தகாத உறவாம் ஆனால் தவறில்லையாம்... உச்சநீதி மன்றத்தின் தவறு!!!

avatar

அம்மாவை இழந்த மகனிடம் சென்று, என்னை உன் தாயாக நினைத்துக்கொள் என்று ஒரு பெண் சொல்ல முடியும்.

அப்பாவை இழந்த மகளிடம் சென்று, என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் என்று ஒரு ஆண் சொல்ல முடியும்.

அண்ணன், தம்பி, தங்கை என்று எந்த உறவை இழந்தாலும் மாற்று உறவாக ஒருவரை காட்டி சமாதானப்படுத்த முடியும். ஆனால் கணவனோ, மனைவியோ இழந்தோரிடம் சென்று "என்னை உன் தாரமாக நினைத்து கொள்" என்று ஆறுதல் கூட சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது தகாத உறவு என்று சொல்லி நெறிப்படுத்தியது நமது சிலப்பதிகாரம்.

கணவன் இறந்த பிறகு கூட இன்னொரு நபரை சேர்வது தவறு என்று வாழ்ந்த என் தமிழ் மண்ணில் கணவன் இருக்கும் போதே இன்னொரு ஆணுடன் பழகலாம் என்று பகிரங்கமாக தீர்ப்பு சொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?...

"கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று இணை அடி தொழுது வீழ்ந்தனள் மடமொழி."
- #சிலப்பதிகாரம்.

☆☆☆ கட்டுப்படுத்தத்தான் நீதிமன்றம் தேவையே தவிர கட்டவிழ்த்து விடுவதற்கு தேவையில்லை. இழுத்து மூடிவிட்டு போங்கய்யா... ☆☆☆

- எழுத்ததிகாரன்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES