ஊடக நண்பர்களே உண்மையுடன் பேசுங்கள்!!

avatar

தற்போது ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பலரும் உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மன்ப்பூர்வமான நன்றிகள்...

ஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும்? அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன? என்று சில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.

மேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள்? இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா? என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....

உதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன? ஒட்டாமல் வழங்கினால் என்ன? ஆபத்து நேரங்களில் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும்? இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள்? இதில் என்ன தவறு இருக்கிறது? உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் விளம்பரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா?... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா?

அவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே? சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா? அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும்? அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்?...

எனவே  அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களே பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...

எனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்!!

- எழுத்ததிகாரன்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES