நீங்க மனசு வச்சா ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தை காப்பாத்தலாம்!

avatar

நீங்க மனசு வச்சா ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தை காப்பாத்தலாம்! 25-thi10
சென்னை: மிகக் கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட பத்திரிகையாளர் திரைநீதி செல்வத்தின் மருமகனின் உயிரைக் காக்க, நல்ல உள்ளங்களிடமிருந்து உதவியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'செய்தி' பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் திரைநீதி செல்வம். இனக்கலவரத்திற்கு பின் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர், இங்கு திரைப்பட செய்தி தொடர்பாளராகவும், மனோரமா போன்ற நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார். விஜயகாந்த் படங்களில் கூட பணியாற்றியுள்ளார்.

நல்லமுறையில் நகர்ந்து கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீர் புயல். அவரது மகள் தாரணியின் கணவர் எஸ்.சீனிவாசன் (வயது 48) திடீரென கொடிய புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தன்னாலான முயற்சியால் சுமார் 2 லட்சம் வரை செலவழித்துள்ள அவர் இன்று மிக மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

சீனிவாசனுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர் கீமோ தெரபி சிகிச்சை அளித்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை. ஒவ்வொருமுறை கீமோ தெரபி செய்யும் போதும் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கஷ்டத்தால், சீனிவாசன் மகனின் கல்லூரி படிப்பே முடங்கும் பரிதாபம்.

எனவே அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் கீழ்காணும் மருத்துவமனை முகவரிக்கே தங்களின் உதவியை காசோலை மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அளிக்கலாம்.
நீங்க மனசு வச்சா ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தை காப்பாத்தலாம்! Thirai10
தற்போது அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.சீனிவாசன். அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் மருத்துவமனைக்கு நேரடியாகவோ சென்றோ, அல்லது வங்கி மூலமோ தங்கள் உதவியை அளிக்கலாம்.

S.SRINIVASAN
CREDIT OF S/B AC OF CANCER INSTITUTE (WIA) A/C NO. 1
ANDRA BANK CI (WIA) EXTN.COUNTER
18, SARDAR PATEL ROAD, CHENNAI 600036
mobile number- 09884054756 / 09381802748

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES