Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
26/8/2012, 2:15 am
காதல்.. காமம்.. கல்யாணம்.. பணம்... கல்யாண ராணியின் லீலைகள் 25-sag10
சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்களை மட்டுமின்றி பெண்களிடமும் நட்பாகப் பழகி பல லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருப்பதாகவும் சகானா மீது புகார்கள் குவிந்துள்ளன.

இளைஞர்களைத் தேடித் தேடிப் பிடித்து காதலிப்பதாகக் கூறி கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான் சகானாவின் பாணி. இளைஞர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளை சரளமாக உதிர்ப்பது சகானாவுக்கு கை வந்த கலையாக இருந்திருக்கிறது. பொதுவாக இளைஞர்கள் தம்மைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காக தம்மை அனாதை என்றும் கோடீஸ்வரியான தம்மை உறவினர்கள் கொல்ல முயற்சிக்கின்றனர் என்றும் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். தாம் வீழ்த்தும் வலையில் விழும் இளைஞர்களுக்கு செல்போன் நம்பரை தாரளமாக கொடுத்து மனம்கவரும் வகையில் பேசுவதையும் ஒரு யுக்தியாக வைத்திருந்திருக்கிறார்.

சரி திருமணத்துக்குப் பிறகு என்ன செய்திருக்கிறார்? 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்திருந்தாலும் எந்த ஒரு கணவரோடும் வெளியில் ஒன்றாக சுற்றியதே கிடையாதாம்.. இதற்குக் காரணமாக தமக்கு சாபம் இருக்கிறது என்று சாக்கு போக்கைக் கூறியிருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு பணம் சுருட்டல் என்ற இலக்கை அதிரடியாக ஆரம்பித்துவிடுவாராம்.

இதேபோல் பல பெண்களிடமும் கூட நெருங்கிப் பழகி பல லட்சத்தை சுருட்டிக் கொண்டதாகவும் சகானா மீது புகார்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன.

காதல்.. காமம்... கல்யாணம்..பணம் என்ற லட்சியத்துடன் பல இளைஞர்களை வசீகரித்து வளைத்திருக்கும் சகானா மீது கொலை வழக்கு ஒன்றையும் கேரளப் போலீசார் பதிவு செய்திருக்கின்றனர். சகானா எப்போது சிக்குவார்? இன்னும் என்ன என்ன உண்மைகள் வருமோ?

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
26/8/2012, 2:19 am
சென்னை: பல இளைஞர்களை காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கேரளவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.சரவணன், அடையாறை சேர்ந்த ஏ.சரவணன், தியாகராய நகரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அதில், பெண் ஒருவர் தங்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளனர்.

இவர்கள் 3 பேரிடமும் ஒரு பெண் முதலில் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் நேரிலும் பலமுறை சந்தித்துள்ளார். செக்ஸ் வலையிலும் வீழ்த்தியதோடு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். சொந்த ஊரான திருவனந்தபுரம் போக வேண்டும், வீட்டில் பணப் பிரச்சனை என்று காரணம் கூறி அவ்வப்போது பணமும் வசூலித்துள்ளார்.

மலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ள அந்தப் பெண்ணை இவர்கள் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அதையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் பலரும் அந்தப் பெண்ணிடம் மோசம் போய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணிடம் மேலும் யாரும் மோசம் போகாமல் இருக்கவும், ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதற்காகவும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.

Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
26/8/2012, 10:19 pm
சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்த கேரள அழகி சகானாவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் சகானா. அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பண்ம் ஆகிவயற்றை பறித்து மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளிச்சத்திற்கு வந்தது.
முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் சகானா தங்களை திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அப்போது அவர்கள் தங்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆதாராமாகக் காட்டினர்.

அவர்கள் தவிர திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாறைச் சேர்ந்த மற்றும் ஒரு சரவணன் ஆகியோரும் சகானாவிடம் ஏமாந்தவர்களில் அடக்கம். சகானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சகானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களின் புகார்கள் அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சகானாவின் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகானா கடைசியாகப் பயன்படுத்திய 2 எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சகானாவின் எண்ணைத் தொடர்பு கொண்டபோது அவர் வெளிமாநிலத்தில் இருந்தது தெரிய வந்தது. அதன் பிறகு அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

சகானாவின் கணவன்மார்களை விட்டு அவரைத் தொடர்பு கொண்டு அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
26/8/2012, 11:22 pm
சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத், 25. இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.

யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் "டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் விவரம்:

வழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தனர். மூன்று வாலிபர்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, அடையாறு உதவி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போரூரை சேர்ந்த மணிகண்டன், 28, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, 28, ஆகியோர் திருமண போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்துடன் வந்தனர். அவர்களையும் செகாநாத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.
"நான் அவள் இல்லை':

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் அவள் இல்லை' என மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.

ஏமாந்த கால்பந்து வீரர்:

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், "உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்' எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவ

உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன். நான் குடியிருந்த தெருவிற்கு அருகேயுள்ள தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.அவருக்கும், செகாநாத்துக்கும் கடந்த 2006 ல் திருமணம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சுரேஷ், புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த செகாநாத், "எனது கணவர் பிரசன்னா தான். சுரேஷ் என்பவரை யாரென்றே தெரியாது' எனக்கூறினார். அதிர்ச்சியடைந்த சுரேஷ், செகாநாத்திடம், "நமக்குத் திருமணம் நடந்த பிறகு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசித்ததை மறந்து விட்டாயா. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டும் வரை குடிசை வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் நம் திருமண போட்டோக்கள் எரிந்து விட்டன' என கூறினார்.அப்போது மூன்று பேரிடமும் எழுதி வாங்கிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், செகாநாத்தை எச்சரித்து அனுப்பினர். வீட்டில் இருக்க முடியாது என கூறி வெளியேறிய செகாநாத், மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் வந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என, கூறினார்.செகாநாத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது தான், அவருக்குப் பல வாலிபர்களுடன் திருமணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அவரை உண்மையாகக் காதலித்த என்னை ஏமாற்றி விட்டார். அவருக்காக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இனிமேல், அவர் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். செகாநாத் மீது திருவொற்றியூர், புளியந்தோப்பு, வேப்பேரி, வேளச்சேரி உட்பட சென்னை நகரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்காது.இவ்வாறு, பிரசன்னா கண் கலங்கினார்.

பார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:

திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், "வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.

கமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா?

சென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் போலீசார், "அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

•••5
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

காதல்.. காமம்.. கல்யாணம்.. பணம்... கல்யாண ராணியின் லீலைகள்

From எழுத்ததிகாரன்

Topic ID: 354

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...