தாலி கட்டிக் காட்டுறேன்!"

"அய்யய்யோ..! இப்பவேவா?... நான் வரலப்பா...!" -என்று மறுத்தாலும், நான் சொன்ன அந்த வார்த்தைகள் அவளுக்குள் ஒரு இனிய இம்சையைத் தந்திருக்க வேண்டும்...! அதனால் தான் அவள் முகத்தில் அத்தனை ஒளிவட்டங்கள் வந்து, வந்து மறைந்தன... அதன் பிறகு அவள் கொஞ்சம் நெருங்கி வந்து என்னருகில் அமர்ந்ததையும் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை!

இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பேசிக் கொண்டோம்...

திடீரென்று பேச்சை நிறுத்தியவள்...,

"நிஜமாவே என்னை உங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போய், இவதான் நான் கட்டிக்கப் போறவள்-னு சொல்லுவீ ங்களா? கீதன்?"

"ஏன் அப்படிக் கேக்குறே?"

"இல்ல... கொஞ்ச நாளாவே, என மனசுக்குள்ள ஒரு பட படப்பு இருக்கு கீதன். ஒருவேளை... நம்ம காதலை என் அப்பாகிட்ட எப்படி சொல்லுறதுன்னு நெனச்சதுனாலா? இல்லை வேற மாதரி எதுவும் நடந்திடுமான்னு ஒரே பதட்டமா இருக்கு கீதன்!"

"அதெல்லாம் நீ எதுக்கும் கவலைப் படாதே லதீபா, என்ன நடந்தாலும் நான் உன்னைக் கைவிட மாட்டேன்."

"சத்தியம் பண்ணுங்க!"

"என்ன லதீபா... எதுக்கெடுத்தாலும் சத்தியம் சத்தியம்-னு... என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? நீ பேசுறதைப் பார்த்தால் நீ தான் என்னை விட்டுட்டு போய்டுவே-னு நினைக்கிறேன்!"

"என்ன கீதன் அப்படி சொல்லிட்டீங்க...? உங்க கையில்தான் என் வாழ்க்கையே இருக்கு. நான் உங்களை நம்பித்தான் இருக்கேன். நான் உங்களை விட்டுட்டு போய்டுவேனா கீதன்?... ஏன் இப்படி பேசுறீங்க?"

"............................"

"நான் உங்க மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கேன்னு, என்னால இப்ப நிரூபிக்க முடியாது கீதன். ஆனா, எப்பவும் நான் உங்க வார்த்தைக்கு தான் கட்டுப்படுவேன். இது சத்தியம்!"

"இப்ப ஏன் தேவை இல்லாம இப்படி எல்லாம் பேசிக் கிட்டு இருக்கே? நீ என்னமோ பெரிய கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு மாதரியும், உங்க அப்பா உன்னை எனக்கு தர மாட்டேன்னு சொல்லுரமாதரியும் இல்ல இருக்கு நீ சொல்லுறது.! அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நம்ம காதலுக்கு யாருமே எதிரிகள் கிடையாது. நம்மை யாராலும் பிரிக்கவும் முடியாது! நீ சும்மா மனசைப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா இரு!"

என்று நான் சொன்ன போது, லதீபா ஒரு திசையை சுட்டிக் காட்டினாள்... அவள் பார்க்கும் திசையை நோக்கிய போது, அங்கு... எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சுண்டல்காரன்!!

எனக்கு சிரிப்பு தான் வந்தது,..

"என்ன லதீபா, இவனுக்கா பயப்படுறே...? இவனெல்லாம், சந்தர்பத்தைப் பயன்படுத்தி வியாபாரம் பண்ணிக்கற ஒரு சாதாரண ஆளு. இவனைப் போயி பெரிசா எடுத்துகிட்டு....."

"இல்லை கீதன், அவன் ஏன் நம்மளையே கவனிச்சிக்கிட்டு இருக்கான்?"

"இத பாரு லதீபா, இந்த சென்னையில நம்மளை யாரும் சீண்டக்கூட முடியாது. உனக்கு தெரியுமா? மேல ஆகாயத்துல நான் ஒரு சாட்டிலைட் வச்சிருக்கேன், அந்த சாட்டிலைட் 'கூகுல் மேப்' மாதரி! 24 HOURS நம்மளை வாட்ச் பண்ணிகிட்டே இருக்குது. அதுல நான் ஒரு புரோகிராம் பண்ணி வச்சிருக்கேன். அதாவது 100அடி தூரத்துல இருந்து யாராவது நம்மள தாக்க வந்தாங்கன்னா, அந்த சாட்டிலைட் என்னோட மொபைலுக்கு ஒரு எச்சரிக்கை மணி கொடுக்கும்.! அது மட்டுமில்ல.... இங்க நடக்குற எல்லாத்தையும் வீடியோவா, என்னோட வெப்சைட்டுல பதிஞ்சு வச்சிடும். இதுக்கு மேல உனக்கு என்ன பாதுகாப்பு வேணும்?"

"உங்களுக்கு எல்லாத்துலயுமே விளையாட்டு தான் கீதன்!"

"பின்ன என்ன....? ஒரு சுண்டல் காரனைப் பார்த்து பயந்தா என்ன பண்ண சொல்லுறே...?" என்று நான் அவளை கிண்டல் செய்து கொண்டிருக்க, அவளது மொபைலுக்கு அழைப்பு வந்தது....

"கீதன், எங்க அப்பாதான் பண்ணுறார்! என்னவா இருக்கும்?"

"ஆரம்பிச்சிட்டியா..? எதுக்கெடுத்தாலும் உனக்கு பயம் தானா? முதல்ல போனை எடுத்து என்னன்னு கேளு."

அவள் பேசினாள்...

"..........................." (பேசிவிட்டு...)

"கீதன், அப்பா என்னை ஊருக்கு வர சொல்லுறார்...!"

"என்னவாம்?"

"தெரியல, வாம்மா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்-னு சொன்னாரு..."

"அப்பறம் என்ன? ஊருக்கு போயி முதல்ல நம்ம விசயத்தைப் பத்தி பேசிடு."

"நானும் அப்படித்தான் நினைச்சி கிட்டு இருக்கேன் கீதன்."

"கவலைப் படாம போயிட்டு வா." என்று சொன்னதும், அவளும் 'சரி' என்று கூறினாள். சிறிது நேரம் கழித்து எனக்குள்ளும் ஒரு வித பயம் தோன்றியது...

"லதீபா!"

"என்ன கீதன்?"

"ஊருல... உனக்கு யாராவது முறைப்பையன் இருக்கானா?"

"இல்லையே... ஏன் கேக்குறீங்க?"

"ப்ச்! ஒன்னும் இல்லை!"

"பார்த்தீங்களா... நீங்களே பயப்படுறீங்க..?"

"இது பயம் இல்ல.... ச்சும்மா!"

(அவள் ஊருக்கு சென்று வந்ததும், எங்கள் வாழ்க்கை திசை மறந்து போய்விடும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை!!)

தொடரும்...!

Message reputation : 100% (6 votes)
Admin•••12
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:19 am
தொடர்ச்சி-11

குறிப்பு: இது வெறும் கதை மட்டும் தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஊரிலிருந்து வந்து சேர்ந்த லதீபாவை சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்து வந்தேன். (அப்போதெல்லாம் கோயம்பேடு டெப்போ இல்லை!)

ஏனோ தெரியவில்லை, லதீபா என்னை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்த்தாள்! பிரிந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான் "அந்தப்பார்வை" என்பது எனக்கு அப்போது தெரியவில்லை!!

ஒரு வாரம் பிரிந்து இருந்ததனால் தான் நம்மை அப்படிப் பார்க்கின்றாள் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் 'அந்தப்பார்வை'யின் ஏக்கங்களும், தவிப்புகளும் பின்பு தான் எனக்குப் புரியத் தொடங்கியது!

"எங்கள் காதலை அவள் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்" என்று ஊருக்கு சென்றவளுக்கு, அங்கே என்ன அதிர்ச்சி காத்திருந்தது(?) என்பதும் எனக்குப் பின்பு தான் புரிந்தது!

என்னோடு வாழவேண்டும் என்பதில் அவளுக்குத் தான் எவ்வளவு ஆசை இருந்திருக்கிறது....

காலம் சென்ற பின்பு தான் எனக்கும் அது புரிந்தது.!!

ஒருவேளை....

நான் தான் அவளை தொலைத்து விட்டேனோ?...

ஆரம்பம் முதல் அவள் பயந்து கொண்டே இருந்தாளே....

நான் தான் அவளை அலட்சியப் படுத்தி விட்டேனோ?...

எனக்குத் தெரியவில்லை!!

இதோ! எனக்குள் பலவித மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது!

எனது விரல்கள், முறையாக எழுது கோலைப் பிடிக்க மறுக்கின்றன!...

என்ன எழுதுகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. என் கண்கள் பார்வையை இழக்கத் தொடங்கி விட்டன!

மரணம் என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது!!

ஆம்! இன்னும் சில மணித்துளிகளில் நான் இறந்து விடுவேன்!!

இது வரை நான் வாழ்ந்தது அவளுக்காகவே!
என் வாழ்க்கையை, அவளது நினைவுகளுக்காகவே அர்ப்பணித்து விட்டேன்!
நான் இறக்கும் இந்தக் கடைசி நிமிடத்திலும் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்!

இது தான், நான் அவளுக்கு செய்த துரோகத்திற்கான(?) தண்டனை!!

இந்தக் கதையை சொல்லி முடிக்கும் வரை எனது மரணம் தள்ளிப் போகுமானால்... அது எனக்கு நிம்மதியைத் தரும்!

காலம் பதில் சொல்லட்டும்!!


பேருந்தை விட்டு இறங்கியதும், என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த லதீபாவிடம்...

"என்ன லதீபா, அப்படிப் பாக்குறே?" என்றேன்.

"ஒன்னும் இல்லை. சும்மாதான்! ஏன் பார்க்கக் கூடாதா?" என்று கேட்டாள்.

"ம்ம்.. பாக்கலாமே... சரி, ஊருக்குப் போனியே.. எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்... இருக்காங்க."

"உங்க அப்பாகிட்ட நம்ம விசயத்தைப் பத்தி சொல்லிட்டியா?

"ம்ம்... சொல்லிட்டேன்."

"என்ன சொன்னாரு? என் மாமனார்!"

இப்போது லதீபா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்...

"சொல்லு லதீபா... என்ன சொன்னாரு?" நான் மீண்டும் கேட்டேன்.

உடனே அவள் என்னைப் பார்ப்பதை தடை செய்து கொண்டு... சிறிது நேர அமைதிக்குப் பின்...

"உங்க மேல.... எங்க அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை கீதன்!" என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

"என்ன சொல்லுறே லதீபா? ஏன் அவருக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"

"சென்னையில இருக்குற பசங்க எல்லாம், காதலிச்சு ஊரு சுத்த தான் நினைப்பாங்கலாம். கல்யாணம்-னு சொன்னா ஒதுங்கிடுவாங்கலாம்...."

அவள் இப்படி சொன்னதும் எனக்கு கோபம் தான் வந்தது.

"ஏய்! யாருகிட்டப் பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?"

"........................."

"நான் உன்கிட்ட அப்படி என்னடி தப்பா நடந்து கிட்டேன்?"

லதீபா மீண்டும் என்னைப் பார்ப்பதை தவிர்த்து, வேறு பக்கம் திரும்பிக் கொண்டு...

"நீங்க தப்பா நடந்துக்கலைன்னு எனக்குத் தெரியும். ஆனா இதையெல்லாம் நான் எங்க அப்பாகிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கிறது? அதனால...."

"அதனால?"

".................."

"அதனால... என்ன சொல்லப் போறே....?

".........................."

"ஏய்! முதல்ல என்னைப் பார்த்துப் பேசு..." என்று நான் அவளை என் பக்கம் திருப்பினேன். ஆனால் அவள் என்னைப் பார்க்க மறுத்து விட்டாள்,

"சாரி கீதன்! என்னால உங்களைப் பார்க்க முடியல!"

"பார்க்க முடியலையா? இல்ல பார்க்கப் பிடிக்கலையா?"

"ப்ளீஸ் கீதன் ! என்னை அப்படியெல்லாம் கேக்காதீங்க. நான் அழுதுடுவேன் கீதன்!"

"அழுடி!... எல்லாப் பொம்பளைங்களும் இப்படித் தானே ஏமாத்துறீங்க? நல்லா அழு!"

இப்போது லதீபா ஆத்திரப்பட்டாள்,

"என்ன சொல்ல வரேன்னு முழுசா கேக்காம, ஏன் கீதன் இப்படி தப்பு தப்பா பேசுறீங்க?" என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். அதுவரை தேக்கி வைத்திருந்த அவளது கண்ணீர் இப்போது கரை தேடியது!

ஏன் அழுகிறாள் என்பது புரியாமல்,

"சரி சொல்லு! என்ன சொல்ல வரே?" என்றேன் அதே கோபத்தோடு.

லதீபா, மீண்டும் பெருமூச்சு விட்டு... தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அழுத்தமாகக் கூறினாள்...

"அதனால..., நீங்க அன்னைக்கு சொன்ன மாதரி.... என்னை உங்க அம்மா கிட்ட அழைச்சு கிட்டு போயி, எனக்குத் தாலி கட்டுங்க!!..."

தொடரும்!...

Message reputation : 100% (5 votes)
Admin•••13
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:20 am
தொடர்ச்சி-12

"நீங்க அன்னைக்கு சொன்ன மாதரி , என்னை உங்க வீட்டுக்கு அழைச்சு கிட்டு போயி எனக்கு தாலி கட்டுங்க!"

லதீபா இப்படி கூறுவாள் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை!

"என்ன லதீபா சொல்லுறே?"

"ஆமா! நெஜமாத்தான் சொல்லுறேன்!"

"இப்ப ஏன் இப்படி அவசரப்படுறே? நான் வேனும்ன உங்க அப்பா கிட்ட பேசி புரிய வைக்கிறேன் லதீபா."

"இல்ல கீதன், இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை! நீங்க உடனே எனக்கு தாலி கட்டுங்க.!" என்று மிகவும் அழுத்தமாகக் கூறினாள்.

"ஏன் லதீபா? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?"

"ஐயோ கீதன்...! உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே..."

"இல்ல லதீபா, உங்க அப்பா இல்லாம நாம எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? அது தப்பில்லையா?"

"இல்லை கீதன்! எங்க அப்பா உங்களைப் பத்தி தப்பா நினைசிகிட்டு இருக்காங்கல்ல, அதானால... நான் தப்பான ஒரு பையன் கூட பழகலன்னு அவங்களுக்கு நிரூபிக்கணும்.! அதான், அவங்களுக்கு தெரியாமலே தாலி கட்டிக்கிட்டு அவங்க முன்னாடி போயி நிக்கணும்!!"

"............................."

"என்ன கீதன் யோசிக்கிறீங்க?"

"ஒன்னும் இல்ல லதீபா! நீ இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்பறம் நானும் என்னை நிரூபிச்சிக் காட்டனும்! எங்க வீட்டுக்கு போகலாம் வா!" -என்று நான் சொன்னதும் லதீபாவின் முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை! எதையோ சாதித்துவிட்ட நிம்மதி அவள் முகத்தில் தெரிந்தது.

அதே சந்தோசத்தோடு, அன்று இரவே இருவரும் எங்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம்!

வீட்டிற்கு சென்றதும், என் அம்மாவிடம் லதீபாவை என் தோழி என்று தான் அறிமுகம் செய்து வைத்தேன்.

என் அம்மாவும் அதை நம்பி மிகவும் அன்போடு உபசரித்து, பாசத்தோடு பழகினார்.

"பாத்தியாம்மா என் பையனை... யாருகிட்டயும் பேசவே கூச்சப் படுவான். ஆனா இன்னைக்கு, தோழின்னு ஒரு பொண்ணையே வீட்டுக்கு அழைசிக் கிட்டு வந்திருக்கான்."

"அதுவும் மகாலட்சுமி மாதரி நல்லா லட்சணமா இருக்கேம்மா"

"வெள்ளிக் கிழமையும் அதுவுமா வந்திருக்கே. ஒரு 10 நாளைக்கு தங்கிட்டு தான் போகணும்!"

ஏனோ தெரியவில்லை என் அம்மாவுக்கு லதீபாவைப் பார்த்தவுடனே பிடித்துப் போய் விட்டது.

..ம்கும்..! யாருக்குத் தான் பிடிக்காது அந்த அழகு முகத்தை!!

அன்று இரவு லதீபா என் அம்மாவுடனேயே படுத்துக் கொண்டாள். நீண்ட நேரம் இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்...

என் அம்மாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று நானும் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் எப்படியோ தூக்கிப் போனேன், அடுத்தடுத்த நாட்களில் ஏற்படப் போகும் அபாயம் தெரியாமல்!!

விடிந்ததும் லதீபா வந்து என்னை எழுப்பினாள்...

"கீதன்!... எழுந்திரிங்க...."

"சோம்பல் முறித்து... எழுந்து லதீபாவைப் பார்த்தேன். அதற்குள் அவள் குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி வைத்து ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு என் அருகில் அமர்ந்திருந்தாள்!

பெண்கள் குளித்து முடித்து ஈரத்தலையுடன், சொட்டு சொட்டாக வடியும் தண்ணீருடன் பார்க்கும் போது இருக்கும் அழகே தனி தான்!

"என்ன லதீபா, இன்னைக்கு ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே!"

"ம்ம்... இருக்கும் இருக்கும்.!... முதல்ல எழுந்திரிச்சி குளிங்க"

"சாரி லதீபா, அம்மாகிட்ட உன்னை பிரண்டுன்னு சொல்லிட்டேன். கொஞ்சம் பொறுத்துக்கோ ரெண்டு நாள்ல சொல்லிடுறேன்..."

"என்னமோ சிங்கம்... அப்படி இப்படின்னு ஏதேதோ சொன்னீங்க..?"

"சொன்னேன்... ஆனா...." என்று நான் இழுக்கும் போது... அங்கே அன் அம்மா வந்து விட்டார்...

கோபத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்...

"யாருடா அந்தப் பொண்ணு?"

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••14
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:27 am
தொடர்ச்சி-13

"யாருடா அந்தப் பொண்ணு?" என்று அம்மா கேட்டதும் நான் ஒரு நிமிடம் ஆடிப் போனேன்!

"அம்மா... அது... வந்து..." லதீபாவையும் என் அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

"என்னடா வந்து... போயின்னு இழுக்குரே...? அதான் அழைச்சிக்கிட்டு வந்துட்டியே, அதை சொல்ல வேண்டியது தானே!?"

"அம்மா!.."

"ஆமாண்டா, எனக்கு ராத்திரியே எல்லாம் தெரியும். பாவம், அந்த பொண்ணுக்கு இருக்குற துணிச்சல் கூட உனக்கு இல்லையே. நீயெல்லாம் ஏண்டா லவ் பண்ணுரே?"

"அம்மா... அப்படின்னா உனக்கு சம்மதமா?"

"உன் கூட சேர்ந்து, அவளும் பிரண்டுன்னு சொல்லாம, ராத்திரியே உண்மையை சொன்னாலே... அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவதான் என் மருமகள்-னு"

"அம்மான்னா... அம்மாதான்!" என்று என் அம்மாவை நான் கொஞ்சப் போக..,

"டேய்! டேய்! இருடா... நான் தான் சம்மதம் கொடுத்துட்டேனே.. அப்பறம் ஏன் இப்படி ஐஸ் வைக்கிறே?.."

"போம்மா... எனக்கு வெக்கமா இருக்கு" என்று நான் உள்ளே சென்று விட்டேன்.

"என் புள்ளைக்கு வெக்கத்தைப் பாருடியம்மா...?" என்று லதீபாவிடம் கிண்டல் செய்ய,

"போங்க அத்தை, எனக்கும் வெக்கமா இருக்கு" என்று அவளும் உள்ளே சென்று விட்டாள்.

"போச்சுடா! உனக்கும் வெக்கம் வந்துடுச்சா? சரி.. சரி.. ரெண்டு பேரும் வெக்கப்பட்டது போதும்... சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புங்க. பக்கத்துல இருக்குற கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்" என்று சொல்ல, நாங்கள் கோவிலுக்கு செல்லத் தயாரானோம்.

என் அம்மா, கோவில் பூசாரியிடம் விஷயத்தை கூறி திருமணத் தேதி குறித்தார். பூசாரி நேரம் குறிப்பதற்குள் லதீபா ரொம்பவே அவசரப்பட்டாள்! எனவே மறு நாளே பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்!

"என் மீது லதீபாவுக்கு சந்தேகம் இருக்கிறது! அதை தான், அவள் தனது அப்பாவுக்கு என் மீது சந்தேகம் என்று பொய் சொல்லி இப்படி நாடகம் நடத்துகிறாள்." என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவள் நடத்திய அந்த நாடகம்(?) எதற்காக என்று நினைக்கும் போது, எனக்கு தொண்டைக்குழி அடைக்கிறது! அவளுக்குத்தான் என்னோடு வாழவேண்டும் என்பதில் எவ்வளவு ஆசைகள்!

பாவம்! அவளுக்காக இனிமேல் என்னால் கண்ணீர் வடிக்கக்கூட முடியாது என்று நினைக்கும் போது வேதனையாகவே இருக்கிறது!



றுநாள் காலை, நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். லதீபா என்னை வந்து எழுப்பினாள்,

"கீதன்! எழுந்திரிங்க 7 மணியாகுது!"

நான் கண் விழித்துப் பார்த்தபோது, முதல் நாள் பார்த்தது போல,அதே ஈரத்தலையுடன்... ஆனால் இன்று, அளவுக்கு அதிகமான சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது!

"ஹலோ! எழுந்திரிங்க... இன்னைக்கு நமக்கு கல்யாணம்! இணைக்கும் இப்படி தூக்கமா? தூங்கு மூஞ்சி!"

நான் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்,

அவள் "என்ன அப்படிப் பாக்குறீங்க" என்பது போல, தனது புருவத்தை உயர்த்தி சிறிய புன்னகையுடன் ஜாடை செய்தாள்.

எங்கிருந்தோ வந்த தைரியத்தினாலோ அல்லது அவள் முக வசீகரத்தினாலோ தெரியவில்லை, அவள் எதிர்பார்க்காத வண்ணம் நான் அவளை கட்டிப்பிடித்தேன். ஆனால் அவள் விசும்பியதனால் அவள் கைகள் மட்டுமே என்னிடம் மாட்டிக் கொண்டன...

"என்ன கீதன் இது! அத்தை இருக்காங்க... கையை விடுங்க!" என்று கூறிக்கொண்டு, கட்டிலுக்குக் கீழே உட்கார்ந்து கொண்டாள், அவள் முகமும் என் முகமும் அருகருகே இருந்தது....

"இப்ப கையைப் பிடிக்காதீங்கணு சொல்லுரியா? இல்ல அம்மா இருக்குறதால பிடிக்க வேண்டாம்னு சொல்லுரியா?" என்று நான் அவளைக் கிண்டல் செய்ய,

"அதான் நமக்கு கல்யாணம் ஆகப்போகுதுள்ள.. அதுக்குள்ள என்ன அவசரம்? கையை விடுங்க கீதன்."

"அதான் நமக்கு கல்யாணம் ஆகப்போகுதே... அப்பறம் ஏன் இப்படி பிகு பண்ணுரே? கொஞ்சம் கிட்ட வாயேன்...?"

"ஆமா, ஆமா, ஐயாவுக்கு இப்பதான் எல்லாம் தோணுதோ....? எல்லா பசங்களுக்கும் லவ் பண்ணும் போதுதான் இதெல்லாம் பண்ணனும்-னு தோணும்...." என்று அவள் சொன்னதும் எனக்கு கோபம் வந்தது...

"ஏய்... என்ன விளையாடுரியா? நீதானே தொடக்கூடாது, அப்படி இப்படின்னு ஏதேதோ கண்டிஷன் எல்லாம் போட்டே."

"நாங்க அப்படித்தான் சொல்லுவோம். ஆனா, நீங்கதான் அப்படி இப்படின்னு ஏதாவது காரணத்தை வச்சி கிட்டு வரணும்..." என்று குறும்பாக என்னைப் பார்த்து சிரித்தாள்.

"ரொம்ப மோசமானவளுங்கடி நீங்க எல்லாம்."

"என்ன மோசமானவளுங்க?.. நான் என்ன சொன்னேன்... நாலு பேருக்கு முன்னாடி அப்படி நடந்துக்கறது அநாகரீகம்-னு தானே சொன்னேன். அதுக்காக இப்படி சாமியாரு மாதரியா இருக்க சொன்னேன்?"

"ம்‌ம்... அப்ப..ற..ம்....?"

"உங்க கூட தனியா இருக்கும் போதெல்லாம், இப்படிக் கட்டிப் பிடிக்க மாட்டீங்களா? கிஸ் பண்ண மாட்டீங்களா-னு எத்தனை நாள் நான் தவிச்சிருப்பேன் தெரியுமா? அது கூடவா ஒரு ஆம்பளைக்குத் தெரியாது?" என்று ரொம்ப ஏக்கத்தோடு கூறினாள்.

"சரி... இவ்வளவு தவிப்பெல்லாம் சொல்லுரியே.... அன்னைக்கு "கோவளம்" பீச்சுல நாம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம். அப்ப என்னவோ நான் உன் கையை பிடிச்சதுக்காக, நீ எவ்வளவு கோவப்பட்டே? உடனே அங்க இருந்து கிளம்பி வரல நீ? அது ஏன் அப்படி நடந்து கிட்ட?"

"பின்னே கோவம் வராதா? நானே எவ்வளவு ஆசையோட அங்க உங்களைக் கூட்டிக்கிட்டு போனேன் தெரியுமா?... நான் ஒண்ணும் அப்ப தடுமாறி கீழே விழல, வேணும்-னு தான் விழுந்தேன்... நான் விழுந்ததே நீங்க என்னை வந்து தூக்கணும்-னு தான் தெரியுமா?..."

"இவ்வளவும் பண்ணிட்டு அப்பறம் ஏன் கோபமா எழுந்து வந்தே... நான் உன்னை ரெண்டு விரலாலதானே தொட்டேன்?"
SOMETHING HERE:

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••15
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:32 am
தொடர்ச்சி-14

"யோவ்! பின்னே கோபம் வராதா? நான் விழுந்ததே, நீங்க தூக்கணும் அப்படிங்கறதுக்காகத் தான். கீழே விழுந்த உடனே வந்து கட்டிப் பிடிச்சி தூக்காம, என்னமோ பூச்சியைப் பிடிக்கிற மாதரி ரெண்டு விரலாள தொட்டா கோபம் வராதா....?"

என்று லதீபா சொன்னதும் இருவருமே சிரித்தோம்.

"சரி, இன்னும் என்னல்லாம் ஆசைகள் இருந்தது உனக்கு கொஞ்சம் சொல்லேன் கேக்கலாம்"

"அதெல்லாம் சொல்ல முடியாது!"

"ப்ளீஸ் லதீபா சொல்லு "

"சொல்லனுமா?..."

"ம்ம்..."

"கண்டிப்பா சொல்லனுமா?..."

"ம்ம்..."

"கிட்ட வாங்களேன்..."

நானும் ஆசையோடு அவளருகில் சென்று... "சொல்லு " என்றேன்.

அவளும் என் காதருகே வந்து ரகசியமாக...
SOMETHING HERE...:

என்று சொல்லி விட்டு எழுந்து ஓடி விட்டாள்.

அவள் வெட்கப்பட்டு ஓடியதை ரசித்துக் கொண்டேன்.

ஹலோ, பீல் பண்ணினது போதும், எழுந்து சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. என்று கூறிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு சென்றாள்...

குளித்துவிட்டு கிளம்பி வந்த போது...
பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூ அலங்காரத்துடன் ஒரு தேவதையாக காட்சி தந்தாள் என் லதீபா!

அப்படியே அவளை கட்டியணைக்க வேண்டும் போல இருந்தது ஆனால், என் அம்மா அருகில் இருந்ததனால் என்னால் அதை செய்ய முடிய வில்லை.

"என்னடா, அப்படிப் பாக்குறே? லதீபா தாண்டா இது." என்று என் அம்மா என்னை கேலி செய்தார்.

லதீபா வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டாள்.

சரி, சீக்கிரம் போயி கார் எடுத்துகிட்டு வாடா" என்றார் என் அம்மா.

"கார் எல்லாம் எதுக்கு அத்தை? கோவில் பக்கத்துல தானே இருக்கு நடந்தே போயிடலாமே..." என்றால் லதீபா.

"அய்யய்யோ நடந்தா... வேண்டவே வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடந்து போறதை பார்த்து யாராவது கண்ணு வச்சிடுவாங்க. அப்பறம் என் புள்ளைங்களுக்கு திருஷ்டியாகிடும்"

"இல்ல அத்தை, கார் எடுக்கப் போனா... உங்க புள்ளை பேரம் பேசி கார் பிடிக்குறதுக்கு லேட் ஆகும் அதான் சொன்னேன்."

"லேட் ஆனாலும் ஒன்னும் பரவாயில்லை, ஆனா கார்ல தான் போகணும். நீ போயிட்டு வாப்பா."

"சரிம்மா, நான் போயி கார் எடுத்துகிட்டு வரேன்... அது வரைக்கும் உன் மறுமகளை யார் கண்ணும் படாம பத்திரமா பத்துக்கோ." என்று நானும் என் அம்மாவை கேலி செய்ய...

"ஆமாண்டா, என் மருமகளை நான் பாத்துக்கறேன் அதுல உனக்கென்ன பொறாமை?"

லதீபா வெட்கப் பட்டாலும்.... "இப்போதே திருமணம் நடந்து விடாதா?" என்ற அவசரம் அவளுக்கு இருப்பது தெரிந்தது...

"கவலைப் படாதே லதீபா! இன்னும் 1/2 மணி நேரத்தில் நான் உனக்கு கணவனாகி விடுவேன். அதன் பிறகு உனது ஆசைகள் எல்லாம் நிறைவேறி விடும்." -என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

"சீக்கிரம் போயி கார் எடுத்துகிட்டு வாங்க கீதன்!" என்றாள் லதீபா!

அவளுக்குத் தான் என்னோடு வாழ வேண்டும் என்பதில் எவ்வளவு ஆசைகள்....

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••16
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:37 am
தொடர்ச்சி-15

"சீக்கிரம் போயிட்டு வாங்க கீதன்." என்றாள் லதீபா.

நான் அவளைப் பார்த்தேன். எதையோ ஜாடையில் கூறினாள். ஆனால் எனக்கு அது புரியவில்லை. எனவே "என்ன?" என்பது போல நானும் ஜாடையில் கேட்க...

"அடேய்... நான் உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆனவடா...!" என்றார் என் அம்மா.

"இல்லம்மா அது... "

"போடா! போ..., போயி சீக்கிரமா கார் எடுத்துக் கிட்டு வா. உங்க கிச்சு கிச்சு தாம்பளத்தையெல்லாம் அப்புரமா வச்சிக்கோங்க. புரியுதா?..."

லதீபா வெட்கத்தில் தனது தலையில் அடித்துக் கொண்டு புன்னகை சிந்தினாள்...

இது தான்... இந்த சிரிப்பு தான்... என் லதீபாவின் முகத்தில் நான் கடைசியாக பார்த்த புன்னகை!

லதீபா ஆசைப்பட்டது போல, நாங்கள் நடந்தே கோவிலுக்கு சென்றிருந்தால், ஒருவேளை எங்கள் திருமணம் நடந்திருக்கும்! லதீபாவையும் நான் இழந்திருக்க மாட்டேன்.! ஆனால் விதி... எங்கள் வாழ்க்கையில் சதி செய்து விட்டதே....!

நான் இந்த நிமிடம் வரை நினைத்து நினைத்து கண்ணீர் வடிப்பதெல்லாம், அவளுக்கு என்னோடு வாழவேண்டும் என்றிருந்த ஆசையை நினைத்து தான்! அவளுக்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருந்தால் இந்த துணிச்சலான நாடகத்தை நடத்தத் துணிந்திருப்பாள்...! கடைசி நிமிடம் வரை அவள் என் பதிலுக்காக காத்திருந்த "அந்தப்பார்வை" இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது..... கண்ணீர் ததும்பிய "அந்தப்பார்வை"க்குள் எத்தனை ஏக்கங்கள் இருந்தது என்பதும் எனக்குப் புரிந்தது...

ஆனாலும்.... நான் அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே...!?

நான் பாவி தானே!?... ஒரு பெண்ணின் உணர்வுகளைக் காயப்படுத்திய கொடுமைக்காரன் தானே!?

அவளுக்கு இருந்த துணிச்சல் எனக்கில்லையே... நான் கோழை தானே!?

எனக்கு புரியவில்லை!

அதற்காகத்தான்... நான் என் வாழ்க்கையை அழித்துக்கொள்ள முடிவு செய்தேன்!(?)


தீபாவிடம் மீண்டும் ஜாடை காட்டிவிட்டு கார் எடுத்து வரப் புறப்பட்டேன். இப்போது என் அம்மா தன் தலையில் அடித்துக் கொண்டார்... "போடா..."

லதீபா, தனது உதடுகளைக் கடித்து புன்னகையை மறைக்க முயற்சி செய்தாள். ஆனாலும் அது அழகாக வெளிப்பட்டது. அதை ரசித்துக் கொண்டே வெளியேறினேன்...

லதீபா சொன்னது போலவே கார் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆனது. சிறிது நேரத்திற்குப் பிறகு கார் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்... புன்னகை மாறாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்...

எதிரில் வந்த என் அம்மாவின் முகம் கலவரமாக மாறியிருந்தது...!

"தம்பி... எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருப்பா... பேசிக்கலாம்!" என்றார் என் அம்மா.

நான் ஒன்றும் புரியாமல் உள்ளே சென்றேன்..

ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் என் லதீபா!...

நான் வந்ததும் திரும்பி என்னைப் பார்த்தாள். "அந்தப்பார்வை" எனக்குப் புதிதாக இருந்தது!

காதல் ததும்பிய.... மின்னல் மிதந்த... பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்த அந்தக் கண்களுக்குள், இப்படி ஒரு குத்தும் பார்வையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! என்னைப் பிரியும் கடைசி நிமிடம் வரை "அந்தப்பார்வை"யை அவள் வேறு பக்கம் செலுத்தவும் இல்லை. அவளை சந்தித்த முதல் பார்வையில், அவள் என்னை பார்க்கவே தயங்குவாள்... வெட்கப் படுவாள்... ஆனால் இப்போது என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

நான் ஒன்றும் புரியாமல், அவளருகில் சென்றேன்...

"என்னாச்சு லதீபா?" என்றேன்.

நான் கேட்டவுடன் அடக்கி வைத்திருந்த அவளது அழுகை, அவள் உதடுகளைக் கடித்து அடக்க முயன்ற போதும் தெறித்துக் கொண்டு வெளிவந்தது... ஓ! வென்று கதறி அழுதாள்...

அவள் அழுததும் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...

"என்ன லதீபா... சொல்லு ப்ளீஸ்!" என்றேன்.

அப்போது...

"தம்பீ!..." என்று என் அம்மா என்னை அழைத்தார். என் அம்மாவின் முகத்திலும் ஒரு மயான அமைதி இருந்தது!


நண்பர்களே... கொஞ்சம் பொறுங்கள்!
எனக்கு இப்போதே என் உயிர் பிரிந்து விடும் போலிருக்கிறது...
நான் கொஞ்சம் வாய் விட்டு அழுது விட்டு வருகிறேன்....


தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••17
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:45 am
தொடர்ச்சி-16

"தம்பீ!... " என்று என் அம்மா என்னை அழைத்தார்.

நான் திரும்பி பார்த்த போது, பக்கத்து ரூமை நோக்கி கை காட்டினார் என் அம்மா. அந்த ரூமில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்! நான் யாரென்று புரியாமல், என் அம்மாவைப் பார்க்க...

"லதீபாவோட அப்பா!... என்றார் என் அம்மா.

நான் அவரருகில் சென்றேன்....

அவர் முகத்திலும் அதே சோகமும், அதே மயான அமைதியும் தெரிந்தது!

"வாங்க... எப்போ வந்தீங்க?" என்றேன்

அவர் பதிலேதும் கூறாமல், லதீபா பார்த்த அதே குத்தும் பார்வையை அவரும் என் மீது வீசினார்!

"அழாதேம்மா.... அப்பா தானே? இப்ப ஒண்ணும் நடந்திடல... அவருகிட்ட சொல்லாம கல்யாணம் பன்னிக்கறது தப்பும்மா. பெத்தவங்க கோபத்துல ஏதாவது பேசத்தான் செய்வாங்க ..."

"....................................."

"அதான் கீதன் பேசிக்கிட்டு இருக்கான்-ல... நீ கண்ணை துடைச்சிக்கோ. ஒண்ணும் இல்லை... வா நம்ம உள்ளே போகலாம்." என்று என் அம்மா லதீவாவை அழைத்தார்.

ஆனால் லதீபா "வரமாட்டேன்" என்று அடம் பிடித்து, அங்கே இருந்து கொண்டு, என்னையே வெறித்துப் பார்த்தாள்.

அந்தப் பக்கம் லதீபா என்னை வெறித்துப் பார்க்க, இங்கே அவளுடைய அப்பாவும் என்னை வெறித்துப் பார்க்க... இருவருடைய "அந்தப்பார்வை"களும் என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியதைப் போல இருந்தது!

இப்போது, லதீபாவின் அப்பா என்னைப் பார்த்துக் கேட்டார்,

"ஏன் தம்பி இப்படிப் பன்னீட்டீங்க...?" அந்தக் குரல் ஜீவன் இல்லாமல், நடுக்கத்துடன் வெளிப்பட்டது...

"தப்பா நினைச்சிக்காதீங்க, நீங்க நினைக்கிற மாதரி நான் உங்க பொண்ண கை வீட்டுட மாட்டேன்"

"ஐயோ!... எந்த நேரத்துல என்ன பேசுறீங்க தம்பி? உங்க சந்தோசத்துக்காக நானும் என் சின்னப் பொண்ணும் தூக்குல தொங்கணும்னு எதிர் பாக்குறீங்களா?!!!!

அவர் இப்படிக் கேட்டதும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது!

"அவ தான் சின்னப் பொண்ணு, விவரம் தெரியாதவ! அவளைப் போயி இப்படி ஏமாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என்று அழத்தொடங்கினார்...

"ஐயா நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க...."

"அடுத்தவங்க குடியைக் கெடுத்து நீங்க வாழணும்னு நினைக்கிறீங்களே... உங்களுக்கெல்லாம் அந்தக் கடவுள் தான் கூலிக் கொடுக்கணும்!"

அவர் இப்படிப் பேசியதும் எனக்கு ஆத்திரம் பொங்கியது...

"இத பாருங்க! மரியாதையா பேசுங்க!... லதீபாவோட அப்பாங்கரதால தான் நான் உங்க கிட்ட இவ்வளவு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்"

"இல்லன்னா என்னையா பண்ணுவே... அடிப்பியா? அடி... கொல்லு... உன் கையாலயே எங்க எல்லாரையும் கொன்னு புதைச்சிடு...! அப்ப நீ சந்தோஷமா இருப்பியா? இருக்க மாட்டே! சத்தியமா நீ சந்தோஷமா இருக்க மாட்டே!!" என்று அவர் ஒப்பாரி வைக்கும் தோரணையில் சத்தம் போடத் தொடங்கினார்...

"இத பாருங்க.. சொன்னாக் கேளுங்க. நான் உங்க பொண்ணை ஏமாத்திட மாட்டேன். இப்படி சத்தம் போட்டீங்கன்னா... யாராவது பார்த்தா அசிங்கமாயிடும். நாங்கல்லாம் கவுரவமான குடும்பம். சொன்னாப் புரிஞ்சிகங்க"

"ஓ!... யாராவது பாத்தாலே உனக்கு அசிங்க வந்துடும்னு இப்படிப் பயப்படுரியே.... அப்ப என்னை நடு ரோட்டுல நீக்க வச்சி, எல்லாரு செருப்பால அடிக்கிற மாதரி கேள்வி கேப்பாங்களே... அது எனக்கு அசிங்கம் இல்லையா? நான் மட்டும் அந்த அசிங்கத்தோட வாழனும்-னு சொல்லுரியா? இல்ல வாழ்ந்துடுவேண்ணு நினைக்கிரியா?..."

"யோவ்! என்னையா ரொம்ப பேசிக்கிட்டு இருக்கே...! காதலிச்சி கல்யாணம் பன்னிக்கறது அவ்வளவு பெரிய குற்றமாய்யா? எங்க காதலைப் பத்தி உனக்கு என்னையா தெரியும்?... இதுக்கு மேல ஏதாவது மரியாதை இல்லாம பேசினே... கொன்னே போட்டுடுவேன்!" என்று நான் அவரது சட்டையைப் பிடித்து அடிக்க முற்பட்டபோது...

"கீதன்!..." என்று கத்திய லதீபா என்னை கையெடுத்துக் கும்பிட்டு, வேண்டாம் என்பது போல தலயை அசைத்துக் கொண்டு.. தன் தலையில் அடித்துக் கொண்டு அழத்தொடங்கினாள்...

என் அம்மா அவளைப் தடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தார்...

லதீபாவின் அப்பா, ஏதோ பைத்தியம் பிடித்தவர் போல என்னை பார்த்து பேசத் தொடங்கினார்..

"அடிய்யா!... அடி! ஏன் நிறுத்திட்டே...? அடி!.. நான் இங்கருந்து போனா, ஒண்ணு என் பொண்ணோட போவேன்... இல்லன்னா பொணமாத்தான் போவேன்! எனக்கு உசுறு பெரிசு இல்லை... மானம் தான் பெரிசு!"

"இத பாருங்க.. திரும்பத் திரும்ப சொல்லுறேன்... உங்க பொண்ணை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். சாத்தியமா நான் அவளை ராணி மாதரி பாத்துக்குவேன். தயவு செஞ்சி புரிஞ்சுக்கோங்க...

"த்தூ... இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லை?..."

எனக்கு ஆத்திரம் அளவு கடந்தது... "இத பாருங்க, வேண்டாம்..! வயசானவருன்னு கூட பாக்க மாட்டேன்... மரியாதையா...."

"என்னையா மரியாதை? அடுத்தவன் பொண்டாட்டியை ராணி மாதரி பாத்துக்குவேண்ணு சொல்லுரியே... நீயெல்லாம் ஒரு மனுசனா?

"அடுத்தவன் பொண்டாட்டியா....?!?!?!" நான் அப்படியே உறைந்து போனேன்....

""ஏன்... உனக்குத் தெரியாதா?... அதனால தானே இந்தத் திருட்டுக் கல்யாணத்தை நடத்தப் பாக்குரே..."

நான் ஒன்றும் புரியாமல் லதீபாவைப் பார்த்தேன்...

அவள் சுவற்றில் தன் தலையை மோதிக்கொண்டு...

"ஐயோ!.. நான் யாருக்கும் பொண்டாட்டி இல்லை...! நான் யாருக்கும் பொண்டாட்டி இல்லை...!" என்று கதறினாள்.

என் அம்மா எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போய் சிலையாக நின்றார்...

எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது!

லதீபாவின் அப்பாவைப் பார்த்து கேட்டேன். "நீங்க என்ன சொல்லுரீங்கண்ணு எனக்குப் புரியலை?"

"என்னையா...? நாடகம் ஆடுரியா?.. ஒண்ணும் தெரியாத மாதரி வேஷம் போடுரியா?"

அப்போது லதீபா ஓடிவந்து அவரது காலில் விழுந்து அழுதாள்...

"அப்பா! என்னை மன்னிச்சிடுங்க... அவருக்கு எதுவும் தெரியாது!... நான் அவருகிட்ட எதையும் சொல்லல.. சொல்லல! சொல்லல! சொல்..ல..ல..ப்பா...."

"அடிப்பாவி! சொல்லலையா?... எண்டி இப்படிப் பண்ணினே... இந்தத் துணிச்சல் உனக்கு எப்படிடி வந்திச்சி?"

"அப்பா... எனக்கு கீதன் வேணும்பா!.... நான் அவரோட வாழணும்பா... என்னை விட்டுடுங்கப்பா! என்னை விட்..டு..டு..ங்கப்பா....!"

"என்னம்மா சொல்லுறே?... இந்த அப்பாவோட கவுரவம் உனக்கு பெரிசா தெரியலையா?"

"......................"

"உன் தங்கச்சியோட எதிர்காலத்தை நினைச்சிப் பார்க்கலையா...?"

"ஐயோ... அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா! எனக்கு வேற வழி தெரியலைப்பா... தெரியலைப்பா! தெரியலைப்பா! தெரியலைப்பா!" என்று வேக வேகமாக தனது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்...

நான் ஆத்திரத்தோடு கத்தினேன்...

"ஐயோ! முதல்ல ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா!.."

எங்கள் வீடே நிசப்தமானது...

"அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்றீங்க?"

"............................"

"இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?"

"கீதன்!" என்று என் கையைப் பிடித்தாள் லதீபா...

"நீ பேசாதே...! நான் உங்க அப்பாகிட்ட கேக்குறேன்!"

"ஏன் கீதன்... என் கிட்ட பேச மாட்டீங்களா?"

"நீ சொன்னதை நம்பித்தானே நான் கல்யாணம் வரைக்கும் வந்தேன்? இனிமேல நான் உன் பேச்சை நம்பத் தயாரா இல்லை"

"கீதன்.... நான் உங்களோட வாழணும்னுதானே அதை மறைச்சேன்..."

"ஆமா, நீதான் எல்லாத்தையும் மறைச்சிட்டியே..."

"கீதன்!..."

"உங்க அப்பா உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டின்னு சொல்லுராரு ... நீ இல்லைங்கரே.... யாரை ஏமாத்தத் திட்டம் போடுறே... இதுக்காகத்தான் காதலிக்கும் போது, தொடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டியா?"

நான் இப்படிக் கேட்டதும் லதீபா பத்திரக்காளியாக மாறினாள்...

"கீ...தன்!.... என்னைத் தப்பா நினைச்சீங்கன்னா.... அறுத்துகிட்டு செத்துப் போயிடுவேன்!!" என்று தன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டாள்!...

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••18
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:55 am
தொடர்ச்சி-17

"கீ...தன்!.... என்னைத் தப்பா நினைச்சீங்கன்னா.... அறுத்துகிட்டு செத்துப் போயிடுவேன்!!" என்று தன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு சொன்னதும், நாங்கள் அனைவரும் கொஞ்சம் தடுமாறிப் போனோம்...

சுவற்றில் மோதிக் கொண்டு அழுததால், அவள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.!

"ஐயோ லதீபா! ரத்தம் வருதும்மா...!" என்று அவளுடைய அப்பா அவளை நெருங்கினார்...

"கிட்ட வராதீங்க! யாராவது கிட்ட வந்தீங்கன்னா, கண்டிப்பா அறுத்துக்குவேன்!"

"என்ன லதீபா இப்படியெல்லாம் பண்ணுரே, வேண்டாம்மா. கத்தியைக் கீழே போடு!" என்று என் அம்மாவும் அருகில் நெருங்கினார்...

"அத்தை... வேண்டாம்! வராதீங்க!..." மிகவும் ஆக்ரோஷமாக கூறினாள் லதீபா.

ஆனால், நான் அப்போது கொஞ்சம் கொடூரமானவனாகவே நடந்து கொண்டேன்...

ஆம், அவளுக்கு திருமணம் நடந்ததை என்னிடம் மறைத்து விட்டாளே என்று எனக்கு அவள் மீது ஆத்திரம் இருந்தது!

"கீதன்... என்ன கேட்டீங்க?!....."

நான் அவளைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டேன்.

"என்னைப் பாருங்க கீதன்! என்னைப் பார்த்துக் கேளுங்க கீதன்!"

"..................................."

"இப்பப் பார்க்கப் போறீங்களா இல்லையா?..."

நான் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றேன்.

கொஞ்ச நேரத்தில்...

"ஐயோ லதீபா!..." என்று என் அம்மா கூச்சல் போட்டார். கூடவே லதீபாவுடைய அப்பாவின் கூச்சலும் கேட்டது...

நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்...

லதீபா கீழே விழுந்து கிடந்தாள்!

என்னையும் அறியாமல் ஓடிச் சென்று அவளைத் தூக்கினேன்.

"பாவம், சின்னப் பொண்ணுல்ல... தலையில அடிச்சிக் கிட்டு அழுததுல மயக்கம் போட்டு விழுந்துட்டா!" என்று என் அம்மா சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது...

""ஏம்மா... இப்படியெல்லாம் பண்ணுரே..." என்று அவளுடைய அப்பா அழுது புலம்பினார்.

முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைத் தட்டி எழுப்பிய போது, லேசாக அவளுடைய விழிகள் சுழன்றது...

"நீ ஏண்டா அந்தப் பொண்ணைப் பார்த்து அப்படிக் கேட்டே? பாவம் எப்படித் துடிச்சிப் போயிட்டா தெரியுமா? முட்டாப் பயலே!..." என் அம்மா என்னைத் திட்டினார்.

"லதீபா! ஏன் லதீபா இப்படிப் பண்ணினே?" என்றேன் நான்.

லதீபாவின் கண்கள் லேசாக அசைந்தது...

"ஏன் லதீபா என் கிட்ட மறைச்சிட்டே? உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரிஞ்சா, நான் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்னு நினைச்சிட்டியா? என்ன நடந்ததுன்னு என்கிட்ட நீ சொல்லியிருக்கலாமே லதீபா! நான் உன் மனசை மட்டும் தானடி காதலிச்சேன். சொல்லு லதீபா, என்ன நடந்துச்சு?" என்றேன் நான்.

"தம்பீ!.. நீங்க நினைக்கிற மாதரி.... லதீபாவுக்கு இன்னும் கல்யாணம் நடக்கல தம்பீ!" என்றார் லதீபாவின் அப்பா!

நான் அதிர்ச்சியோடு அவரைத் திரும்பிப் பார்த்தேன்...

"கொஞ்சம் இப்படி வாங்க..." என்றார்.

நான் அவரைப் பின் தொடர்ந்தேன்....

லதீபா இன்னும் மயக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...

"ஆமா தம்பி, லதீபாவுக்கு இனிமே தான் கல்யாணம்! அது பிடிக்காம தான் உங்க கூட வந்திருக்கிறாள்..."

இதைக் கேட்டதும் என்னால் எதுவுமே பேச முடியவில்லை!

என் லதீபாவுக்கு, என்னோடு வாழ வேண்டும் என்பதில் தான் எவ்வளவு ஆசைகள்!....

"முதல்ல என்னை மன்னிச்சிடுங்க தம்பி! இதெல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சி தான் நான் உங்க மேல ஆத்திரப் பட்டுட்டேன்.

".................................."

"சத்தியமா சொல்லுறேன் தம்பி, எனக்கு உங்கள் காதலைப் பிரிக்கணும்-னு எண்ணம் இல்லை, உங்களைப் பிடிக்காமலும் இல்லை ஆனா என்னோட சூல்நிலை....."

"..........................."

"அம்மா இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. பாவம்! நான் அவளை சின்ன வயசில இருந்தே கஷ்டப்பட விட்டுட்டேன். எனக்காக அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா... ஆனா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் யாறுக்கிட்டயும் 5 காசு சும்மா வாங்கமாட்டேன். என் பொண்ணுங்களையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். ஆனா என் வீதி! எனக்கு ஒரு பெரிய கடன் சுமையைத் தந்துடுச்சி!..."

ஆம்! நாங்கள் எங்களுடைய முதல் சந்திப்பில் பரிமாறிக் கொண்ட அந்த கடன் பிரச்சினைதான் எங்கள் காதலுக்கு எதிரியாக அமைந்திருக்கிறது! என்று எனக்கு புரியத்தொடங்கியது...

"நான் எனக்காக அந்தக் கடனை வாங்களை தம்பி. இன்னொருத்தனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனா, அவன் கட்டாம தற்கொலைப் பண்ணிக்கிட்டான். அதனால இப்ப அந்தக் கடனை நான் கட்ட வேண்டியதாப் போச்சி. எப்படிடா அந்தக் கடனை அடைக்கப் போறோம்னு நான் புலம்பும் போதெல்லாம், என் பொண்ணுதான் எனக்கு ஆறுதல் சொல்லுவா. ஆறு வயசிலேயே "ஐஸ் குச்சி" வெட்டிக் கொடுத்து சம்பாதிச்சு தருவா! பள்ளிக் கூடம் போயிட்டு வந்தவுடனே எல்லாப் பிள்ளைங்களும் விளையாடப் போவாங்க, ஆனா இவ மட்டும், "வேப்பங் கொட்டையைப்" பொறுக்கி வந்து சேர்த்து வைப்பா!..." அவர் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்...

"................................"

"ரொம்ப கஷ்டப் பட்டுட்டா தம்பி! இப்ப கூட, காலேஜ் விட்டதும் ஏதோ கடையில வேலைக்குப் போறேன்னு சொன்னா, நான் வேண்டாம்னு சொல்லியும் அவ கேக்கல... மாதா மாதம் கரைக்டா பணம் அனுப்பி வச்சிடுவா... இதுல அவளோட தங்கச்சியையும் படிக்க வச்சிக்கிட்டா!... எவ்வளவு பொறுப்பு தெரியுமா என் பொண்ணுக்கு?!" மீண்டும் அவரது கண்கள் கலங்கியது.... துடைத்துக் கொண்டார்!

அவளுடைய இந்தக் குணங்கள் தானே என்னையும் கட்டி போட்டது! என் லதீபா சிறப்பானவள் தான்! நான் அவளுக்காக புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது! அவளுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன்!..

"எல்லா அப்பனுங்களும் தன்னோட பொண்ணுங்களுக்கு சொத்து சேர்த்து வைப்பாங்க. ஆனா நான், என் பொண்ணுங்களுக்கு கடனைத் தான் சேர்த்து வைச்சேன்! இப்ப சொல்லுங்க தம்பி, நான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடம் பார்த்தது தப்பா?"

"....................................."

"சின்ன வயசிலேருந்து கஷ்டப் பட விட்டுட்டோமே, இனிமேலாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சது தப்பா?.."

".................................."

"என்னோட நண்பன் ஒருத்தன், 'உன்னோட கடனை எல்லாம் நானே கட்டிடுறேன்... உன் மகளை என் பையனுக்குத் தருவியான்னு' கேட்டான்! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. உடனே ஒத்துக்கிட்டேன். வசதிக்காக இல்லை தம்பி! என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தான்! அவ்வளவு பெரிய பணக்காரன் வரதட்சிணையே வேண்டாம்னு என் பொன்னைக் கேக்குரான்னா..? அதுக்கு என் குடும்பத்துமேல இருந்த மரியாதை தான் தம்பி காரணம்!"

"..................................."

"என் பொன்னாச்சே... என் பேச்சை மீற மாட்டாள்னு நினைச்சி... அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு நினைச்சி... அவகிட்ட கேக்காமலேயே பேசி முடிச்சி பத்திரிக்கையும் அடிச்சிட்டேன் தம்பி!..."

"......................................"

"சத்தியமா சொல்றேன் தம்பி! என் பொண்ணு உங்களைக் காதலிக்கிறாங்கறது எனக்கு தெரிஞ்சிருந்தா... இதை நான் செஞ்சிருக்கவே மாட்டேன்! "எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்! அவ இனிமேலயும் கஷ்டப்படாம வாழனும்!" அது யாருக்கூட இருந்தா என்ன? இப்படி தான் தம்பி நான் நினைப்பேன்."

"................................."

"ஆனா, இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு கல்யாணம்! அவங்க தட புடல எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இப்பப் போயி என் பொண்ணு ஓடிப் போயிட்டான்னு சொன்னா....? என்னைக் காறித் துப்ப மாட்டாங்க? உங்களை விட அவங்க வசதி கம்மிதான் தம்பி. அதனால நான் ஏதோ பணத்துக்காக என் பொன்னை கூட்டி விட்டுட்டேன்னு என் குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேச மாட்டாங்க...."

"..................................."

புலம்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று என் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதார்...

"தம்பி!... என் குடும்ப மானம் உங்க கையில தான் தம்பி இருக்கு! என் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா என் குடும்ப மானம் சிதைஞ்சி போயிடும் தம்பி!... நீங்க வேணும்னா என்னோட சின்னப் பொன்னைக் கல்யாணம் பன்னிக்கோங்க தம்பி! என் பொன்னை என்கிட்ட திருப்பிக் கொடுத்திடுங்க தம்பி!...."

"...................................."

"என் பொண்ணு, என்னை விட உங்க மேலதான் உசுரையே வச்சிருக்கா,... நீங்க சொன்னா கேப்பா தம்பி!... சொல்லிப் புரிய வைங்க தம்பி! விட்டுடுங்க தம்பி!... என் பொன்னை என்கூட அனுப்பி வச்சிடுங்க தம்பி! உங்களுக்குப் புண்ணியமாப் போயிடும் தம்பி! இல்லைன்னா நானும் என் சின்னப் பொண்ணும் தற்கொலை செஞ்சிக்கரதை விட வேற வழியே இல்லை தம்பி!..."

"............................"

"இங்க மாதரி எங்க ஊரு இல்லை தம்பி.... இங்கே சைதாபேட்டையில் இருந்து கோடம்பாக்கம் போயிட்டா நம்மளை யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா, நாங்க இருக்குறது கிராமம் தம்பி! சாகுற வரைக்கும் சொல்லிக் காட்டிக் கிட்டே இருப்பானுங்க... அதை என்னால தாங்கிக்க முடியாது தம்பி!"

நான் எதுவுமே பேசாமல் இருப்பதைப் பார்த்ததும், அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்...

"என்ன தம்பி!.... எதுவுமே பேசாம இருக்குறீங்க?... ஓ! உங்களுக்கு காதல் தான் பெரிசு இல்லை! புரியுது தம்பி... உங்களால காதல்ங்கர எல்லையை விட்டு வரமுடியாது! ஆமா, என் பொண்ணே கழுத்துல கத்தியை வச்சிக்கிட்டாளே... நான் உங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?"

"................................."

"பரவாயில்லை தம்பி! நான் போறேன்! இன்னும் ரெண்டு நாள் இருக்கு கல்யாணத்துக்கு! "அதுக்குள்ள என் பொண்ணு வந்தா, அந்தக் கல்யாணம் நடக்கும்! இல்லைன்னா...." அவர் இதைக் கொஞ்சம் அழுத்தமாகவே கூறினார்....

"........................."

"நான் கெளம்புறேன் தம்பி!" என்று கொஞ்ச தூரம் சென்றவர் திரும்பி வந்தார்...

"என் பொண்ணை சந்தோஷமா பாத்துக்கோங்க தம்பி! விளையாட்டுப் பொண்ணு!" என்று கூறிய போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...

".................................."

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, என் அம்மாவிடமும் சொல்லிவிட்டு, லதீபாவையும் பார்த்து, அவள் நெற்றியில் வருடிக் கொடுத்து விட்டு எழுந்து சென்றார்...

லதீபாவின் மயக்கம் தெளிந்திருந்தது. லதீபா அவரது கைகளைப் பிடித்துக் கும்பிட்டாள்... அவர் லதீபாவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு... பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டார்...

இப்போது, லதீபாவின் பார்வை என் மீது திரும்பியது!!

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••19
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 2:57 am
தொடர்ச்சி-18

லதீபாவின் பார்வை என் மீது திரும்பியது!

என்னால் அவள் கண்களை சந்திக்க முடியவில்லை. நான் அங்கிருந்து நகர்ந்தேன்...

சிறிது நேரத்திற்குப் பிறகு என் அம்மா என்னிடம் வந்து,

"என்னப்பா பண்ணப் போறே?"

நான் என் அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன்.

"என்னடா அழுதுகிட்டு இருக்கே... உனக்கு ஏண்டா இப்படி ஒரு சோதனை வரணும்?" என்று என் அம்மாவும் கண்ணீர் வடிக்க...

"அம்மா சத்தம் போடாதேம்மா, லதீபா வந்திடப் போரா.."

"அப்படின்னா, லதீபாவை நீ அனுப்பி வச்சிடப் போறியா?!" என் அம்மா என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக் கேட்டார்..

"ஆமாம்மா!"

"டேய், எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்குடா! அவ இப்பவே கத்திய வச்சிக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு இருக்கா. இதை எப்படிடா அவ தாங்கிக்குவா!?..."

"நான் பேசிக்கறேன்மா!" என்று சொன்னபோது,

"என்ன பேசப் போறீங்க கீதன்!" என்று கேட்டுக் கொண்டே லதீபா அங்கு வந்தாள்!

"வா லதீபா! இப்ப... உடம்பு எப்படிம்மா இருக்கு?" என் அம்மா பதட்டத்துடன் லதீபாவை பார்த்துக் கேட்க...

"சாகப் போற உடம்பு தானே அத்தை, எப்படி இருந்தா என்ன?" என்றாள் அழுத்தமாக.

"ஏம்மா.. இப்படியெல்லாம் பேசுறே...?" என்றார் என் அம்மா.

"அம்மா! நீ கொஞ்சம் உள்ள போம்மா! நான் பார்த்துக்கறேன்." என்று என் அம்மாவை நான் அனுப்பி வைத்தேன்.

"கோவமா எதுவும் பேசாதேப்பா..." என்று சொல்லிக் கொண்டே என் அம்மா அங்கிருந்து வெளியேறினார்...

லதீபா அதே ஆத்திரத்துடன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!...

"இந்த இடத்தில் நடந்த உரையாடலை சில காரணங்களுக்காக இப்போது நான் எழுதப் போவதில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு நாள் உங்கள் பார்வைக்கு வரும். ஆனாலும் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு புரியும் என்றே நம்புகின்றேன்..."
-"அந்தப்பார்வை"

சிறிது நேரத்திற்குப் பிறகு நான் அவளுக்கு எல்லா விஷயங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூறிப் புரிய வைத்தேன். அவளும் வேண்டா வெறுப்பாகப் புரிந்து கொண்டாலும்... என்னை விட்டுப் பிரிய அவள் சம்மதிக்கவே இல்லை! அதனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல், நாங்கள் இருவருமே இறந்து விடலாம் என்று முடிவெடுத்தோம்!

லதீபா என்னோடு கிளம்பியதை ஆச்சரியத்தோடு பார்த்த என் அம்மா, லதீபாவை இறக்கத்தோடு பார்த்தார்!

"நாங்க போறோம் அத்தை!"

"போயிட்டு வறேன்னு சொல்லும்மா.."

லதீபா தனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டதை நான் கவனித்தேன்.

நான் என் அம்மாவிடம், "லதீபாவை ஊருக்கு அனுப்பிவிட்டு வருகிறேன்" என்று பொய் சொல்லிவிட்டு நாங்கள் மெரீனா கடற்கரைக்கு சென்றோம்...!


"வாங்க தலைவா! கொஞ்ச நாளா உங்களைக் காணலையே... என்ன.. ஸ்பெஷல் டூரா!?" -என்று கேட்ட அந்த சுண்டல் காரனைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம் அதிகமானது...

"ஏய்! யாராறு எங்கே போறாங்கன்னு கவனிக்கறது தான் உன் வேலையா? உனக்கு இது தான் கடைசி ! இனிமேல எங்களை பின் தொடர்ந்து வந்தேன்னா... நான் மனுஷனா இருக்க மாட்டேன்!" என்று ஆத்திரத்தில் அவனிடன் சத்தம் போட்டேன்.

"ஏன் கீதன் அவன்கிட்ட போயி சத்தம் போடுறீங்க... நீ போப்பா...!"

"இப்ப நான் என்னக்கா தப்பா கேட்டேன்? கொஞ்ச நாளா வரலையேன்னு தானே கேட்டேன். அதுக்குப் போயி இப்படிக் கோவப்படுராறு... வேண்டாம் சார்!.. ரொம்பக் கோவப்படாதீங்க... இந்தக் கோபமே உங்களுக்கு ஒரு நாள் எதிரியாகிடும்!!"

"நீ போப்பா! சுண்டல் தானே?... இன்னைக்கு நானே உன்னைக் கூப்பிட்டு உன்கிட்ட சுண்டல் வாங்கிக்கறேன். நீ அப்பாரமா வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள் லதீபா.

அவன் என்னை ஒரு மாதரியாகப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்!..

மதியம் 2.00 மணி!

சிறிது நேரத்திற்குப் பிறகு, லதீபா கடற்கரை மணலில் நடக்க வேண்டும் என்று கூறினாள்... நாங்கள் இருவரும் அங்கிருந்து எழுந்து சென்றோம்...

மெரீனா கடற்கரையில் அனைவரும் உற்சாகத்தோடு வாழ்க்கையை அனுபவித்து வலம் வந்து கொண்டிருந்தனர்!

அவர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை தொலைத்து விடுவதற்காக மன உலைச்சலோடு நாங்களும் வலம் வந்தோம்!

சிறிது நேரத்திற்குப் பிறகு கடற்கரையை ஒட்டிய ஒரு ஓரத்தில் இருவரும் அமர்ந்தோம்...!

நான் கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...!

லதீபா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்...!

ஆனால், எப்போதும் போல அந்த சுண்டல்காரன் எங்கள் இருவரையுமே கவனித்துக் கொண்டிருந்தான் என்பது எங்களுக்கு பின்பு தான் தெரிந்தது!!

இதோ...

எனக்கு நாக்கு வறண்டு போய் விட்டது...!

மூச்சும், திணரத் தொடங்கி விட்டது...!

இதயம் இயல்புக்கு மீறித் துடித்துக் கொண்டிருக்கிறது!

ஆம்! என் மரணமும் என்னை நெருங்கி விட்டது என்றே நினைக்கின்றேன்...!

இன்று நான் லதீபாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருப்பதற்கு அந்த சுண்டல்காரன் தான் காரணம்!!

அவன் மட்டும் இல்லையென்றால்...

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
Admin•••20
avatar
எழுத்ததிகாரன்
21/5/2014, 3:02 am
தொடர்ச்சி-19

நான் கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

"ம்கும்... இந்தக் கடல் தானே இனி நாங்கள் வாழப் போகும் இல்லம்!?"

கொஞ்ச நேரம் கழித்து, லதீபாவைப் பார்த்தேன் அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

இறக்கப் போகின்றோம் என்ற நடுக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், "இறப்பதற்கும் இந்த அழகு தேவதை என்னுடன் சேர்ந்து வருகிறாளே.." என்று நினைக்கும் போது எனக்கு ஆறுதலாகவே இருந்தது...

ஏனோ தெரியவில்லை, அந்த நேரத்தில் மரணத்தின் கொடூர நிமிடங்கள் எனக்கு இனிக்கவே செய்தது!...

பல காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள துணிந்ததற்கான காரணமும் எனக்குப் புரிந்தது!...

துயரங்களும் ரசிக்கப்படும் நிமிடங்கள் அது தான்! -என்பதை தற்காலிகமாக நான் உணர்ந்தேன்!

"வாழ்க்கையில் ஒன்று சேராதவர்களை சந்திக்க வைத்து, ஏன் இந்தக் கடவுள் இப்படி விளையாட வேண்டும்?" என்று வேதனைப் பட்ட நான், அந்த வேதனைக்குள் ரத்தக் களறியாய் ஒரு சுகம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட போது, கேள்விக் குறிகள் எல்லாம் ஆச்சரியக் குறிகளாகிப் போனது!!

எவன் சொன்னது மரணம் கொடூரமானதென்று?

இறந்தவர்கள் எழுந்து வந்து சொன்னார்களா? இல்லை காதலில் தோற்றுப் போனவர்கள் தான் சொன்னார்களா?

அல்லது அப்படி சொல்பவர்களுக்கெல்லாம் காதல் என்றால் என்னவென்று தான் தெரியுமா?

இல்லை!...

இல்லவே இல்லை!!

"தோல்வியால் மரணத்தைத் தொடும் அந்தத் தருணங்கள் ரத்தக் களரியான ஒரு சுகம்"(?) என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்!!

ஆம்! அந்த சுகம், எச்சில் படாத எங்கள் காதலுக்கு மட்டும் தான் தெரியும்.

என்னையே பார்த்துக் கொண்டிருந்த லதீபாவின் கண்களை நானும் பார்த்தேன்... "அந்தப்பார்வை"யிலும் அதே எதிர்பார்ப்புகள்... ஆம்! எப்போது இறக்கப் போகிறோம் என்ற அதே எதிர்பார்ப்புகள்!!

விரல் படாத எங்கள் காதலுக்காக உயிரையும் விடத் தயாராகிக் கொண்டிருந்தோம் நாங்கள்...

மாலை 4 மணி!

ன்னையே பார்த்துக் கொண்டிருந்த லதீபாவிடம்...

"என்ன லதீபா அப்படி பாக்குறே?" என்றேன்.

"ஒன்னும் இல்லை கீதன்"

"உங்க அப்பாகிட்ட பேசணும்னு தோணுதா?"

"ம்..கூம்... இல்ல!"

"வேணும்னா... உன் தங்கச்சி கிட்ட பேசுறியா?"

"ம்..கூம்... வேண்டாம்!"

"உன் தம்பி கிட்ட...?"

லதீபா கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டாள்....

"ஏன் கீதன்?.... உங்களுக்கு யாருகிட்டயாவது பேசணும்னு தோணுதா?"

"ஆமா லதீபா! அம்மாகிட்ட பேசணும்! அவங்களுக்கு என்னை விட்டா வேற யாருமே இல்லை!.."

"ம்கும்!" -லதீபா அலட்சியமாக சிரித்துக் கொண்டாள்.

"என்ன லதீபா? ஏன் இப்படி சிரிக்கிறே?"

"ஒன்னும் இல்லை கீதன், நீங்க பேசுங்க..!"

"ஏன்... உனக்கு யாருகிட்டயும் பேசணும்னு தோணலையா?"

இப்போதும் லதீபா என்னை ஆழமாக பார்த்து விட்டு...

"எனக்கு தான் அம்மா இல்லையே கீதன்!" -என்றாள்.

அவள் சொன்ன போது லதீபாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...

"..............." என்னால் பதில் பேச முடியவில்லை.

"அம்மா இருந்திருந்தா, என்னையும் எங்க அம்மா புரிஞ்சிட்டு இருந்திருப்பாங்க இல்ல?"

அதன் பிறகு எனக்கும் என் அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை!

காரணம், என் லதீபாவைத் தனிமைப்படுத்த நான் விரும்பவில்லை! எனவே என்னைத் தனிமைப்படுத்தி அவளுடன் இணைத்துக் கொண்டேன்!

".........................."

"..........................."

அதன் பிறகு இருவரும் மௌனமானோம்.

சூரியன் தற்கொலை செய்து கொண்டு, இந்த உலகத்தை இருளாக்கி விட நினைத்து தன்னை கடலுக்குள் மூழ்கடித்துக் கொண்டிருந்தது!...

இன்னும் சில மணி நேரங்களின் நாங்களும்... இதே கடலுக்குள்....

என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, லதீபா அவனை நோக்கிக் கை காட்டினாள்...

சுண்டல்காரன்!

ஆம், அப்போது தான் நானும் கவனித்தேன். அந்த சுண்டல்காரன் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தான்... அதோடு, யாரோ ஒருவனிடம் எங்களைக் கை காட்டி ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தான்!

லதீபா அவனைக் கை காட்டி அழைத்தாள்...

"ஏன் லதீபா அவனைக் கூப்பிடுரே?" நான் ஆத்திரப்பட்டேன்.

"பரவாயில்லை விடுங்க கீதன். சாகத்தானே போறோம். கடைசியா அவன் விரும்பின மாதரி ஒரு தடவை நாமலே அவன்கிட்ட சுண்டல் வாங்கி சாப்பிட்டுட்டு செத்துப் போவோமே... அவனாவது சந்தோசமா இருக்கட்டும்!" என்றாள்.

எனக்கும் அது சரி என்று பட்டது...

அந்த சுண்டல்காரன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்....

ஆனால், அவனால் எல்லாமே மாறிப் போகும் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை.!!

என்னை மன்னித்துவிடு லதீபா!!

தொடரும்...

Message reputation : 100% (5 votes)
நடத்துனர்•••21
avatar
Sekaran Mathan
21/5/2014, 6:34 pm
மனுஷன் என்னத்தை தடவி எழுதுராருன்னே தெரியலை. இவரோட எழுத்துக்களை மட்டும் எத்தனை முறை படித்தாலும் சலிக்கவே மாட்டேங்குது. இந்தக் கதையோட ஒரு பகுதியைப் படிச்சிட்டா மொத்தக் கதையையும் படிச்சே ஆகணும்னு தோணுது.....

Message reputation : 50% (2 votes)
•••22
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

என்னைத் தாலாட்ட வருவாளா? - Sn.Kuyilan

From எழுத்ததிகாரன்

Topic ID: 606

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...