Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
29/9/2018, 1:47 am
● CONTROL+ALT+DELETE

○ என்ன இது?

● சட்டப் புத்தகம்..!

○ தூக்கி உள்ள வைக்கப் போறோம் பாரேன்...

● மறுபடியும் CONTROL+ALT+DELETE

○ இது என்ன?

● சிறைச்சாலை.!

○ பயபுள்ள... பயப்படவே மாட்டியா?...

● CONTROL+SHIFT+S

○ இது என்ன?

● Save New Location

○ புரியலையே...

● சட்டப் புத்தகத்தை மொத்தமா மாத்தி எழுத புதுசா குழு அமைக்கப் போறேன்...

○ எதுக்கு?

● இது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உருவானது. மக்களாட்சிக்கு முறனாக இருக்கிறது...

○ யார் சொன்னது?

● சுப்ரீம்ஸ்டார் நீதிபதி...

○ என்னது சுப்ரீம் ஸ்டாரா?

● சுப்ரீம் கோர்ட்டுங்க.... டைப் பண்ணும்போது அதுவே இப்படி ஆட்டோவுல வந்துடுச்சி...

○ சரி இதெல்லாம் எப்போ செய்யிறது?

● ஆட்சிக்கு வந்துதான்

○ அது எப்போ?


● கட்சி ஆரம்பிச்சுதான்

○ தலையெல்லாம் நரைச்சு போச்சு... முடியெல்லாம் கொட்டிப் போச்சு. இனிமேல் கட்சி ஆரம்பிச்சு  ஆட்சிக்கு வந்து, சட்டப் புத்தகத்தை பார்த்து படிச்சு திருத்தி.... சரி சரி..

● ஏன் முடியாதா?

○ முடியும் ஆனா யாரும் ஒத்துக்க மாட்டாங்க.

● நான் கட்சி ஆரம்பிக்கறதையா?

○ கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா சட்டப் புத்தகத்தை மாத்தி எழுத ஒத்துக்க மாட்டாங்க.

● ஏன்?

○ அதை வச்சுதாங்க அரசியலே நடக்குது. அதை மாத்த சொன்னா எப்பூடி?

● நான் மாத்தி காட்டிட்டா என்ன பண்ணுவே.

○ நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனால் சிலபேரு ஜாதிக் கலவரத்தை தூண்டி விட்டுடுவாங்க...

● ஜாதிக் கலவரத்துக்கும் சட்டப் புத்தகத்துக்கும் என்ன சம்மந்தம்?...

○ மக்கள் தொகைதான் சம்மந்தம்...

● புரியவில்லையே...

○ சட்டப் புத்தகத்தை மாத்தனும்னு சட்டசபையில குரல் கொடுத்து பாருங்க... அப்போ புரியும்...

● சரி கட்சி ஆரம்பிச்சிட்டு, குழு அமைச்சு காட்டுறேன்...

○ I AM WAITING...

Message reputation : 100% (3 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

Control + Alt + Delete = சட்டப் புத்தகம்

From எழுத்ததிகாரன்

Topic ID: 1017

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...